Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

12/05/2012

காஷ்மீர் பயணம்.

டில்லியிலிருந்து ஒன்றரைமணி நேர பயணம் ஸ்ரீநகர் .
அழகானஒரு மலைபாங்கான பிரதேசம் காஷ்மீர்..அதை நீண்ட நாட்களாக அந்த அளவு பயம்ஆனாலும் நமது நாட்டின் அழகை வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க ஆசை..அதனால் இந்த பயணம். ஒரு பயத்துடன் இருந்தோம். பார்க்க ஆசையாக இருந்ததால் இந்த முறை காஷ்மீர் பயணம் வாய்த்தது. ஆனால் மனசு முழுக்க பயம். திரும்ப வருவோமா என்றே தெரியவில்லை கொஞ்சம் இயல்பு வாழ்க்கை.திரும்ப ஆரம்பிக்கிறது. கஷ்மீரத்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்களுக்கு தெரிகிறது சுற்றுலா தான் அவர்களின் வாழ்கையின் ஆதாரம் என்று அதனால் இப்போது எல்லோரும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. அவர்கள் இழந்தது ஏராளமான உயிர்கள், அடிக்கடி மூடப்படும் கல்வி சாலைகள் ,கல்லூரிகள் அதனால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட துர்பாக்கியம்.. பாவப்பட்ட மக்களின் கண்களில் எதிர்காலம் கண்களில் கேள்வி குறியோடு
.ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு
.முதலில் நுழையும் முன்பே கார், மற்றும் நம்மையும் முதலில் சோதனை செய்கிறார்கள். அந்த வாயில் கடந்து சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் தள்ளி விமான நிலையம் இருக்கிறது. அங்கு சென்றவுடன் உள்ளே ஒரு பேக்கேஜ் எக்ஸ்ரே மிஷின் முடிந்த வுடன் பேக்கேஞ் செக்கிங் செய்யவேண்டும். ஹேண்பாக்கேஜ் முடிந்த உடன் நம்மையும் சோதனை செய்கிறார்கள். அது முடிந்த பின் பாக்கேஜ் செக்கிங் செய்து விட்டு பாக்கேஜில் அடையாளம் குறிப்பிடபடுகிறது. அந்த அடையாளம் குறிப்பிடபட்ட பாக்கேஜை மட்டும் தான் விமானத்தில் ஏற்றபடும். பயணியும் பயணம் செய்கிறார என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள படுகிறது. ஒரு வழியாக எல்லாம் முடிந்த்து என்று நடக்க துவங்கிய பொது விமானதுக்கு சற்று அருகில் ஒரு தடுபில் திரும்ப பயணிகளையும், ஹாண்ட் பேகேஜையும் சோதனை செய்கிறார்கள் .இத்தனை சோதனைகள் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அசம்பாவிதங்கள் இருக்கிறது.
நாங்கள்போயிருந்த சமயம் ஒரே வெய்யில் தாங்க முடியவில்லை. ஊரின் பெரிய பாதி தால் லேக்தான் தனது அழகால் ஆக்ரமித்து கொண்டிருக்கிறது. அதில் காஷ்மீருக்கே உரிய படகு வீடுகள். எல்லாவற்றிற்கும் அழகாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. படகு வீடுகளுக்கு ஷிகாரா என்று பெயர். அங்கு கூட நாம் நமது தேவைகேற்ப தங்கலாம். படகிலேயே எல்லா வசதியும் இருக்கிறது. காஷ்மீர மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்கிறது அவர்களின் படகு வீடு. நாம் படகில் செல்லூம்போது பக்கத்திலேயே மற்றொரு படகில் வந்து வியாபாரம் செய்கிறார்கள்.
ஸ்ரீ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரு மலையில் சிவன் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. 2200 முன் அசோக சக்கர்வர்த்தியின் மகன் ஜலுக்கா இந்த கோவிலை கட்டியதாக சொல்கிறார்கள். இந்த கோவிலில் இருந்து தால் ஏரியின் முழு அழகையும் பார்க்கலாம். இந்த கோவிலில் பகவத்பாதர் ஆதிசங்கரர் சில நாட்கள் வந்து தியானத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் உள்ளது. 273 படிகளை கொண்ட.இக் கோவிலில் சிவ பெருமான் சன்னிதி உள்ளது. இந்த கோவிலை இப்போது சுலைமான் மலை என்று கூறுகிறார்கள்.



"ஷிகாரா - படகு வீடு”

குல் மார்க் ஒரு அழகான இயற்கை வளங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் இடம். நாங்கள் குல்மார்க் போக காரில் ஏறிய போது ஒரு முகம் தெரியாத நபர் எங்களை பார்த்துவிட்டு ஸ்வெட்டர் ஏதும் எடுத்துகொள்ளவில்லையா அங்கு குளிரும் எந்த சமயத்திலும் மழை வரலாம் என்றார் அவரது பரிவு எங்களை நெகிழ வைத்தது. எங்கள் ஓட்டுனரும் ஷோஹில் மிகவும் நல்லவராக தெரிந்தார். அவர்தான் எங்களின் பயத்தை போக்கி காஷ்மீரை சுற்றி காட்டினார்.
குல்மார்கில்
பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை போல இங்கு மிதக்கும் தோட்டம் மிகவும் அதிசயம். எல்லா காய்கறிகள், பழங்கள்,கீரைவகைகள் கொண்ட தோட்டங்கள் ஒரே இடத்தில் நிற்காமல் மிதந்து கொண்டே இருக்கிறது. செடிகள் எல்லாம் நீண்டு வளர்ந்து பழங்களை கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் படகில் போகும்போது அந்த செடி கொடிகளும் நகர்ந்து நம்முடன் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கும் அழகை பார்க்க இரு கண்கள் போதாது...
குல்மார்க் பனிமலைகள், பனிசருக்கு விளையாட்டு, ரம்மியமான இயற்கை காட்சிகள் தான் குல்மார்கின் அழகு சின்னங்கள்
.காஷ்மிர் ஷால். காஷ்மிர் சில்க், கம்பளி, கார்பெட், கவினை பொருள்கள், குங்கும பூ எல்லாம் கிடைக்கிறது. பார்த்து வாங்க வேண்டும் துணிகளை.. நான் அப்படிதான் காஷ்மீர் சில்க் சுடிதார் செட் எடுத்தேன். நம் கண்முன்னால் தான் பேக் செய்தார்கள், ஆனால் பேண்ட் பீஸ் வைக்கவே இல்லை. இங்கு வந்தபுறம் தான் உண்மை தெரிந்தது. அதுமாதிரி சில விஷயங்கள் நடக்கின்றன வறுமையினால்இழப்பினால் தன் வளங்களை எல்லாம் இழந்து நிற்கிறது இப்போதைய காஷ்மீர்.ஊரில் இன்னுமும் தன் மக்களுக்கு தண்ணிர் கூட சரியாக கிடைக்காமல் மக்கள் சுற்றுலா குழுவினரது வாகன்ங்களை மறித்து போராட்டங்களை நட்த்துகின்றனர். பின் போலீஸ் வந்து தடியடி நட்த்தி கூட்ட்த்தை கலைக்கின்றனர்இது நாங்கள் போயிருந்த சமயம் பல தடவைகள் நடந்தது. இங்கு லோக்கல் சிம்காட் வாங்க முடியாது. நமது போனும் வேலை செய்யாது.நான்கு நாட்களும் எங்களை தொடர்புகொண்டு கிடைக்காமல் சிலர் பதறிவிட்டனர்... நாங்களும் நெருங்கிய சினேகிதர் தவிர யாரிடமும் சொல்லவில்லை. வேண்டாம் என்று தடுத்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்
மீண்டும்இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். காஷ்மீர்தனது இழந்த அழகை மீண்டும் சரி செய்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிலவி மீண்டும் தன் புது பொலிவுடன் வரவேண்டும் என்பதே என் ஆசைஅதற்கு காலமும் நேரமும் வரவேண்டும்…..

.

 


11/24/2012

கடவுளுக்கு தூது.

அம்மா எனக்காக சாமிகிட்டே வேண்டிக்கோ
இது குழந்தைகள் எப்போதும் என்னிடம் கூறுவது
அப்பாவும், சுற்றமும், உற்றாரும்,
நட்புகளும் எனக்காக நீ வேண்டிக்கோ,
கடவுளுக்கும் இவர்களுக்கும் நான் பாலமாக
நான் இவர்களுக்கு வேண்டி கொள்வது
எண்பது சதவிகிதம் பழுதில்லாமல் நடக்க
கடவுளிடன் நான் இட்ட விண்ணப்பம் மட்டும்
எப்போதும் போல் வெயிட்டிங் லிஸ்டில்...

6/29/2012

பயணம்

எல்லோரையும் வழி அனுப்பி வைக்கிறேன் அவர்கள் முன சோகத்தை காட்டாமல். அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப யாராவது வருவார்கள் ஆனால் அவர்கள் என் இதயத்தின் சிம்மாசனத்தை விட்டு இறங்குவதில்லை..புதியவர்கள், விட்டு பிரிந்தவர்கள் என்று எல்லொரையும் இழுத்து கொண்டு ஒரு ரெயில் பயணத்தில் என்றும் இனிய நினைவுகளுடன் நான்

பாசம்

உறவினரிடம் காட்டும் அன்பிற்கு பாசம்..
மற்றவர்களிடம் காட்டும் பரிவிற்கு அன்பு..
புன்னகை செய்தபடி போய் கொணடே இருப்பது , அன்பு, மாட்டிக்கொண்டு விழிப்பது பாசம்..

ஷின் நியான் குவாய்ல

உலகம்
ஷின் நியான் குவாய்ல!
Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)
- சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!
பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.
இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.
நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.
அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தாய்லாந்து தரிசனம்.


விழிகளுக்கு விருந்தளித்த தாய்லாந்து தரிசனம்!
Posted Date : 14:03 (02/03/2012)Last updated : 17:03 (02/03/2012)
கட்டுரை, படங்கள்: சுபாஸ்ரீ மோகன்


உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளுள் ஒன்று, தாய்லாந்து. இந்நாட்டை வலம்வர வேண்டும் என்ற ஆவல், அண்மையில் நிறைவேறியது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து பாங்காக் வந்து சேர்ந்தோம். தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் இனிதே வரவேற்றது. விமான நிலையத்தில், தேவர்கள...ும் அசுரர்களும் வாசுகியை கொண்டு பாற்கடலை கடையும் பிரமாண்டமான சிற்பம் வியப்பில் ஆழ்த்தியது. இந்திய கலாசாரத்தின் அடையாளம் மிக ஆழமாக அங்கு பதிந்திருப்பதை உணர முடிந்தது.

தாய்லாந்து தலை நகரம் பாங்காக். தாய் நாணயம் 'பாட்' என்று அழைக்கபடுகிறது. இந்திய குடிமக்களுக்கு இங்கு நுழைவனுமதி (விசா), பாங்காக் விமான நிலையத்திலே மிகவும் எளிதாக வழங்கப்படுகிறது. 


 அன்றிரவு தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் ஓட்டுனரிடமே தாய்லாந்தின் கலாசாரத்தை பற்றி சில விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். மறுநாள் பாங்காக்கை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

காலையில் வெவ்வேறு புத்தர் கோயில்களை தரிசிக்கச் சென்றோம். எல்லா கோயில்களும் பிரமாண்டம் என்றாலும், குறிப்பாக வாட்போ எனும் பள்ளிக்கொண்டிருக்கும் புத்தர் கோயில் எல்லோரையும் அசரவைத்தது. தங்கத்தினால் அமைக்கபட்ட இந்தப் புத்தர் சிலையின் எடை சுமார் ஐந்து டன்!

சுற்றுலா செல்லும்போது வழிகாட்டியிடம் தாய்லாந்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டோம். அதில் சில தகவல்கள்...



தாய்லாந்து மிகவும் அழகான தென்கிழக்கு ஆசிய நாடு. தாய்லாந்து மொழியில் 'தாய்' என்றால் சுதந்திரம் என்று பொருள். யாருடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்படாமல் இருந்த ஒரே ஆசிய நாடு இதுதான்.

