Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

அங்கோர்வாட்

அசரவைத்த அங்கோர் வாட் அற்புதங்கள்!
Posted Date : 17:02 (09/02/2012)Last updated : 19:02 (10/02/2012)
- சுபாஸ்ரீ மோகன்

சீனப் புத்தாண்டு விடுமுறையில் கம்போடியா செல்லும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கம்போடியா என்ற நாட்டை பற்றி என் மனதில் எந்தவித எண்ணமும் இல்லை. ஏதோ விடுமுறையை கழிக்க வேண்டும் என்ற எண்ணதுடனே சென்றேன். அங்கு சென்றபின் தான் உலகத்தில் இருக்கும் கலைசெல்வங்களெல்லாம் ஒரே இடத்தில் குவிந்த ...மாதிரி ஒரு தோற்றம் எனக்கு ஏற்பட்டது.

நான், என் தாய்நாட்டில் இருக்கும் உணர்வை எனக்கு கொடுத்தது அங்கோர் வாட். அங்கோர் நகரத்தில் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல கோயில்கள் உள்ளன.

இயற்கையின் தாக்கத்தாலும், உள் நாட்டு கலவரதினாலும் அழிந்தது போக மிச்சம் இருப்பதே இவ்வளவு பிரம்மாண்டம் எனில், "என்னே.. அந்த மன்னனின் திறமை!" என வியக்காமல் இருக்க முடியவில்லை.

கம்பூச்சியா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். இந்த மக்களை கம்போடியர் என்றும் கிமர் என்றும் அழைக்கின்றனர். முதல் மூன்று நூற்றாண்டுகள் இந்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது. இந்த காரணத்தினால் இன்றும் இந்திய கலசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் அதிக அளவு காணப்படுகிறது.

ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது. மிகோங்க் மற்றும் தொன்லே சாப் நதிக்கரையில் தான் தெனோம் கூலன் என்ற ஊரை ஜயவர்மன் II நிர்மானிதான். அந்த நகரம் இன்று சியாம் ரீப் என்று அழைக்கப்படுகிறது. அங்கோர் மன்னர்களின் ஆட்சி சுமார் 6-ம் நூற்றாண்டில் தொடங்கியது.



மன்னன் சூர்யவர்மன் அங்கோர் வாட் நகரத்தில் கமய் என்ற தேசத்தை ஆண்டு வந்தான். மன்னன் சூரியவர்மன் II ஆட்சி காலத்தை அங்கோர் வாட்டின் பொற்காலமாக கருதுகிறார்கள். 6-ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை வெவ்வேரு மன்னர்கள் கோயில்களை கட்டினர். அவர்களில் முக்கியமானவர்கள் ஜயவர்மன், இந்திர வர்மன், ஹர்ஷ வர்மன் மற்றும் ராஜேந்த்ர வர்மன் ஆவர். சூரிய வர்மனது ஆட்சி காலத்தில் கமய் கட்டிட கலையின் வளர்ச்சி உச்சத்தை தொட்டது.
அங்கோர் மன்னர்கள் தங்களை தெய்வமாகவே கருதி கோயில்களை கட்டி கொண்டனர். பந்தே ஸ்ரீ என்று கூறப்படும் ஆலயம் ஜயவர்மனால் 9-ம் நூற்றாண்டில் மணர்க்கல்லினால் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஆலயமாகும். ஜயவர்மன் என்ற மன்னன் தனக்கு மட்டுமில்லாமல் தன் தாய் தந்தைக்கும் கோவில் கட்டி உள்ளான். தன்னுடய கோவிலை அங்கோர் தாம் என்றும் தன் தாய்க்கு கட்டிய கோயிலை தா ப்ரோம் என்றும் அழைத்து கொண்டான்.



மன்னன் கமய வம்சாவளி தோன்றலாய் இருந்தாலும் இந்திய கலாசாரத்தின் மேல் கொண்ட காதலால் தனது பெயரை ஜய வர்மன் என சூட்டி கொண்டான். இவனுக்கு பின் வந்த மற்ற மன்னர்களும் இதையே பின் பற்றினர். இவர்கள் காலத்தில் இந்து மதமும் புத்த மதமும் வேறுபாடின்றி தழைத்தோங்கியது.

