1974 ஆம் வருடம் விவசாயிகள் தங்களது விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணை வெட்டினார்கள். அப்போது தலை, கை, கால் உடம்பு என்று தனிதனி அவய உருப்புகள் கிடைத்தன. விவசாயிகள் பயந்து விட்டார்கள். திரும்ப , திரும்ப தோண்டிய போது அத்துடன் இரும்பு உலோகங்களும், களிமண்ணால் செய்த அவயங்களும் இடையிடையே கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுத பொருள்களும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
இது பிசாசின்
செயலாக இருக்குமோ என்று நினைத்து சீன அரசாங்கத்திடம் முறையிட்டனர் விவசாயிகள். பின்
சீன அரசாங்கம் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர் குழுக்களை ஆராயும்
பணியை ஒப்படைத்தது. அப்போது தான் சீனாவின் மற்றொருஅதிசிய உலகத்தின் கதவு திறந்தது. கி.மு. 246 ம் ஆண்டு
சைனாவின் சின் வம்சத்தைசேர்ந்த பதிமூன்று வயது பாலகன் அரியனை ஏறினான். பாலகன் என்றாலும்
மிகவும் திறமைசாலி. பலருடன் போரிட்டு எல்லா இடங்களையும் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். சி ஷி ஹுவாங் என தன்னை அழைத்துக்கொண்டான். சில நல்ல செயல்களையும் செய்தான். நாணயத்தை தேசியமயமாக்கினான். எடை கற்களையும் கண்டுபிடித்தான்.
அளவுக்கதிகமான
எதிர்பால் விளைந்த பயத்தால் எந்த நேரமும் தாம் இறப்போம் என்றெண்ணிதன் இறப்புக்கு பின்னும் இறவா வாழ்வு வாழ எண்ணினான். சுமார் ஏழு
லட்சம் பணியாளர்களை கொண்டு 39 ஆண்டுகளாக ஒரு பிரம்மாண்டமான அரண்மனையை பூமிக்குள் உருவாக்கினான் விவசாயிகள், போர் வீரர்களை மாடலாக நிற்க வைத்து சுடுமண் சிற்பம் செய்ய சொல்லி ஆணையிட்டான். சுடுமண் வீர்ர்களின் சிலை மேல் இரசாயன பூச்சும், சாயமும் பூசப்பட்டதால் கத்தி போன்ற ஆயுதங்கள் இன்று வரை துருபிடிக்காமல், அதன் கூர்மை தன்மை மாறாமல் இருக்கிறது.அவன் இறந்தவுடன் அவனது உடலை பாதுகாக்கவும், அவன் திரும்ப வரும்போது இந்த வீர்ர்கள் தமக்கு பணிவிடை செய்வார்கள் என நம்பினான். மூன்று கூடாரங்களில்
சுமார் ஏழாயிரம்
சிப்பாய்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி சீனாவின் மரபு செல்வ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.
1 comment:
பழமை தேசத்தினது பற்றிய உங்களது பகுப்புகள் எங்களுக்கு என்றும் புதினமே......நன்று
இங்கும் பழமையான சுரங்கம் உண்டு உங்களை போல் தகவல் கொடுக்க தான் ஆளில்லை
பல குகை கோவில்கள் படுக்கைகள் கேட்பாரற்று சிதிலமடைந்து கிடப்பது தான் இங்கத்திய நிலைமை
அடடே கல்லறையை சுற்றி மெர்குரி இதுவும் புதுமை தான்
Post a Comment