புகைவண்டி வசதியும் தரைவழி போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால், எல்லா செயல்களும் நீர்ப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெற்றது. நீர் நிலைகளையும், ஆறுகள், பாசன வசதிகள் போன்றவற்றை தங்களது (தாய் மக்கள்) கட்டுபாட்டுலேயே வைத்து இருந்ததினால், அந்நிய நாட்டினரது ஆக்கிரமிப்பு எதுவும் நிகழவில்லை.

 இங்கு இன்றளவும் மன்னர் ஆட்சி தான் நடைமுறையில் உள்ளது. மன்னரை தெய்வமாக வணங்குகிறார்கள். பொது இடங்களில் மன்னரின் திருவுருவ புகைப்படங்கள் ஆங்காங்கே தென்படுகிறது.

 தாய்லாந்தில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். 'லிட்டில் இந்தியா' எனக் கூறப்படும் பஹுரத் என்ற இடத்தில் இந்திய உணவு விடுதிகளும், இந்தியப் பொருட்களும் கிடைக்கிறது. சிவன், லட்சுமி மற்றும் விஷ்ணு கோயில்களும் இங்கு உள்ளன.

மலையும், மலைச்சார்ந்த நீர் வளமும், இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட வளமான தாய்லாந்தில், வழி எங்கும் ஏராளமான கடற்கரைகளும், தென்னை மரங்களையும் பார்க்கும்போது கேரளா நினைவுக்கு வருகிறது. இந்தக் கடற்கரைகள் வெளிநாட்டுப் பயணிகளையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்கின்றன.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்றதால், தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறையவே இல்லை!

அங்கோர்வாட்

அசரவைத்த அங்கோர் வாட் அற்புதங்கள்!
Posted Date : 17:02 (09/02/2012)Last updated : 19:02 (10/02/2012)
- சுபாஸ்ரீ மோகன்

சீனப் புத்தாண்டு விடுமுறையில் கம்போடியா செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கம்போடியா என்ற நாட்டை பற்றி என் மனதில் எந்தவித எண்ணமும் இல்லை. ஏதோ விடுமுறையை கழிக்க வேண்டும் என்ற எண்ணதுடனே சென்றேன். அங்கு சென்றபின் தான் உலகத்தில் இருக்கும் கலைசெல்வங்களெல்லாம் ஒரே இடத்தில் குவிந்த ...மாதிரி ஒரு தோற்றம் எனக்கு ஏற்பட்டது.

நான், என் தாய்நாட்டில் இருக்கும் உணர்வை எனக்கு கொடுத்தது அங்கோர் வாட். அங்கோர் நகரத்தில் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல கோயில்கள் உள்ளன.

இயற்கையின் தாக்கத்தாலும், உள் நாட்டு கலவரதினாலும் அழிந்தது போக மிச்சம் இருப்பதே இவ்வளவு பிரம்மாண்டம் எனில், "என்னே.. அந்த மன்னனின் திறமை!" என வியக்காமல் இருக்க முடியவில்லை.

கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கிமர் என்றும் அழைக்கின்றனர். முதல் மூன்று நூற்றாண்டுகள் இந்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. இந்த காரணத்தினால் இன்றும் இந்திய கலசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் அதிக அளவு காணப்படுகிறது.

ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை ஜயவர்மன் II நிர்மானிதான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப்படுகிறது. அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.



மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட் நகரத்தில் கமய் என்ற தேசத்தை ஆண்டு வந்தான். மன்னன் சூரியவர்மன் II ஆட்சி காலத்தை அங்கோர் வாட்டின் பொற்காலமாக கருதுகிறார்கள். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேரு மன்னர்கள் கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.
அங்கோர் மன்னர்கள் தங்களை தெய்வமாகவே கருதி கோயில்களை கட்டி கொண்டனர். பந்தே ஸ்ரீ என்று கூறப்படும் ஆலயம் ஜயவர்மனால் 9-ம் நூற்றாண்டில் மணர்க்கல்லினால் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஆலயமாகும். ஜயவர்மன் என்ற மன்னன் தனக்கு மட்டுமில்லாமல் தன் தாய் தந்தைக்கும் கோவில் கட்டி உள்ளான். தன்னுடய கோவிலை அங்கோர் தாம் என்றும் தன் தாய்க்கு கட்டிய கோயிலை தா ப்ரோம் என்றும் அழைத்து கொண்டான்.



மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.

அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணபடுகிறது.



இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்க்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.

நடைமுறையில் மக்கள் சட்ட திட்டங்களுக்கும், பழி பாவங்களுக்கும் கட்டுபட்டு நடக்க இந்த சிற்பங்கள் உதவியது. இவர்களது காலத்தில் நாடே செல்வ செழிப்புடன் காணப்பட்டது. இவர்களுக்கு பின் வந்த மன்னர்களின் ஆட்சியில் தொடங்கியது, ஆதிக்க வெறி.

இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும் அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு, பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழ் அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டன.

இருபது ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல், நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.

2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கம்போடிய நாட்டு மன்னனே நாட்டின் தலைவன். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா.

அண்மையில் நான் சென்ற சமயம், பல்வேறு நாட்டினர் அங்கோர் வாட்டிற்க்கு சுற்றுலா வந்திருந்தனர். அங்கோர் வாட் சுற்றுலா வழிகாட்டி அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளை விவரிப்பது கொள்ளை அழகு. அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

கம்போடியாவின் முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில் சந்தேகமே இல்லை.

நட்பு.

கவலை சுழ்ந்த நேரத்தில் மனசுமயை இறக்கி வைக்ககண் மூடி யோசித்த போது:_ உன் முகமேஎன் நினைவில் வந்தது. பழகிய காலங்கள்சிறிதென்றாலும் மனம் சொல்கிறது_என்உயிர் நண்பன் நீ தான் என்று.

Mothers Day.

அம்மா என்றழைக்காத உயிர் இல்லை .. எனக்காக நீ வாழ்ந்த சிலவருடங்களே ஆனாலும் உனது நினைவுகள் என்னால் மறக்க இயலவில்லை.. உனது புடவை தலைப்பில் அடிகடி முகம் பொத்தி உன்னை அணைப்பது போன்ற பாவனையில் உனது நினைவுகளை எனக்குள் சேர்க்கிறேன். நீ இருந்திருந்தால் உன்னை முத்தமிட்டு வாழ்த்தியிருப்பேன்..அம்மா ...... உன் தின வாழ்த்து

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

சில நேரங்களில் தனிமை , எதையோ இழந்த சோகம், பெரும்பாலு ம்வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏற்படும். எனக்கு அடிகடி ஏற்படும். என் மனதில் அழகா நட்புகளை நினைத்து கொள்வேன், அல்லது அப்பாவின் நினைவு வரும்.உடனே மனதிற்கு சங்கடமாகிவிடும். அந்த சூழ்னிலையில் என்முக வாட்டத்தை பார்த்து விட்டு ஏன் என்ன ஆச்சு என்று உடனே கலகலப்பாக்குவார்கள் இந்த சீனத்து நண்பர்கள்
எந்தா நாடு என்றாலும் அன்புக்கு ஓரே மொழிதான்.
என்பதை இந்த நட்புக்களின் மூலம் அறிந்து கோண்டேன்...யாதும் ஊரே நாவ்ரும் கேளிர்.. அன்பே எங்கள் உலக தத்துவம்

நட்பு.

நித்தமும் பேசிகொண்டோம் பல கதைகள்
சொந்தங்கள் சோகங்கள் எல்லாவற்றையும்
பரிமாறிக்கொண்டோம்... ஒருநாள் நின்று விட்டது
எல்லாமே..ஆனால் உன்னுடைய நினைவுகள்
மட்டும் என்னிடம்.. என்றாவ்து பரிமாரிகொள்ளும்
வாழ்தில் நிறைகிறது என் மனம்...வருடங்கள் கடந்தாலும் விட்டு விடாமல் தொடரும் இந்த பயணத்தில்..நானும் நீயும் வழிபோக்கனாய்

அப்பா

sarithiram thirumbukirathu.
by Subasree Mohan on Tuesday, January 17, 2012 at 2:22pm ·
தாய் நாட்டை விட்டு திரும்பும் போதுவாஞ்சை உடன் அப்பா கையை பிடித்து கொண்டு திரும்பி எப்போ வருவாய்என்ற கேள்வியுடன் : இன்னும் ஆறு மாதங்களில்என்றவுடன் இருவருக்குமே கண்களில் நீர்கட்டுப்படுத்த முடியவில்லை என்னால்அப்பா குழந்தையாக தெரிந்தார் என் கண்களுக்குஎன் குழந்தையை முதல் முதலில் பள்ளி விட்டுவந்த போது என் கையை பிடித்து கொண்டு நீஎப்போ வருவே என்ற ஞாபகம் எனக்குள்.

அன்பு


 Sunday, March 18, 2012
வானில் உள்ள நட்சத்திரம் நீ
அதிசியமானவனும் நீ
மழையை போல அவ்வபோது
இறங்கி வந்து சின்னதாய் ஒரு புன்சிரிப்பு
அழகாய் ஒரு நலம் விசாரிப்பு
வந்த வேகத்தில் சென்று விடுவாய்
ம்றுபடியும் நீ வரும் நாளை
ஆவலுடன் விழி பார்த்து காத்திருப்பேன்
அன்பே உனது மொழி
அந்த மொழியை மட்டுமே வாசிக்க

அன்பு

by Subasree Mohan on Thursday, April 19, 2012 at 5:23pm ·
உனது பெயரை உச்சரிகாமல் ஒரு நாளும் இருந்ததில்லை
உச்சரிக்காத தருணங்களில் மனதிலாவது சொல்லிக்கொள்வேன்
உனது பெயரை...என் இதயத்தில் நீ வந்து அமர்ந்து
என்னயே ம்றக்க செய்தாய்
உன்னையே நினைக்கசெய்தாய்
நான் வெளியேறி வெகுநாட்களாகிவிட்டது..
எனக்கும் சிறிது இடம்கொடு....
களைப்பாய் இருக்கிறது..
. கண்ணயர்ந்து வெகுகாலமாக...

நட்பு

by Subasree Mohan on Friday, March 23, 2012 at 8:51am ·
உன்னை பார்க்க இன்னும் சில மாதங்கள்
நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்
மகிழ்சியையும் சோகத்தையும் உன்னிடம்
வந்து நான்பகிர்ந்துகொள்ள
நான் மெல்ல தளிர் நடை போட்டு நடக்க
நான் செய்யும் ஒவ்வொரு செயல்களையும்
ரசித்து என்னை உற்சாகபடுத்தி
என்னை வழி நடத்தி சென்றாய்
வெகு தூரத்தில் இருந்தாலும் என்
...
மனம் உன்னை சுற்றியே நினைவுகளால் .
வட்டமடிகிறது. உன்னை பார்க்கும்
உற்சாகம் சில மாதங்களுக்கு முன்பே
என்னை தொற்றிக்கொள்ளும் .
உனக்காக பார்த்து பார்த்து வாங்கிய
பொருட்கள் வீட்டை நிறைக்கும்.
உன்னை பார்த்து சென்றபின்
நெஞ்சினில் சில நினைவுகளை
சுமந்துகொண்டு சோகத்தில் விடைபெறுவேன்
உன்முகம் பாராமல், கண்ணில் நீர் வழிய
அடுத்த சந்திப்பு எப்போது என மனம் விழைய
எதிர்பார்புடன் கூடிய வாழ்க்கை பயணத்தில்-நான்
எண்ணத்தில் நட்புடன் என்றும் நீ
See More
· ·

நட்பு..

நித்தமும் பேசிகொண்டோம் பல கதைகள்
சொந்தங்கள் சோகங்கள் எல்லாவற்றையும்
பரிமாறிக்கொண்டோம்... ஒருநாள் நின்று விட்டது
எல்லாமே..ஆனால் உன்னுடைய நினைவுகள்
மட்டும் என்னிடம்.. என்றாவ்து பரிமாரிகொள்ளும்
வாழ்தில் நிறைகிறது என் மனம்...வருடங்கள் கடந்தாலும் விட்டு விடாமல் தொடரும் இந்த பயணத்தில்..நானும் நீயும் வழிபோக்கனாய்