Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

8/19/2013

நாஞ்சிங்












நான்சிங் முதலில் சீனாவில் தலை நகராக இருந்தது. அதனால் தலைநகரத்திற்குரிய கம்பீரம் சிறிது குறையாமல் மூன்று மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்த இடமாகும்.
டாக்டர் சன்யாட் சென் நினைவாலயம்..
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு முக்கிய தலைவராக கருதப்பட்டவர். இவரது மூன்று முக்கிய கொள்கைகள். தேசியவாதம், குடியரசு, மக்களின் வாழ்வாதாரம் . ஆப்ரகாம் லிங்கனின் கருத்துக்கள் இவரை ரொம்ப கவர்ந்தது. இவர் ஹாங்காங்கில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் சில இளைஞர்களில் இவரும் ஒருவர். மருத்துவராக பணிபுரிந்தாலும் பொதுவாழ்வில் மிகவும் ஆர்வம் இருந்தது. இவருக்காக கட்டப்பட்ட இந்த நினைவாலயம் 1929 ஆண்டு கட்டப்பட்டது.  இயற்கையான நீலமலையில் சுற்றிய இடங்களில் எல்லாம் பச்சை பசேலென்ற இயற்க்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. நீல மலை, மிங் கல்லறை எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால் எல்லா மக்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மிங்ஷியாவ்லிங் நினைவாலையம்.
மிங்ஷியாவ்லிங் பேரரசர் ஜீயுவாங்ஜாங் என்ற மிங் வம்சத்தை சேர்ந்த பேரரசரின் நினைவாலயம். இது சுமார் 600 வருடப் பழமையான கட்டிடம். இந்த நினைவாலயத்திற்கு இரு பிரிவுகள் உள்ளன. இதை சுற்றி 45 கி.மீ சுற்றளவில் கல் சுவர் உள்ளது. விலங்குகளின் சிலைகள் இந்த நினைவாலயத்தை பாதுகாப்பது போல வடிவமைத்துள்ளார்கள். இங்கு மன்னர் தன் அமைச்சர்களுடன், படை தளபதிகளுடன் வலம் வருவதாக நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த நினைவாலயம் சிவப்பு வர்ணத்தில் காண்பதற்கு கம்பீர அழகோடு காட்சியளிக்கிறது.

குடியரசு தலைவர் மாளிகை.
குடியரசு தலைவரின் மாளிகை ஒரு பிரம்மாண்டமான கட்டிடம். தாய்பிங் வம்சத்து மன்னரும், 20 நூற்றாண்டின் குடியரசு தலைவர்களும் இந்த மாளிகையில் வசித்து வந்தார்கள். அவர்கள் உபயோகித்த மேஜை நாற்காலிகள், தாய்பிங் காலத்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள மேஜை மரத்தாலான அலங்கார சின்னங்களும் இங்குள்ள ரகசிய அறையில்பத்திரப்படுத்தி பாதுகாக்கபட்டு வருகிறது. 1911 ஆண்டு டாக்டர் சன்யாட்சென்னும் இந்த மாளிகையில் வசித்துவந்துள்ளார்.
லிங்கு டெம்பிள்.
புத்த மதகோவில் இது நீலமலையில் இருக்கிறது. லிங்கு கோவில் இடிக்கப்பட்டு சில நினைவாலயங்கள் கட்டப்பட்டன. ஆனால் பின் லிங்கு கோவில் மறுபடியும் திரும்ப கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் மூன்று கட்டிடங்கள் உள்ளது. இங்கிருக்கும் புத்த விக்கிரகம் சீன துறவி இந்தியாவிலிருந்து புத்தமத சித்தாந்தங்களையும் கோட்பாடுகள் கொண்ட வரைபடங்கள், புத்தரின் உருவசிலை எல்லாவற்றையும் எடுத்து வந்து இங்கு புத்த மதத்தை தனது சீடர்களுக்கும் சொல்லி குடுத்து இந்த கோவிலை கட்டினார்.
சன்யாட்சென்னின் நினைவாலயம், லிங்கு டெம்பிள், மிங்ஷியாவ்லிங் நினைவாலயம் மூன்றும் ஒரே வளாகத்தில் உள்ளது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பார்க்க சைக்கிள், பேருந்து, எலக்ட்ரிக் கார் வசதிகளும் இருக்கிறது.

நாஞ்சினில் ஜப்பானியர்களினால் இறந்தவர்களின் நினைவாலயம்.
1937 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் ஷாங்காயிலிருந்து நாஞ்சினுக்கு வந்து போரிட்டு பொதுமக்களை எல்லாம் கொன்று குவித்தார்கள்.  இந்த ஜப்பானிய படைதுருப்புகளால் 3 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 20,000 பெண்கள் மானபங்க படுத்தப்பட்டுள்லனர். இந்த இடத்தில் இறந்தவர்களது எலும்பு கூடுகள் பத்திரப்படுத்தி, இறந்தவர்களின் பெயர்கள் எழுதிய நினைவு தூண்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும் காணபெறுகின்றன. இந்த வரலாற்றில் இது மறக்கபடாத ஒன்று.


No comments: