Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

9/27/2011

நட்பு காதல் இல்லை



நமது நட்பு உயிருள்ள்வரை இருக்கும் என்றாய்
சில வருடங்கள் கழிந்த போது
உன் பாராமுகம் என்னை வியக்க செய்தது
பின் தான் தெரிந்தது நீ
வேறு ஒரு ராஜ்ஜியத்தில் பிரவேசித்து கொண்டிருக்கிறாய் என்று
இப்பொழுது எனது நட்பு உனக்கு அநாவச்யம் என்று
உணர்த்தியது உன் செயல்
நீ திரும்பி வருவாய் எனது உண்மை அன்பை புரிந்து கொண்டு
அப்போதும் புன்னகையுடன் உனக்கு தோள் கொடுக்க
காத்துக்கொண்டிருப்பேன் நான்
நட்பு காதல் இல்லை பணத்தால் பிரிவதற்க்கு.

9/25/2011

Oru Nanbanukkaaga!

வரலாற்றாசிரியராய் அறிமுகமானாய்
நட்பு கரம் கோர்த்து நடத்தி செல்ல
கழிந்தன பொழுதுகள்!
காலத்தின் கட்டாயம்,
வேறு, வேறு திசைகளில் பயணம்.
...ஆண்டுகள் கடந்தன…
மறுபடி சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்க,
வந்தது உன் மரணச் செய்தி!
எனக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்,
நீ நலமுடன் இருப்பாய் என நான் நினைததுக்கொண்டிருப்பேன்.

9/08/2011

Chinavil Naan

எனது மூன்று வருட டில்லி வாழ்க்கை முடித்துவிட்டு பீகிங்க் என அழைக்கபடும் சீன தலை நகரம் பெய்ஜிங்க் வந்து சேர்ந்தோம். பெய்ஜிங்க் விமான நிலயம் நமது டில்லி விமான நிலயத்தைவிட பல மடங்கு பெரியது. என்ன ப்ரம்மாண்டம்! இதை பார்தவுடன் எங்களுக்கு புரிந்தது ஏன் சீனாவை சூபர் பவர் என்கிறார்கள் என்று. இப்படிபட்ட விமான நிலயத்தை பார்தவுடன், பெய்ஜிங்க் நகரம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு வளர்ந்த்து.

கஸ்டம்ஸ் இலாகாவை விட்டு சென்றபின் நாங்கள் பெய்ஜிங்க் நகரத்தில் கால் வைய்த்தோம். நாங்கள் பாரத்த முதல் மனிதன் பென் என கூறப்படும் தாங்க்தாவ் யாங்க். எங்கள் எதிர்பார்புக்கு மாறாக அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார். இது எங்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி.

சாலைகளும் பலமாடி கட்டிடங்களும் எங்களை வியக்க செய்தன. சீனா ஒரு சூபர் தான் என ஊர்ஜித படுத்துவதுப்போல் இருந்த்து. பசுமை! பசுமை! எங்கு பார்தலும் பசுமை. நாங்கள் கேள்வி பட்டிருந்தோம் சில மாதங்களில் ஒரு லட்ச மரங்களை நட்டார்கள் என்று. இதை பார்த்து புரிந்து கொண்டோம்.

எங்களை பன்னாட்டு குடிமக்கள் இருக்கும் அபார்ட்மென்டிற்கு அழைத்து சென்றார் எங்கள் காரோட்டி. எங்கள் வழிக்காட்டி மற்றும் நல்ல நண்பரும் ஆகிவிட்டார். எல்லா இடங்களிலும் எங்களுக்கு மொழி பெயர்பு செய்து உதவினார். எங்கள் அடுத்த நண்பர் எங்கள் வீட்டில் உதவி செய்யும் மா யூ மிங்க். மனிதாபிமானம் என்பது எல்லோருக்கும் பொது. இத நாடு, மதம், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. நாம் அன்பை காட்டினால் அது பல மடங்கு நமக்கு திரும்பி வரும். இதை அயல் நாட்டில் நன்றாக உணர முடிந்த்து.

இந்த ப்ரம்மாண்டம், சூப்பர் பவர் தகுதிக்கு பின்னால் இவர் கடும் உழைப்பு மற்றும் கடமை உண்ர்சி உள்ளது. எட்டு மணிக்கு வேலைக்கு வர வேண்டும் என்றால் 07:55 க்கே வந்து விடுவார்கள்; ஒரு நாளும் நேரம் தவறியதில்லை. சீனா என்றால் கடமை மற்றுமல்ல கட்டுப்பாடும் கூட. ஒரு குடும்பத்திற்க்கு ஒரு வீடு ஒரு குழுந்தை ஏன் ஒரு நாய் ஒரு கார் தான் வைத்து கொள்ள முடியும்.

இங்கு காஸ், மின்சாரம், தொலைபேசி கட்டணங்கள் எல்லாம் முன்பே கட்டி விட வேண்டும்; குறையும்போது ரிசார்ஜ் செய்து கொள்ள வேண்டும். கட்டணங்களை செலுத்தாமல் வசதிகளை அனுபவிக்க முடியாது.

ஆங்கிலம் தெரிந்தால்தான் உயர முடியும் என்ற எண்ணத்தை தகர்த்தெரிந்துள்ள்து சீனா. மாறாக சீன மொழி கற்றுக்கொண்டு இங்கு வணிகம் செய்ய எல்லோரும் முன் வருகிரார்கள். பல தேசங்களுடன் தொடர்பு இருந்தாலும் தன்னுடய கலாச்சாரம் மற்றும் மொழி பற்றை துளி கூட விட்டு கொடுப்பதாக இல்லை. விரைவில் முத;ல் இட்த்தை சீனா எட்டி விடும் என்ற கருத்துக்கு மாற்றுக்கருத்தில்லை.

¿ÁÐ இந்தியாவைப்போல் சீனாவும் ஒரு பழமையான தேசம். இவர்கள் வரலாற்றை பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக உள்ளது.