அங்கோர் வாட் பெரிய கோயிலை காக்கும் கடவுளான விஷ்ணுவை கொண்டு தன்னையும் விஷ்ணுவாக பாவித்து கொண்டு இந்த கோயிலை எழுப்பினான். நான்கு திசைகளில் வாயில்கள், ஒரு அகழி, மூன்று மண்டபங்கள், மத்தியில் ஐந்து கோவில்கள் இவையெல்லாம் சேர்ந்ததுதான் அங்கோர் வாட் கோவிலின் அமைப்பு. தூண்களின் மேல்புறம் தாமரை வடிவ அலங்காரங்களும், சுவர்களில் நடன மாதர்கள், ஆண்கள், அப்சரஸ், விலங்குகள் இவர்களின் உருவங்கள் காணபடுகிறது.



இரண்டாவது மண்டபத்தில் புடைப்பு சிற்பங்களும் மஹாபாரத காப்பியங்களும் காணபடுகிறது. வாலிவதம், காம தகனம், அமிர்தம் எடுத்தல், இவையும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. நடுத்தர சுவர்களில் செதுக்கி அமைக்கபட்ட சிற்பங்கள் சொர்க்கம், நரகத்துக்க்கு செல்லும் பாதையை தெளிவாக விவரிக்கிறது.

நடைமுறையில் மக்கள் சட்ட திட்டங்களுக்கும், பழி பாவங்களுக்கும் கட்டுபட்டு நடக்க இந்த சிற்பங்கள் உதவியது. இவர்களது காலத்தில் நாடே செல்வ செழிப்புடன் காணப்பட்டது. இவர்களுக்கு பின் வந்த மன்னர்களின் ஆட்சியில் தொடங்கியது, ஆதிக்க வெறி.

இந்து மதத்தவர் புத்தர் சிலைகளையும் அதே போல் புத்த மதத்தவர் இந்து கடவுளின் சிலைகளையும் தாக்கி அழித்தனர். இயற்கை சீற்றங்களினால் அழிவு, பல்வேறு நாடுகளின் தாக்குதல், மற்றும் உள் நாட்டு போரினாலும் பல சிலைகளில் பாதிப்பு ஏற்பட்டன. இவ்வாறு படிப்படியாக இக்கோயில்கள் பராமரிப்பின்றி பாழ் அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டன.

இருபது ஆண்டகளாக நடைபெற்ற போரினால் அரசியல், நாட்டின் பண்பாடு, சமூகம் போன்ற அனைத்து துறைகளும் சிதைந்து காணப்பட்டது.

2000-ம் ஆண்டுலிருந்து கம்போடியாவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கம்போடிய நாட்டு மன்னனே நாட்டின் தலைவன். இந்த நாட்டின் முன்னேற்றத்திற்க்கு ஜப்பான், ஆஸ்ட்ரேலியா, ஜெர்மனி, கனடா மற்றும் ஃப்ரான்ஸ் நாடுகள் பொருளாதார உதவி வழங்கின. உலக சுற்றுலா பயணிகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துக்கொண்டுள்ளது கம்போடியா.

அண்மையில் நான் சென்ற சமயம், பல்வேறு நாட்டினர் அங்கோர் வாட்டிற்க்கு சுற்றுலா வந்திருந்தனர். அங்கோர் வாட் சுற்றுலா வழிகாட்டி அவர்களின் பேச்சு வழக்கில் நமது புராண கதைகளை விவரிப்பது கொள்ளை அழகு. அங்கோர் வாட் கோவிலே கம்போடியாவின் சின்னமாக தேசிய கொடியிலும் இடம் பெற்றுள்ளது.

கம்போடியாவின் முன்னேற்ற பாதைக்கு அங்கோர் வாட் கோயிலுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டென்பதில் சந்தேகமே இல்லை.

1 comment:

R.Gopi said...

அழகான அங்கோர்வார்ட்....

அதை ரசித்து எழுதி இருப்பது படிக்க படிக்க ஆனந்தமாய் இருக்கிறது....

//ஒரு நாகரிகம் தோன்றுவதற்கு நதி அவசியமாகிறது.//

அருமை அருமை...