Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

2/13/2013

சீன புத்தாண்டு விழா

சினேக் வருட புத்தாண்டு திருவிழா சீனாவில் நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் அலங்கர விளக்குகள், சிவப்பு கூண்டு விளக்குகள், மலர்களின் அலங்காரம் மனதை கொள்ளை கொள்கின்றன. சென்ற ஆண்டு தாய்லாந்து, கம்போடியா சென்றுவிட்டோம். இந்த ஆண்டு பெய்ஜிங்கின் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்தோம். ஏற்கனவே சீன மக்கள் இந்த கொண்டாட்டத்திற்கு ஒருவருட திட்டமிடுதலை செய்கின்றனர். 9 நாள் கொண்ட விடுமுறைக்கு தயார்செய...்துகொண்டு தனது ஊருக்கு செல்கின்றனர். அதனால் மெட்ரோ, பஸ் எல்லாம் காலியாக இருந்தது.
 எங்களுடைய ஒட்டுனரும், வீட்டு வேலைசெய்யும் உதவியாளர்களும் கூட ஒரு வாரம் விடுப்பு எடுத்துகொண்டு சென்று விட்டனர். அதனால் நாங்கள், இங்கிருக்கும் எங்களது நண்பர்கள் பெய்ஜிங்கின் ஒரு மூலை கூட விடாமல் சுற்றி பார்க்க திட்டமிட்டோம். பருவனிலை மைனஸ் 10 வரை. அதனால் எவ்வளவு உடைகள் அணிய முடியுமோ அவ்வளவு உடைகள் அணிந்து கொண்டோம்.

முதல் நாள் 798 என்ற இடத்திற்கு சென்றோம். எல்லோரது படைப்புகள் எல்லாம் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் இடம் அது. ஆனால் நாங்கள் சென்றிருந்த சமயம் அது மூடியிருந்தது. பணியாளர்கள் எல்லோரும் தம்தம் ஊர்களுக்கு சென்றுவிட்டதால் புத்தாண்டிற்கு பிறகு தான் மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி. 40 பைசா குடுத்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால் எவ்வளவு தூரமும் செல்லலாம். பேருந்து எல்லாம் தாழ்வு பேருந்து. பஸ்ஸில் ஹீட்டர் வசதி செய்யப்பட்டிருக்கும்.பேருந்திலும், மெட்ரோவிலும் சுத்தம் என்றால் அப்படி ஒரு சுத்தம். அவ்வப்போது டிக்கெட் எடுத்து கொள்ளலாம் அல்லது 20 யுவானுக்கு ஒரு கார்டு வாங்கி கொண்டால் அதை எப்போது வேண்டும் என்றாலும் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். முதலில் பேருந்தில் ஏறும்போதும் அந்த கார்டை கார்டு ரீடரிடம் எண்டரி செய்துகொண்டு செல்லவேண்டும். இறங்கும்போதும் கார்டை காண்பித்து எண்டரி செய்துகொள்ளவேண்டும். இல்லை எனில் 2 யுவான்
கழிக்கபட்டுவிடும். எண்டரி செய்தோமானால் 40 பைசாவுடன் முடிந்துவிடும். அதே மாதிரி தான் மெட்ரோவிலும் ஒரே ஸ்மார்ட் கார்டு பஸ், மெட்ரோ ரயில், டாக்ஸி எல்லாவற்றிற்கும் உபயோகபடுத்திக்கொள்ளலாம். டிரெய்ன் அப்பா பாரீஸீல் எல்லோரும் தடையை மீறி குதித்து சென்ற ஒழுங்கீனம் என்னை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் சீனா, ஜப்பான், கொரியாவில் ஒரே சிஸ்டத்துடன் கூடிய ஒழுங்கு முறை இருக்கும் அடுத்து செளவ்யாங் பார்க்கில் ஸ்பிரிங் கார்னிவெல் இருந்தது என்று சென்றால் கடைகள் மட்டும்
 தான் இருந்தது. எல்லா கடைகளிலும் பொம்மைகள்,விளையாட்டு சாமான்கள் எல்லாம் இருந்த்து, ஆனால் விற்பவர்கள் யாருமில்லை. ஆனாலும் யாரும் எந்த சாமானையும் எடுத்துகொண்டு செல்வதில்லை. திறந்தவெளி கடைகளை மட்டும் புகைபடம் எடுத்துகொண்டு.

இரண்டாம் நாள் கேபிடல் மியூஸியம் சென்றோம். 5 மாடிகள் கொண்ட மியூஸியத்தில் (நல்லவேளை இது மூடியிருக்கவில்லை) முதன் தளத்தில் எல்லா மதத்தின் அடையாள குறிகள், எல்லோரது மதத்தின் சின்னங்கள், எந்த நாடுகளில் எந்த மதம் பின்பற்றப்படுகிறது, பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்ற ஒளிபடம், வரைபடம், படங்கள் எல்லாம் இருந்தது. அடுத்து சீனாவின் போர்ஸலின் உபயோகங்கள், விதவிதமான போர்சலின் ஜாடிகள், குடுவைகள், தட்டுகள், காப்பி கோப்பைகள் என்ற அணிவரிசைகள் அலங்கரித்திருந்தன.
சீனத்து ராஜாக்களின் உடைகள், போர்தளவாடங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பலவிதமான பொருள்கள், இருந்தன.



அதற்கடுத்த தளத்தில் சீனாவின் புத்தமத அறிமுகம் அதை பின்பற்றி சீனர்கள் அதை அவர்களுக்கேற்ப புத்தர், போதிசத்துவர், நமது சரஸ்வதி, போன்ற கடவுளர்களின் திருவுருவங்களை சீனத்து பாணியில் சற்றே மாற்றி அறிமுகம் செய்த புத்தரின் சிலைகள், சீனாவில் புத்த மதம் தோன்றிய வரலாறு, அழகான குட்டி சித்தார்தர் சிலை,எல்லாம் மிகவும் அழகு. அதை சீனர்கள் பராமரிக்கும் விதமும் அழகு தான். அடுத்த தளத்தில் சீனாவின் பெய்ஜிங் ஓபரா நாடகமும் நடந்தது.கடைசி தளத்தில் சீன வரலாறு அவர்கள் கண்டிபிடித்த வெடிபொருள்கள், காகிதம் பயன்பாடுகளின் குறிப்புகள், படங்கள் அதை கண்டுபிடித்தவர்களின் கெயெழுத்து பிரதிகள் எல்லாம் பத்திரமாக கண்காட்சியில்
வைக்கபட்டிருந்தன. ஒரு பக்கம் சீன வரலாறு மறுபக்கம் உலக வரலாற்று நிகழ்சிகள், போர்கள் நடந்த வரலாற்று குறிப்புகள் விளக்க படங்கள் எல்லாம் வரிசைபடுத்தபட்டுள்ளன. சீன விடுதலைக்கு போரிட்ட வீர்ர்கள், சீன கவிஞர்கள், அறிவியல் மேதைகள், கணித வல்லுனர்களின் குறிப்புகள் எல்லாம் கண்காட்சியில் இருந்தது. ஒருவழியாக பார்த்து முடித்துவிட்டு சீன வரலாற்றின் பக்கங்களை புரட்டிவிட்டு வந்தோம். அடுத்த நாள் பெரிய பெரிய பார்க்குகள், பள்ளி, கல்லூரி மைதானங்கள் எல்லாவற்றிலும் டெம்பிள் பேர் என்று சீன பாரம்பரிய கலைகள் பக்கம் பக்கமாக நடிபெறுகிறது. அதில் அவர்கள் நடனக்கள், தாய்ச்சி என்ற உடற்பயிற்சி, குங்பூ, நடனங்கள், எல்லாம் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதெல்லாம் பார்த்த எங்களுக்கு இழந்த சிறுவயது திருவிழா நியாபகங்களை மீட்டிஎடுத்து கொண்டு வந்தோம்.




 

3 comments:

CB Mohan said...

ஷின் நியான் குவாய்ல !!

Unknown said...

Superb epadi subscribe panarathu ??

Unknown said...

Superb epadi subscribe panarathu