Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

6/29/2012

தாய்லாந்து தரிசனம்.


விழிகளுக்கு விருந்தளித்த தாய்லாந்து தரிசனம்!
Posted Date : 14:03 (02/03/2012)Last updated : 17:03 (02/03/2012)
கட்டுரை, படங்கள்: சுபாஸ்ரீ மோகன்


உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளுள் ஒன்று, தாய்லாந்து. இந்நாட்டை வலம்வர வேண்டும் என்ற ஆவல், அண்மையில் நிறைவேறியது.

பீஜிங் விமான நிலையத்தில் இருந்து பாங்காக் வந்து சேர்ந்தோம். தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையம் இனிதே வரவேற்றது. விமான நிலையத்தில், தேவர்கள...ும் அசுரர்களும் வாசுகியை கொண்டு பாற்கடலை கடையும் பிரமாண்டமான சிற்பம் வியப்பில் ஆழ்த்தியது. இந்திய கலாசாரத்தின் அடையாளம் மிக ஆழமாக அங்கு பதிந்திருப்பதை உணர முடிந்தது.

தாய்லாந்து தலை நகரம் பாங்காக். தாய் நாணயம் 'பாட்' என்று அழைக்கபடுகிறது. இந்திய குடிமக்களுக்கு இங்கு நுழைவனுமதி (விசா), பாங்காக் விமான நிலையத்திலே மிகவும் எளிதாக வழங்கப்படுகிறது. 


 அன்றிரவு தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் ஓட்டுனரிடமே தாய்லாந்தின் கலாசாரத்தை பற்றி சில விஷயங்களை தெரிந்துக்கொண்டோம். மறுநாள் பாங்காக்கை சுற்றிப் பார்க்க கிளம்பினோம்.

காலையில் வெவ்வேறு புத்தர் கோயில்களை தரிசிக்கச் சென்றோம். எல்லா கோயில்களும் பிரமாண்டம் என்றாலும், குறிப்பாக வாட்போ எனும் பள்ளிக்கொண்டிருக்கும் புத்தர் கோயில் எல்லோரையும் அசரவைத்தது. தங்கத்தினால் அமைக்கபட்ட இந்தப் புத்தர் சிலையின் எடை சுமார் ஐந்து டன்!

சுற்றுலா செல்லும்போது வழிகாட்டியிடம் தாய்லாந்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டோம். அதில் சில தகவல்கள்...



தாய்லாந்து மிகவும் அழகான தென்கிழக்கு ஆசிய நாடு. தாய்லாந்து மொழியில் 'தாய்' என்றால் சுதந்திரம் என்று பொருள். யாருடைய ஆதிக்கத்துக்கும் கட்டுப்படாமல் இருந்த ஒரே ஆசிய நாடு இதுதான்.

புகைவண்டி வசதியும் தரைவழி போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தால், எல்லா செயல்களும் நீர்ப் போக்குவரத்தின் மூலமாகவே நடைபெற்றது. நீர் நிலைகளையும், ஆறுகள், பாசன வசதிகள் போன்றவற்றை தங்களது (தாய் மக்கள்) கட்டுபாட்டுலேயே வைத்து இருந்ததினால், அந்நிய நாட்டினரது ஆக்கிரமிப்பு எதுவும் நிகழவில்லை.

 இங்கு இன்றளவும் மன்னர் ஆட்சி தான் நடைமுறையில் உள்ளது. மன்னரை தெய்வமாக வணங்குகிறார்கள். பொது இடங்களில் மன்னரின் திருவுருவ புகைப்படங்கள் ஆங்காங்கே தென்படுகிறது.

 தாய்லாந்தில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கிறார்கள். 'லிட்டில் இந்தியா' எனக் கூறப்படும் பஹுரத் என்ற இடத்தில் இந்திய உணவு விடுதிகளும், இந்தியப் பொருட்களும் கிடைக்கிறது. சிவன், லட்சுமி மற்றும் விஷ்ணு கோயில்களும் இங்கு உள்ளன.

மலையும், மலைச்சார்ந்த நீர் வளமும், இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்ட வளமான தாய்லாந்தில், வழி எங்கும் ஏராளமான கடற்கரைகளும், தென்னை மரங்களையும் பார்க்கும்போது கேரளா நினைவுக்கு வருகிறது. இந்தக் கடற்கரைகள் வெளிநாட்டுப் பயணிகளையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்கின்றன.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும், நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்றதால், தாய்லாந்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறையவே இல்லை!

1 comment:

R.Gopi said...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

நான் சுற்றுலா செல்ல நினைத்திருக்கும் வெகு சில நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று.....

பதிவு சின்னதா எழுதினாலும் அதிலும் நிறைய விஷயங்களை உள்ளடக்கி விட்டீர்கள்....

தாய்லாந்து பற்றி இன்னமும் விரிவாக எழுதுங்கள்... படிக்க ஆவலாக உள்ளேன்....