Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

12/05/2012

காஷ்மீர் பயணம்.

டில்லியிலிருந்து ஒன்றரைமணி நேர பயணம் ஸ்ரீநகர் .
அழகானஒரு மலைபாங்கான பிரதேசம் காஷ்மீர்..அதை நீண்ட நாட்களாக அந்த அளவு பயம்ஆனாலும் நமது நாட்டின் அழகை வாழ்வில் ஒரு தரமாவது தரிசிக்க ஆசை..அதனால் இந்த பயணம். ஒரு பயத்துடன் இருந்தோம். பார்க்க ஆசையாக இருந்ததால் இந்த முறை காஷ்மீர் பயணம் வாய்த்தது. ஆனால் மனசு முழுக்க பயம். திரும்ப வருவோமா என்றே தெரியவில்லை கொஞ்சம் இயல்பு வாழ்க்கை.திரும்ப ஆரம்பிக்கிறது. கஷ்மீரத்து மக்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர்களுக்கு தெரிகிறது சுற்றுலா தான் அவர்களின் வாழ்கையின் ஆதாரம் என்று அதனால் இப்போது எல்லோரும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது இல்லை. அவர்கள் இழந்தது ஏராளமான உயிர்கள், அடிக்கடி மூடப்படும் கல்வி சாலைகள் ,கல்லூரிகள் அதனால் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட துர்பாக்கியம்.. பாவப்பட்ட மக்களின் கண்களில் எதிர்காலம் கண்களில் கேள்வி குறியோடு
.ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு
.முதலில் நுழையும் முன்பே கார், மற்றும் நம்மையும் முதலில் சோதனை செய்கிறார்கள். அந்த வாயில் கடந்து சுமார் 2 அல்லது 3 கிலோமீட்டர் தள்ளி விமான நிலையம் இருக்கிறது. அங்கு சென்றவுடன் உள்ளே ஒரு பேக்கேஜ் எக்ஸ்ரே மிஷின் முடிந்த வுடன் பேக்கேஞ் செக்கிங் செய்யவேண்டும். ஹேண்பாக்கேஜ் முடிந்த உடன் நம்மையும் சோதனை செய்கிறார்கள். அது முடிந்த பின் பாக்கேஜ் செக்கிங் செய்து விட்டு பாக்கேஜில் அடையாளம் குறிப்பிடபடுகிறது. அந்த அடையாளம் குறிப்பிடபட்ட பாக்கேஜை மட்டும் தான் விமானத்தில் ஏற்றபடும். பயணியும் பயணம் செய்கிறார என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள படுகிறது. ஒரு வழியாக எல்லாம் முடிந்த்து என்று நடக்க துவங்கிய பொது விமானதுக்கு சற்று அருகில் ஒரு தடுபில் திரும்ப பயணிகளையும், ஹாண்ட் பேகேஜையும் சோதனை செய்கிறார்கள் .இத்தனை சோதனைகள் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது அசம்பாவிதங்கள் இருக்கிறது.
நாங்கள்போயிருந்த சமயம் ஒரே வெய்யில் தாங்க முடியவில்லை. ஊரின் பெரிய பாதி தால் லேக்தான் தனது அழகால் ஆக்ரமித்து கொண்டிருக்கிறது. அதில் காஷ்மீருக்கே உரிய படகு வீடுகள். எல்லாவற்றிற்கும் அழகாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. படகு வீடுகளுக்கு ஷிகாரா என்று பெயர். அங்கு கூட நாம் நமது தேவைகேற்ப தங்கலாம். படகிலேயே எல்லா வசதியும் இருக்கிறது. காஷ்மீர மக்களின் வாழ்வோடு ஒன்றியிருக்கிறது அவர்களின் படகு வீடு. நாம் படகில் செல்லூம்போது பக்கத்திலேயே மற்றொரு படகில் வந்து வியாபாரம் செய்கிறார்கள்.
ஸ்ரீ நகரில் 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரு மலையில் சிவன் கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. 2200 முன் அசோக சக்கர்வர்த்தியின் மகன் ஜலுக்கா இந்த கோவிலை கட்டியதாக சொல்கிறார்கள். இந்த கோவிலில் இருந்து தால் ஏரியின் முழு அழகையும் பார்க்கலாம். இந்த கோவிலில் பகவத்பாதர் ஆதிசங்கரர் சில நாட்கள் வந்து தியானத்தில் இருந்ததாக சரித்திர சான்றுகள் உள்ளது. 273 படிகளை கொண்ட.இக் கோவிலில் சிவ பெருமான் சன்னிதி உள்ளது. இந்த கோவிலை இப்போது சுலைமான் மலை என்று கூறுகிறார்கள்."ஷிகாரா - படகு வீடு”

குல் மார்க் ஒரு அழகான இயற்கை வளங்களை எல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் இடம். நாங்கள் குல்மார்க் போக காரில் ஏறிய போது ஒரு முகம் தெரியாத நபர் எங்களை பார்த்துவிட்டு ஸ்வெட்டர் ஏதும் எடுத்துகொள்ளவில்லையா அங்கு குளிரும் எந்த சமயத்திலும் மழை வரலாம் என்றார் அவரது பரிவு எங்களை நெகிழ வைத்தது. எங்கள் ஓட்டுனரும் ஷோஹில் மிகவும் நல்லவராக தெரிந்தார். அவர்தான் எங்களின் பயத்தை போக்கி காஷ்மீரை சுற்றி காட்டினார்.
குல்மார்கில்
பாபிலோனின் தொங்கும் தோட்டத்தை போல இங்கு மிதக்கும் தோட்டம் மிகவும் அதிசயம். எல்லா காய்கறிகள், பழங்கள்,கீரைவகைகள் கொண்ட தோட்டங்கள் ஒரே இடத்தில் நிற்காமல் மிதந்து கொண்டே இருக்கிறது. செடிகள் எல்லாம் நீண்டு வளர்ந்து பழங்களை கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் படகில் போகும்போது அந்த செடி கொடிகளும் நகர்ந்து நம்முடன் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கும் அழகை பார்க்க இரு கண்கள் போதாது...
குல்மார்க் பனிமலைகள், பனிசருக்கு விளையாட்டு, ரம்மியமான இயற்கை காட்சிகள் தான் குல்மார்கின் அழகு சின்னங்கள்
.காஷ்மிர் ஷால். காஷ்மிர் சில்க், கம்பளி, கார்பெட், கவினை பொருள்கள், குங்கும பூ எல்லாம் கிடைக்கிறது. பார்த்து வாங்க வேண்டும் துணிகளை.. நான் அப்படிதான் காஷ்மீர் சில்க் சுடிதார் செட் எடுத்தேன். நம் கண்முன்னால் தான் பேக் செய்தார்கள், ஆனால் பேண்ட் பீஸ் வைக்கவே இல்லை. இங்கு வந்தபுறம் தான் உண்மை தெரிந்தது. அதுமாதிரி சில விஷயங்கள் நடக்கின்றன வறுமையினால்இழப்பினால் தன் வளங்களை எல்லாம் இழந்து நிற்கிறது இப்போதைய காஷ்மீர்.ஊரில் இன்னுமும் தன் மக்களுக்கு தண்ணிர் கூட சரியாக கிடைக்காமல் மக்கள் சுற்றுலா குழுவினரது வாகன்ங்களை மறித்து போராட்டங்களை நட்த்துகின்றனர். பின் போலீஸ் வந்து தடியடி நட்த்தி கூட்ட்த்தை கலைக்கின்றனர்இது நாங்கள் போயிருந்த சமயம் பல தடவைகள் நடந்தது. இங்கு லோக்கல் சிம்காட் வாங்க முடியாது. நமது போனும் வேலை செய்யாது.நான்கு நாட்களும் எங்களை தொடர்புகொண்டு கிடைக்காமல் சிலர் பதறிவிட்டனர்... நாங்களும் நெருங்கிய சினேகிதர் தவிர யாரிடமும் சொல்லவில்லை. வேண்டாம் என்று தடுத்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம்
மீண்டும்இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். காஷ்மீர்தனது இழந்த அழகை மீண்டும் சரி செய்து கொண்டிருக்கிறது. மாற்றம் நிலவி மீண்டும் தன் புது பொலிவுடன் வரவேண்டும் என்பதே என் ஆசைஅதற்கு காலமும் நேரமும் வரவேண்டும்…..

.