Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

5/23/2013

எனது முதல் தாய்ச்சி வகுப்பு..


சில மறைக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் பகிங்கரப்படுவது போல நேற்று ஒரு சம்பவம். இங்கு இருக்கும் நண்பர்கள் எப்போதும் 15 நாள்களுக்கொரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, கும்மாளமிட்டு தான் திரும்புவார்கள். இந்த தடவை எல்லோரும் ஊருக்கு செல்ல இருப்பதால் அவசரமாக பைனல் பிராஜக்ட் வேலையில்  எல்லோரும் பிஸி. ஒருநாள் தாய்ச்சி பற்றிய பேச்சு வந்தது. தாய்ச்சி இங்கே சீனாவில் யோககலை மாதிரி .அதை நான் கத்துக்கலாம் என்று இருக்கேன் என்றதற்கு இது வயசானவங்க ரோட்டுல கை காலை ஆட்டி ஆட்டி பண்ணறது இது ஒரு உடற்பயிற்சி மாதிரி அதை போய் கத்துக்கபோறியா, அதுவும் நீயே நிறையா யோகா வகுப்பு எல்லாம் சென்றிருக்கிறாய்  என்று உடனே இங்கிருக்கும் குட்டிசாத்தான்கள் முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள்.  எனக்கு எப்போவுமே வகுப்புக்களுக்கு செல்வதென்றால் ரொம்ப ஆர்வம். அதுவும் யோகா, தியான வகுப்புக்கள் என்றால் நானும், சி.பி. யும் இந்தியாவில் இருக்கும்போது எல்லா வகுப்புக்களுக்கும் சென்று விடுவோம். நீண்ட நாள்களுக்கு பின் என் சீன தோழி சுபா இந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் தாய்ச்சி வகுப்பு கலந்துக்கோ உனக்கு பிடிக்கலைனா அடுத்த வாரத்திலேருந்து வரவேண்டாம் நானும் உன்னை கட்டாயபடுத்த மாட்டேன் என்றாள் சரி போய்தான் பார்ப்போமே என்றூ நேற்று கிளம்பினேன்.இதுங்ககிட்ட ஒண்ணும் சொல்லலை. ஏன்னா ஒருநாளுக்கு எப்படி இருக்கு நு பார்த்துட்டு வந்துடுவோம் என்று சொல்லாமல் சென்றேன்.  இங்கே இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் எப்போதும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று விட்டால் போன் செய்யமாட்டார்கள். எதாக இருந்தாலும் மெசேஜ் தான் முகநூலில். அதனால் யாரும் நமக்கு கால் பண்ண மாட்டார்கள் என்று கிளம்பிவிட்டேன். அப்போது இந்த பக்கிங்கள்ள ஒன்னு என்னை கால் பண்ணியிருக்கு. உடனே என் பையன் அம்மா தாய்ச்சீ கிளாஸ் போய் இருக்கா என்றதும் உடனே எல்லா பக்கிங்களுக்கும் போட்டு குடுத்தாச்சு முதல் பக்கி. நான் வரும்வரை காத்துகொண்டிருந்துவிட்டு எல்லாத்துக்கும் விஷயம் பரவி சுபா தாய்ச்சி வகுப்பு எப்படி இருந்தது என்று ஒரே காலாய்பு. ஆனால் போனவுடன் தான் தெரிந்தது எதையுமே ஆராயமல் சொல்ல கூடாது நு, காலுடன் கையும் சேர்ந்து 4 திசைகளிலும் சுற்றி கையும், காலும் உடம்பின் எல்லா பாகங்களுக்குமான பயிற்சி. இதை இதுங்க கிட்ட சொன்னா நம்ப மாட்டேங்குதுங்க. 

No comments: