Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

10/27/2013

Bhaag Milkha Bhaag


Bhaag Milkha Bhaag இயக்குநர் ராகேஷ் மெஹ்ரா . 

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை நிலை நாட்டிய ஒரு வீரனின் உண்மை கதை. இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது எடுத்த நிகழ்வுகள், பணமில்லாமல் சாதித்த ஒரு வீரனின் நிகழ்வு வலிகள் சுமந்தவை, பெருமைக்குரியவை. பிளேபாய் வேடத்தில் கலக்கிய ஃபர்ஹான் இதில் மில்காவாக வாழ்ந்திருக்கிறார். அடடா என்ன அற்புதமான நடிப்பு. மனிதர் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். கர்ணன் என்றால் உடனே நம் கண்களுக்கு முன் வருவது நடிகர் திலகம் தான். அதே போல மில்கா என்றால் இப்போது கண்டிப்பாக நம் கண்ணிற்க்கு முன் தெரிவது ஃபர்ஹானாகத்தான் இருக்கும்.

இந்த படத்தை பார்த்த உடனாவது கிரிக்கெட் மட்டுமே விளையாட்டில்லை என்ற நிலை வந்தால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிப்பதாக இருக்கும். மில்கா சிங் உலகளவில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆனால் ஒலிம்பிக்கில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் பிளையிங் சீக் என்று பாகிஸ்தான் அதிபரிடமிருந்து அவர்டு வாங்கியது பெரிமைகுரியது.

இது உன்னுடைய கடைசி ஓட்டமாக இருக்கும் என்ற கேலிக்கு மில்கா நான் ஓடுதும் கடைசி என்று எண்ணிக்கொண்டே தான் ஓடுவேன் என்று சொல்லுவது பளிச். இன்னும் நினைவலைகளில் சில தினங்களுக்கு மில்காவும், ஃபர்ஹானும் வந்து போவார்கள். இந்த படத்தில் டோக்கன் பணமாக திரு மில்கா சிங் வாங்கியது ஒத்தை ரூபாய்..

10/12/2013

காவல் துறை நண்பன்..

சில நல்ல நண்பர்களின் செயல்களோ, அல்லது அவர்கள் நமக்கு செய்த உதவிகளோ என்றும் காலத்தை கடந்தும் நம்மை சுத்திகொண்டே இருக்கும். அப்படி ஒரு நண்பர்..  
அன்றொரு நாள் அப்பாவிடன் நண்பர் சர்ச் பாதர் லூயிஸ் உங்க பெண் மேல்கலை படிப்பு படிக்க செல்லும் முன் என் சர்ச்சில் நடக்கும் பள்ளியை பார்த்துக்கொள்ளலாமே என்றார், எனக்கும் குழந்தைகளோடு கும்மாளம் ரொம்ப பிடிக்குமே அதனால் ஒத்துகொண்டேன். எல்லா குழந்தைகளுக்கும் ரொம்ப பிடித்திருந்தது என் அணுகுமுறை. ஆனால் இன்னொரு ஆசிரியை ரொம்ப கண்டிப்பு, ஏதாவது எழுதவில்லை எனில் கைவிரல் பழுத்து போகும்.. எனக்கு தான் பாவமாக இருக்கும்.
எல்லா குழந்தைகளும் என் வகுப்புக்கே வரவேண்டும் என்று அடம்..இதெல்லாம் இன்று நினைத்தாலும் ரம்மியமாக இருக்கிறது. அப்பொழுது பள்ளி ஆண்டுவிழா பாதர் நீங்களே வசூலித்து நடத்துங்கள் என்று சொல்லிவிட்டார். கஞ்சபிசினாரி பாதர், ஆனாலும் அப்பாவின் நண்பர் ஆயிற்றே. குழந்தைகள் ஒரே குதுகலத்துடன் இந்த ஆண்டுவிழாக்கு நீங்க இருப்பீங்க இல்லை என்று கேட்டுகொண்டது வேறு, உடனே கண்டிப்பா இருக்கேன் என்று உறுதி கூறினேன்.
எனது நண்பரும்  சரித்திர ஆசிரியருமான முருகானந்தம் , மருத்துவர் விஜய்ராஜ், எல்லோரிடமும் வசூல் வேட்டை தொடங்கியது. அதை கணக்கெழுதி பரிசு பொருள்கள் வாங்கி ஆண்டுவிழா செலவுக்கு வைத்திருந்தோம். அன்று கூட பணிபுரியும் ஆசிரியை வரவில்லை. அதனால் மொத்த பணமும் என்னிடம் இருந்தது. பள்ளி விடும் மணியோசை கேட்டது. உடனே பிரேயர் முடித்து பசங்களை வீட்டிற்கு விட கேட் திறந்து விடவேண்டும். 12.30 சாப்பிட்டு விட்டு குழந்தைகள் தூங்கிவிடும். 1.30 எழுப்பி பாடம். 3.30 வீட்டுக்கு விட்டுவிடுவோம். கேட் மூடியே இருக்கும். ஆயா பாட்டி பெல் அடித்த உடன் கேட் திறந்து விடுவார்கள். சிலர் தானே, அல்லது பெற்றொர் வந்து அழைத்து செல்வார்கள். அப்போது கையில் வைத்திருக்கும் பணம் சர்ச்சில் இயேசு கிறித்துவின் முன் இருக்கும் ஒரு மேடையில் வைத்து விட்டு பிரேயர் ஆரம்பித்து விட்டேன். அங்கு மூன்று வழிகள் எந்த பகுதியிலும் இறங்கலாம். வாசல், வலது, இடது என மொத்தம் மூன்று வழிகள் .குழந்தைகள் சென்றதும் சர்ச்சினுள் வந்து பார்த்தேன். பணம் காணவில்லை. திக் என்றது. நானும், ஆயா பாட்டியும் தேடினோம். ஆயா பாட்டி ரொம்ப நல்லவர்கள். அவர்களை சந்தேக படமுடியாது. ஒரே அழுகை. வீட்டில் வந்தால் ரொம்ப திட்டு கிடைக்கும். இன்னும் 4 நாள்களே இருந்தன விழாவிற்கு. வீட்டில் சொன்னேன். வசமாக திட்டு கிடைத்தது. கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை என்று போலீஸ் ஸ்டேஷன் போவது அப்போது அந்த கிராமத்தில் அதுவும் பெண்கள் போவது நினைத்து கூட பார்க்க இயலாது. அப்பா Block Development Officer. அதனால் மூன்று வருடத்திற்கொரு முறை மாற்றம். ஆனாலும் என்ன செய்ய நான் தொடந்து போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அப்போது தான் புது இன்ஸ்பெக்டர் மாணிக்கம் பொறுப்பேற்று 8 மாதங்கள் இருக்கும். திருடு, ரவுடி எல்லாவற்றியும் ஒழித்து கட்ட துடிப்புடன் செயலாற்றி கொண்டிருந்தார். பள்ளி செல்லும்போது அவர் பைக்கில் போகும் சத்தம் , சினிமா விட்டு சென்றால் அவர் பைக் செல்வது எல்லாம் காதில் விழும். அப்படி எல்லோரையும் கண்காணிக்கிறாராம் என்று ஊரில் பேசிகொள்வார்கள்.நிஜமாகவே அப்போது ஊரில் எந்த பிரச்சினையும் நடக்காமல் செமையா பார்த்துகொண்டார். 

 நான், பாட்டி நேரே போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். இன்ஸ்பெக்டர் இருந்தார். அப்போது என்ன பேசுவது என்று தெரியவில்ல. நேரே அவரிடன் சார் போலீஸ் ஸ்டேஷனில் போனா பணம் எல்லாம் குடுக்கனும், வேலை ஒண்ணும் நடக்காது என்று சொல்கிறார்கள், என்னிடம் பணம் இல்லை, உங்களுக்கு குடுக்க, ஆனால் எனக்கு உதவி வேணும் என்றேன். அவர் எனது பேச்சை கேட்டு சிரித்து விட்டு என்னையும், பாட்டியையும் விசாரித்தார். சரி நான் விசாரித்து சொல்கிறேன் என்றார். இன்னும் 4 நாள்கள் தான் இருக்கின்றன. என்ன செய்ய என்ற கவலை. எல்லோரையும் கூப்பிட்டு இருந்தேன். அப்பா ஊரில் நியாயமான அதிகாரி என்று பேரெடுத்திருந்தார். என்னால் ஏதாவது தவறு ஏற்பட்டு விடுமோ என்று பயந்தேன்.

 2 நாள் ஆனது. மாணிக்கம் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு விட்டிருந்தார். இந்தா உன் பணம் கிடைத்து விட்டது என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. நிஜமாவா என்றேன். நிச்சயமா தான் நீ போய் விழா ஏற்பாடுகளை நடத்து, நானும் விழாவிற்கு வருகிறேன் என்றார். வாவ் கடவுளே..உன் கருணையே கருணை..யாரோ ஒரு பையனின் அம்மா எடுத்து சென்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் பணக்கார வீடு. அவர்களுக்கு அன்னிக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. பையனை அழைக்கும் சாக்கில் பர்சை எடுத்து தனது ஜாக்கெட்டில் சொருகிவிட்டார். இதை இன்னொரு பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் போலீஸ் அதிகாரியின் குட்டி பையன் சொல்லிவிட்டான். அவன் எப்போதும்,பள்ளி வரும்போது அழுது கொண்டு வருவான். அவனை தூக்கி கொண்டே இருக்க வேண்டும். அழுது அழுது தூங்கிவிடுவான். அவன் அம்மாவும் பள்ளி ஆசிரியராக் இருந்தார். அதனால் அவர்கள் அவனை இங்கு கொண்டு விட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள். அவன் அம்மா, அப்பாவிடம் மிஸ் பாவம் அழுதுகிட்டு இருக்காங்க, ஆனால் மிஸ் பர்ஸை அந்த முருகனோட அம்மா எடுத்து வச்சுகிட்டாங்க என்றிருக்கிறான்.

அவன் அப்பா இதை கேட்டு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிருக்கார். உடனே மாணிக்கம் அந்த குழந்தை வீட்டிற்கே வந்து வழக்கமாக் போலீஸ் எப்படி விசாரிக்கனுமோ அப்படி விசாரித்திருக்கிறார். 10 தடவை வேறு மாதிரி கேட்டாலும் அவன் அதையே தான் சொல்லிகொண்டிருந்தான் அந்த குட்டி பையன். உடனே எடுத்தவர்களை விசாரிக்க அவர்கள் ஒத்துகொள்ளவில்லை. ஆனால் எப்படியோ எல்லொருக்கும் பொதுவாக ஊர் பெரிய மனிதர்களிடம் சொல்லி மாணிக்கம் பணத்தை வாங்கி என்னிடம் குடுத்துவிட்டார். இத்தனைக்கும் நான் ஒரே தடவை தான் போனேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு. 2 நாளில் இதை கண்டுபிடித்து குடுத்து விட்டார். விழாவுக்கு அவரும் வந்திருந்து மாணவர்களுக்கு பரிசும் அளித்தார். அதிலிருந்து நானும், அவரும் ரொம்ப நண்பராகிவிட்டோம் அவர் மாற்றுதலாகும் வரை. இன்று அவர் எங்கு இருக்கிறாரோ ஆனால் அவர் நினைவுகள் எப்போதும் என்னிடம்..

8/19/2013

நாஞ்சிங்
நான்சிங் முதலில் சீனாவில் தலை நகராக இருந்தது. அதனால் தலைநகரத்திற்குரிய கம்பீரம் சிறிது குறையாமல் மூன்று மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்த இடமாகும்.
டாக்டர் சன்யாட் சென் நினைவாலயம்..
இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் ஒரு முக்கிய தலைவராக கருதப்பட்டவர். இவரது மூன்று முக்கிய கொள்கைகள். தேசியவாதம், குடியரசு, மக்களின் வாழ்வாதாரம் . ஆப்ரகாம் லிங்கனின் கருத்துக்கள் இவரை ரொம்ப கவர்ந்தது. இவர் ஹாங்காங்கில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் சில இளைஞர்களில் இவரும் ஒருவர். மருத்துவராக பணிபுரிந்தாலும் பொதுவாழ்வில் மிகவும் ஆர்வம் இருந்தது. இவருக்காக கட்டப்பட்ட இந்த நினைவாலயம் 1929 ஆண்டு கட்டப்பட்டது.  இயற்கையான நீலமலையில் சுற்றிய இடங்களில் எல்லாம் பச்சை பசேலென்ற இயற்க்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. நீல மலை, மிங் கல்லறை எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதால் எல்லா மக்களும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

மிங்ஷியாவ்லிங் நினைவாலையம்.
மிங்ஷியாவ்லிங் பேரரசர் ஜீயுவாங்ஜாங் என்ற மிங் வம்சத்தை சேர்ந்த பேரரசரின் நினைவாலயம். இது சுமார் 600 வருடப் பழமையான கட்டிடம். இந்த நினைவாலயத்திற்கு இரு பிரிவுகள் உள்ளன. இதை சுற்றி 45 கி.மீ சுற்றளவில் கல் சுவர் உள்ளது. விலங்குகளின் சிலைகள் இந்த நினைவாலயத்தை பாதுகாப்பது போல வடிவமைத்துள்ளார்கள். இங்கு மன்னர் தன் அமைச்சர்களுடன், படை தளபதிகளுடன் வலம் வருவதாக நம்பிக்கை இன்றும் உள்ளது. இந்த நினைவாலயம் சிவப்பு வர்ணத்தில் காண்பதற்கு கம்பீர அழகோடு காட்சியளிக்கிறது.

குடியரசு தலைவர் மாளிகை.
குடியரசு தலைவரின் மாளிகை ஒரு பிரம்மாண்டமான கட்டிடம். தாய்பிங் வம்சத்து மன்னரும், 20 நூற்றாண்டின் குடியரசு தலைவர்களும் இந்த மாளிகையில் வசித்து வந்தார்கள். அவர்கள் உபயோகித்த மேஜை நாற்காலிகள், தாய்பிங் காலத்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள மேஜை மரத்தாலான அலங்கார சின்னங்களும் இங்குள்ள ரகசிய அறையில்பத்திரப்படுத்தி பாதுகாக்கபட்டு வருகிறது. 1911 ஆண்டு டாக்டர் சன்யாட்சென்னும் இந்த மாளிகையில் வசித்துவந்துள்ளார்.
லிங்கு டெம்பிள்.
புத்த மதகோவில் இது நீலமலையில் இருக்கிறது. லிங்கு கோவில் இடிக்கப்பட்டு சில நினைவாலயங்கள் கட்டப்பட்டன. ஆனால் பின் லிங்கு கோவில் மறுபடியும் திரும்ப கட்டப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் மூன்று கட்டிடங்கள் உள்ளது. இங்கிருக்கும் புத்த விக்கிரகம் சீன துறவி இந்தியாவிலிருந்து புத்தமத சித்தாந்தங்களையும் கோட்பாடுகள் கொண்ட வரைபடங்கள், புத்தரின் உருவசிலை எல்லாவற்றையும் எடுத்து வந்து இங்கு புத்த மதத்தை தனது சீடர்களுக்கும் சொல்லி குடுத்து இந்த கோவிலை கட்டினார்.
சன்யாட்சென்னின் நினைவாலயம், லிங்கு டெம்பிள், மிங்ஷியாவ்லிங் நினைவாலயம் மூன்றும் ஒரே வளாகத்தில் உள்ளது. பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று பார்க்க சைக்கிள், பேருந்து, எலக்ட்ரிக் கார் வசதிகளும் இருக்கிறது.

நாஞ்சினில் ஜப்பானியர்களினால் இறந்தவர்களின் நினைவாலயம்.
1937 ஆம் ஆண்டு ஜப்பானியர்கள் ஷாங்காயிலிருந்து நாஞ்சினுக்கு வந்து போரிட்டு பொதுமக்களை எல்லாம் கொன்று குவித்தார்கள்.  இந்த ஜப்பானிய படைதுருப்புகளால் 3 லட்சம் மக்கள் இறந்துள்ளனர். 20,000 பெண்கள் மானபங்க படுத்தப்பட்டுள்லனர். இந்த இடத்தில் இறந்தவர்களது எலும்பு கூடுகள் பத்திரப்படுத்தி, இறந்தவர்களின் பெயர்கள் எழுதிய நினைவு தூண்களும், அவர்களை பற்றிய குறிப்புகளும் காணபெறுகின்றன. இந்த வரலாற்றில் இது மறக்கபடாத ஒன்று.


Terracotta warrier சுடு மண் சிற்பங்கள்

1974 ஆம் வருடம் விவசாயிகள் தங்களது விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய மண்ணை வெட்டினார்கள். அப்போது தலை, கை, கால் உடம்பு என்று தனிதனி அவய உருப்புகள் கிடைத்தன. விவசாயிகள் பயந்து விட்டார்கள். திரும்ப , திரும்ப தோண்டிய போது அத்துடன் இரும்பு உலோகங்களும், களிமண்ணால் செய்த அவயங்களும் இடையிடையே கத்தி, ஈட்டி, அம்பு போன்ற ஆயுத பொருள்களும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.

இது பிசாசின் செயலாக இருக்குமோ என்று நினைத்து சீன அரசாங்கத்திடம் முறையிட்டனர் விவசாயிகள். பின் சீன அரசாங்கம் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர் குழுக்களை ஆராயும் பணியை ஒப்படைத்தது. அப்போது தான் சீனாவின் மற்றொருஅதிசிய உலகத்தின் கதவு திறந்தது.  கி.மு. 246 ம் ஆண்டு சைனாவின் சின் வம்சத்தைசேர்ந்த பதிமூன்று வயது பாலகன் அரியனை ஏறினான். பாலகன் என்றாலும் மிகவும் திறமைசாலி. பலருடன் போரிட்டு எல்லா இடங்களையும் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். சி ஷி ஹுவாங் என தன்னை அழைத்துக்கொண்டான். சில நல்ல செயல்களையும் செய்தான். நாணயத்தை தேசியமயமாக்கினான். எடை கற்களையும் கண்டுபிடித்தான்.

அளவுக்கதிகமான எதிர்பால் விளைந்த பயத்தால் எந்த நேரமும் தாம் இறப்போம் என்றெண்ணிதன் இறப்புக்கு பின்னும் இறவா வாழ்வு வாழ எண்ணினான். சுமார் ஏழு லட்சம் பணியாளர்களை கொண்டு 39 ஆண்டுகளாக ஒரு பிரம்மாண்டமான அரண்மனையை பூமிக்குள் உருவாக்கினான் விவசாயிகள், போர் வீரர்களை மாடலாக நிற்க வைத்து சுடுமண் சிற்பம் செய்ய சொல்லி ஆணையிட்டான். சுடுமண் வீர்ர்களின் சிலை மேல் இரசாயன பூச்சும், சாயமும் பூசப்பட்டதால் கத்தி போன்ற ஆயுதங்கள் இன்று வரை துருபிடிக்காமல், அதன் கூர்மை தன்மை மாறாமல் இருக்கிறது.அவன் இறந்தவுடன் அவனது உடலை பாதுகாக்கவும், அவன் திரும்ப வரும்போது இந்த வீர்ர்கள் தமக்கு பணிவிடை செய்வார்கள் என நம்பினான். மூன்று கூடாரங்களில் சுமார் ஏழாயிரம் சிப்பாய்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி சீனாவின் மரபு செல்வ பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.இன்றும் இந்த மன்னனின் கல்லறையை தோண்ட போதிய அளவு அறிவியல் தொழில் நுட்பம் தெரியவில்லை, ஏனெனில் அரசனின் கல்லறையை சுற்றி மெர்குரி லிக்விட் இருப்பதால் அதற்கு போதிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று சொல்லுகிறார்கள். அதற்கான முயற்ச்சியில் ஆராய்ச்சி குழு தீவிரத்துடன் உழைத்து வருகிறது.

6/24/2013

ஹாங்காங் (Hong Kong)

ஹாங்காங் (Hong Kong)


வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளில் ஹாங்காங்கும் ஒன்று. இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்துகொள்ளும் ஹாங்காங் தொடர்ந்து வளர்ச்சி அடையும் நாடுகளில் ஒரு முக்கியமான நாடாக கருதப்படுகிறது. பிரிட்டன் வசம் இருந்த ஹாங்காங்கை திரும்ப சீனாவிற்க்கு தந்துவிட்டாலும் ஹாங்காங்கிற்கு ஓரளவு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது சீனா. ஒரு நாடு இரு அமைப்பு என்ற முறையில் படிபடியாக கம்யூனிஸத்தை அமல்படுத்தி வருகிறது.

பிரிட்டனின் தாக்கத்தால் இந்த சீன மக்களுக்கு ஆங்கிலம், காண்டனீஸ், போர்ச்சுகீசியம், மாண்டரின் தெரிந்திருக்கிறது. இந்தியர்கள் பிரிட்டன் ஆட்சி காலத்திலேயே ஹாங்காங்கில் வாணிகம், தொழில்கள் செய்து குடியுரிமை பெற்று வாழ்க்கிறார்கள். ஹாங்காங் ஏர்போர்ட் கடலும், மலைகளும் சூழ்ந்த விமான பாதை தளமாக இயற்கையுடன் இணைந்து காணப்படும் விமான நிலையம் ஆகும். இயற்கையிலேயே மலைத்தொடர்களும் மலைக் குன்றுகளுமாகும்.ஆன இந்த பிரதேசத்தை  செதுக்கி செதுக்கி கடல் பரப்பை நிரப்பியும் சில மலைகளையே தரைமட்டமாக்கி மணல் நிரவி ஹாங்காங் தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது.

சுற்றுலா தொழில்கள் மிக அபரிதமாக வளர்ந்து வருகிறது. 1998 ஆண்டில் தொடங்கிய மிகப்பெரிய டிஸ்னிலேண்ட் கட்டப்பட்டு 2003 திறப்பு விழா நடத்தப்பட்டது. மாலை வேளைகளில் ஹாங்காங் துறைமுகத்தை ஒட்டிய சொகுசு கப்பல் சாவாரியும், மின்விளக்குக் காட்ச்சிகளும் மனதை ரம்மியக்க வைக்கும்.

ஹாங்காங்கில் ரயில்வே நிலையத்தில் சென்டிரலில் இருந்து சிறிது தூரம் சென்றவுடன்  விக்டோரியா பீக் என்ற இடத்திற்க்கு இருக்கும் மெழுகு சிலையை பார்ப்பதற்கு மலைபாதையில் செல்ல டிராம் வண்டி இருக்கிறது. வண்டிபாதை மலைபகுதிகளில் பயணிப்பதினால் நாமும் இயற்கையை ரசித்து கொண்டு செல்லலாம். மேலே செல்ல செல்ல என்ன உயரத்தில் பயணிப்பது ஒருவகையான சந்தோசம் தான். ஏதோ ஒரு வகை பயத்தில் நாம் இன்னும் இருக்கமாக ஒட்டுக்கொண்டு நம் இருக்கையை பிடித்துகொண்டிருப்போம் எங்கே விழுந்துவிடுவோமோ என்று. இங்கு அப்படியே பயணத்தின் போதே இந்த தீவின் அழகையும் வானவீதியில் பலவகையான மககூட்டங்களின்  வர்ணஜாலங்களை ரசித்துவிடலாம்.

அந்த இடத்தை அடைந்தவுடன் அங்கு கண்கவரும் ஓவியங்கள், கைவினை பொருள்கள், எல்லாம் கிடைக்கின்றன. முதலில் இங்கு உள்வருவதற்கு முன் வாயிலிலேயே ஒருவர் கையை கட்டிகொண்டு நின்றிருந்தார்.  நாங்கள் அவரை நிஜமாக ஒருத்தர் நின்றுகொண்டிருக்கிறார் என்று நினைத்தோம். என்னடா ஆடாமல் அசையாமல் இருக்கிறாரே என்று நினைத்தால் அவரும் மெழுகு சிலை என்று புரிந்து அட என்று ஆச்சரியப்படாமல் எங்களால் இருக்க முடியவில்லை. பூரூஸ்லி, ஜாக்கிசான், பீட்டில்ஸ், காந்திஜி,மாவோ, டயானா, ஐஸ்டின், அமிதாப்பட்சன், போன்றவர்களின் உருவங்கள் தத்ரூபமாக வியக்க வைக்கிறது.

நோவாவின் பேழை என்ற இடம் மாவன் தீவில் உள்ளது. இது சென்ட்ரலில் இருந்து கடல் வழியாக மட்டுமே பயணிக்கலாம். பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற எண்ணிய  கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்பட்ட கப்பல் "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஜோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது.

அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் இருந்த விலங்குகள் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு வெளியேறுகின்றன." என்பது பைபிள் கூறும் கதையாகும். பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கில் இருந்து தப்பிய ஒவ்வொரு ஜோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் தத்ரூபாமாக உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட ஜோடி  விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விலங்குகளும் அதனதற்கே உரிய உருவ அளவில், அதனதற்கே உரிய நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்ப விலங்குப் பூங்காவைச் சுற்றி 1000 திற்கும் அதிகமான மரங்களை நட்டு இயற்கையைப் போலவே செயற்கையாய் உருவாக்கியிருக்கின்றனர். இவ்வாறான சிற்ப விலங்குப் பூங்கா இதுவே உலகில் முதன்மையானது ஆகும்.

இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.

நோவாவின் பேழைக்கு செல்லும் உல்லாசப் பயணிகளுக்கு விவரித்துக் கூறும், நோவாவின் பேழை பணியாளர்கள் உள்ளனர். ஆங்கிலம்  மற்றும் காண்டனீஸ் மொழிகளில் விவரிப்பாளர்கள் உள்ளனர்.

1982 புதிய உலக குழுமம் அன்ற நிறுவனம் சிம் சா சுயி கிழக்கில் கடலை ஒட்டிய நிலப்பரப்பில் அவென்யூ ஆப் ஸ்டார் என்ற இடத்தில் உள்ள சாலையை உருவாக்கியது.  இரவு நேரங்களில் மின்சார கதிர்விச்சின் விளக்கொளிகளின் அலங்கார வடிவமைப்புக்களையும் ரசித்துகொண்டே நடக்கலாம். இங்கு சில குறிப்பிட்ட முக்கியமான நாட்களில் வண்ண வான வெடி காட்சியும், மக்கள் வண்ண கதிர்வீச்சின் காட்சியையும் இந்த அவென்யூ ஆப் ஸ்டாரின் சாலையில் இருந்து ரசிப்பார்கள் அப்போது கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும். ஏராளமான் வெளிநாட்டினர் இதன் பார்த்து ரசித்த வண்ணம் அமர்ந்திருக்கும் காட்சியை காண முடிகிறது.

இந்த சாலையில் புகைபிடிக்க கூடாது, செல்ல பிராணிகளை அழைத்து செல்ல முடியாது, சைக்கிள், வண்டி எதுவும் இங்கு ஓட்டிச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மீறினால அபராத தொகை அதிக அளவில் இருக்கும். இந்த சாலையில் ப்ரூஸ்லியின் வெங்கல உருவ சிலையையும், இந்த சாலையின் நிலப்பரப்பில் ஜாக்கி சான், ஜெட்லி, போன்ற நட்சத்திரங்களின் கைதடங்களும், அவர்களின் பெயர்களுடன் கூடிய கையொப்பமும் பதித்துள்ளனர்.

இந்த வீதியில் திரைப்பட துறைச் சார்ந்த, படப்பிடிப்பாளர் சிலை, மின்விளக்கை ஏந்தி நிற்கும் உதவியாளர் சிலை, படப்பிடிப்பின் போது நடிகைகள் அமருவதற்கான வெங்கலக் கதிரை,  மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் போது பயன்படும் உபகரணங்களின் மாதிரி வடிவங்கள், காணப்படுகின்றன ஒரு திறந்தவெளி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும். இந்த திறந்தவெளி அரங்கின் முன்பாக உள்ள கட்டடத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஹாங்காங்  நட்சத்திரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒலிபரப்பபடும்.

ஹாங்காங் பூங்கா நகரத்தின் நடுவே இயற்கை எழிலுடன் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பூங்காவாகும். இதன் நிலப்பரப்பளவு 80,000 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களாகும். பிரிட்டன் ஆட்சியில் இருக்கும் போது கட்டப்பட்ட இந்த பூங்கா தற்கால வசதிகளுடன் கட்டுவிக்கப்பட்ட பூங்காவின் உள்ளேயே அருங்காட்சியங்கள், திருமணப் பதிவகம், உணவகம், நீர்வீழ்ச்சி குகை, பறவைகளில் இருப்பிடம் என்று ஏராளாமான பகுதிகள் இருக்கின்றன. இது உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரும் இடமாக உள்ளது.
தியன் தான் புத்தர்

இந்த புத்தர் சிலையின் கட்டுமாணப் பணிகள் 1990ம் ஆண்டு  ஆரம்பித்தன. 1993 டிசம்பர், 29ம் தேதி இதன் கட்டு பணிகள் நிறைவுற்றது. இந்த புத்தரின் சிலை ஒரே முழுச்சிலையாக அல்லாமல், 202 துண்டுகளாக செய்யப்பட்டு, பின்னர் தற்போது சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கொண்டுவந்து பொருத்தப்பட்டது. அத்துடன் இந்த சிலையை தாங்கும் திறனுக்கு ஏற்ப உறுதியான இரும்பு வலையங்கள் அமைக்கப்பட்டே சிலையை வைக்கப்பட்டது. சிலை பொருத்தப்பட்டதன் பின்னர் உலகெங்கும் உள்ள பௌத்தப் பிக்குகள் அழைக்கப்பட்டு திறப்பு விழா நடாத்தப்பட்டது. திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக சீனா ஹாங்காங், தாய்வான, இந்தியா, ஜப்பான, கொரியா, ற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் வந்து விழாவை சிறப்பித்தனர். மூன்று மாடி கட்டிடங்களில் வட்டவடிவிலான வெங்கலத்திலான தமரை பூவின் மேல் புத்தர் அமைந்திருக்கும் சிலை அமைப்பு இருக்கிறது. முதலாவது தளத்தில் தேவர்கள் புத்தருக்கு விளக்கு, பழம் போன்றவற்றை அர்பணிக்கும் உருவங்களும் உள்ளது.

இந்த புத்தர் சிலையடிக்கு 268 படிகள் உள்ளன. இருப்பினும் அங்கவீனர்கள் மற்றும் வயோதிபர் போன்றோர் செல்வதற்கான வசதியும் உள்ளது. புத்தரின் மார்பில் ஸ்வஸ்திக் சின்னமும் இருந்த்து. புத்தர் முகம் வடக்கு நோக்கி திரும்பியதாக இருக்கிறது. இந்த புத்தர் கோவிலுக்கு கேபிள் கார் மூலமாக செல்லலாம். இந்த பயணம் 5.7. கிலோ மீட்டர் நீளமுடையவை. அடர்ந்த காட்டிலும், மலைபாதைகளிலும் கட்டப்பட்ட இந்த கேபிள் கார் இணைப்புக்கள்  மலையில் குறுக்கிலும் வளைந்தும், நெளிந்தும் காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பயணத்தின் திசைகளில் மாற்றம் ஏற்படும்போதும் 5 ஜங்ஷன் இருக்கிறது. அதன் மூலம் பயண பாதைகள் திசைகளின் மாற்றத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. மலைகளிலும், கீழே ஓடும் நீர்வீழ்ச்சிகளையும் பார்த்துகொண்டே செல்லும் இந்த நீண்ட பயணம் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஒரு பயத்தையும் ஏற்படுத்துகிறது.  சர்ச், மசூதிகளும் ஹாங்காங்கில் உள்ளது. ஹிந்துகளுக்கென்று இஸ்கான் கோவிலும் உள்ளது.  வாடகை வீட்டையே கோவிலாக மாற்றி கிருஷணா உருவச்சிலைகளும், பிரபு பாத அவரின் உருவச்சிலையும், சீன பெண்களாலும், சீன ஆண்களாலும் தினபடி வழிபாடுகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றது. சத்ய சாயியின் சென்டரும் பக்தர்களால நடத்தப்பட்டு வருகிறது. 
பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் என்ற புத்த விகாரம் ஹாங்காங் சா டின் என்ற இடத்தில் இருக்கிறது. இந்த விகாரத்திற்கு செல்லும் இருபாதைகளிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெளத்த பிக்குகளின் சிலைகள் இருக்கிறது. 1933 ஆம் ஆண்டில் சீன புத்த பிக்கு இங்கு வந்து இந்த மடாலயத்தை கட்டினார். புத்தரின் போதனைகளையும் மக்களுக்கு போதித்தார். 


புத்த பிக்குகள் இங்கே காவி உடைக்கு பதிலாக கருப்பு உடை அணிந்துள்ளனர். பிரதான பிக்கு மட்டுமே மஞ்சள் உடையும் அதற்கு மேல் சிகப்பு மேலாடை ஒன்றும் அணிந்துள்ளார். செருப்பு அணிவதற்கும் இங்கு தடைகள் இல்லை. புத்த விகாரையின் உள்ளே சுவர்களில் பதிக்கப்பட்ட தங்க நிறத்திலான சிறிய பெட்டிகள், புத்தர் சிலை ஆயிரக் கணக்கில் உள்ளன. அந்த பெட்டிகளுக்கு குறி இடப்பட்டிருக்கிறது. அந்த பெட்டிக்கு சொந்தக்காரர் அந்த பெட்டியின் உள்ளே தனது இறந்த உறவினர்களின் படங்களை வைத்து சாம்பலையும் பேணி வைக்கின்றனர். புத்தர் அவர்களுக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த சாம்பலுக்கு பூசைகள் செய்கின்றனர்  இறந்தவர்களின் சாம்பலை எடுத்து பூசை செய்து, படையல் இடுவதும் போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை இந்த விகாரத்தில் செய்கின்றனர். சிங்மிங் .திருவிழாவின் போது இறந்தவர்களுக்கான வழிபாட்டு முறைகள் செய்து பழம், அவர்களுக்கு பிடித்தவைகளை செய்து படையலிட்டு வணங்குகிறார்கள். அப்படி செய்தால் இறந்தவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கை சீனர்களுக்கு உண்டு.

மக்காவ் (Macau)

மக்காவ் (Macau)

மக்காவ் சீன குடிஅரசின் சிறப்பு நிர்வாக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.  போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் இங்கு குடியேறி வியாபாரம் மேற்கொண்டனர். முதலில் இந்த நகரத்திற்கு வந்த போர்ச்சுகீசியர்கள் அடிமைகளை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர்.  இதை சீனர்கள் எதிர்த்தனர். சீனர்களுடன் உறவை வளர்ப்பதற்க்காக , வியாபாரத்தை இங்கு வளர்ப்பதற்க்கும் அடிமை முறையை ஒழித்து படிப்படியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இரண்டாவது உலகப்போரின் போது சீனா ஜப்பானின் கீழே அதிகாரத்திற்குட்பட்டிருந்தாலும் மக்கா நகரம் மட்டும் ஜப்பானின் ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. ஒரு சுதந்திர நாடாகவே இருந்தது. இரண்டாவது உலகப்போருக்கு பின்னும் மக்கா போர்ச்சுகீசியர்களின் கையிலேயே இருந்தது. 50 வருடங்களுக்கு பின் 1999 சீனா வசம் வந்து சேர்ந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படியில்  மக்காவிற்கு தன்னிச்சை அதிகாரம் வழங்கப்பட்டது. மக்காவில் சட்டம், நாணயம், வரி தன்னதிகாரத்திலும், எல்லை பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளும் சீன அரசாங்கம் பொறுப்பேற்கிறது.

இந்த நகரத்தின் முக்கிய தொழில் சூதாட்டம் தான். இந்த விடுதிகளுக்குள் நுழைய 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். பாஸ் போர்ட் நுழைய முடியும் சரிபார்த்த பின் தான் உள்ளேயே விடுகின்றனர். மக்காவில் ஹாங்காங் டாலரையும், மக்காவ் டாலரையும், பயன் படுத்துகிறார்கள்.


ஒவ்வொரு ஓட்டலிலும் ஒரு கேஸினோ என்றழைக்கப்படும் சூதாட்ட விடுதி இருக்கிறது. எங்கெங்கும் கண்ணை பறிக்கும் விளக்குகள் சுற்றிலும் சீட்டு கட்டுக்கள், அவற்றில் பல்வேறு வகையான விளையாட்டுக்கள், போட்டி நிபந்தனைகள் என்று இருக்கிறது. இங்கு புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. எங்கு திரும்பினாலும் விளக்குகள், அலங்கர சூதாட்ட டேபிள்கள், சுற்றிலும் மக்கள் கூட்டம், என பார்த்தால் ஏதோ ஒரு உலகிற்கு வந்த உணர்வை ஏற்படுத்துகிறது. சுதாட்ட நகரங்களின் சொர்க்கம் என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் மொத்த வருமானமும் சூதாட்டம் மூலமே கிடைக்கிறது. இந்த ஹோட்டல்களே அடிதளத்தில் பேருந்துக்களையும் இயக்குவதால் யாரும் எந்த ஹோட்டலில் தங்கினாலும் எந்த பேருந்திலும் ஏறி நாம் செல்லும் இடங்களில் இறங்கி கொள்ளலாம். இதை தவிர மெட்ரோ வசதியும் உள்ளது.


சீனாவிடம் மக்காவ் வந்த பின் சீன அரசு மக்காவில் கவனம் செலுத்தி சுற்றுலாவளத்தை அதிகப்படுத்தியது. ஒரு குட்டி ஊராக இருந்தாலும் சீன அரசின் செயல்திட்டத்தினால் ஹாங்காங்கிற்கு அடுத்த இடத்தில் இது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு கோடியை தாண்டிவிட்டது.

மக்காவிற்க்கும் ஹாங்காங்கிற்கும் இடையே சுற்றூலா பார்வையாளர்களை எண்ணிக்கை என்று கடும்போட்டி நிலவுகிறது. மக்காவின் அழகு முதலில் சிங், மிங் ராஜ்ஜியங்களில் கட்டிய பழைய கோவில்களும், பிறகு போர்ச்சுகீஸின் ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலைகளின் படைப்புகளும் கலந்து இருக்கிறது.

மக்காவின் இயற்க்கை அழகு இங்கிருக்கும் கடற்கறைகள், குட்டி குட்டி தீவுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலையும் ஆண்டு முழுவதும் ஒரே சீரான நிலையில்  (கடுமையான் வெப்பமும் இல்லாமல், குளிரும் இல்லாமல்) இருப்பதால் இன்னும் பயணிகள் இங்கு வருவதற்க்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.டான்சிங் பவுண்டன் (நீர்கண்காட்சி), மியூஸியம் ,ரூயின்ஸ் ஆப் செயிண்ட் பால் என்ற சர்ச் பாழடைந்த கோவில் அதை சரி செய்து அப்படியே காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஏராளமான கோவில்கள் இங்கு இருக்கின்றது.. கருணைக்கு, செல்வத்துக்கு, மழைக்கு, என்று ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் இங்கு கோவில்கள் உள்ளன.


வெனிஷியன் ஹோட்டலில் செயற்கையாக வெனிஸ் நகர தோற்றத்தில் படகு பயணமும் செல்லலாம். இந்த ஹோட்டலின் மேல் கூரையில் பார்த்தபோது  மேலே தெரிந்த வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்து நாங்கள் ஒரு திறந்த வெளி ஹோட்டல் என்று நினைத்தால் அப்புறம் தான் தெரிந்தது அது மேற்கூரையில் வானம் நட்சத்திரங்களின் அணிவகுப்பு கலைந்து செல்லும் மேகக்கூட்டம் இதை பார்த்தவுடன் நாங்கள் அடைந்த பிரமிப்புக்கு அளவே இல்லை.  இவ்வளவு தத்ரூபாமாக வரைந்திருக்கிறார்கள் எப்படி என்று கண்முன்னே இன்று வரை அந்த காட்சி தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த கனாலில் படகு பயணம் செல்லலாம். அப்போது ஒரு இத்தாலியர் அந்த படகில் இத்தாலிய பாடல்கள் பாடிக்கொண்டே வருவார். அப்படியே வெனிஸ் தோற்றத்தை நம்கண்முன்னே நிறுத்துகிறது இந்த காட்சி.

Yonghegong Lama Temple யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்

Yonghegong Lama Temple
யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்


யாங்கே சாங் என்ற இடம் 1694 இளவரசன் யின் சென் என்பவரது வசிப்பிடமாக இருந்தது. அவர் பேரரசரானவுடன் அவர் பாரம்பரிய வழக்கப்படி அவர் தனது இருப்பிடத்தை தடைசெய்யப்பட்ட நகரத்திற்க்கு மாற்றினார். இந்த இடம் பிக்குக்கள் வசிக்கும் ஒரு இடமாகவும் வாழும் புத்தரை தேர்ந்தெடுக்கும் இடமாகவும் இதை பயன்படுத்தினர். பின்னர் சீனாவில் கலாச்சார புரட்சி வெடித்த போது இந்த இடம் 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. பின்னர் சீன அரசு இதை திபெத்தியர் வணங்கும் கோவிலாகவும், சுற்றுலாதளமாகவும் உருவாக்கியது.முதல் அறை திபத்திய பாணியில் மேற் கூரையில் மஞ்சள் நிற ஓடுகளை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவில் சொர்கத்திற்க்கான தூதுவர்கள்சிலைகளையும், பிரார்த்தனை மண்டபமும், ஊதிபத்தி கொளுத்துபதற்கான பாத்திரங்களும் இருக்கின்றன.

இரண்டாவது அறையில் 20 அடி உயரமுள்ள மஞ்சள் இனத்தவரின் திபெத் புத்தமதத்தை தோற்றுவித்தவரின் வெங்கல சிலையையும், ஓவியங்களையும் காணலாம்.


5 வது அறையில் மைத்திரேய புத்தரின் சந்தன மரத்தால் செய்த திருவுருவச்சிலை 60 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை 1910 ஆண்டிலேயே கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

6/20/2013

என்னை கவர்ந்த டாக்டர் நண்பர்கள்


டாக்டர்ஸ் என்றால் எப்படி இருக்கனும்னா நாம் எதிர்பார்க்கிறது இரக்கம், அன்பு அந்த மாதிரி இருக்கிற டாக்டர் Dr. Rawlin Augustine, Nallini Arul, Gayathri Sreekanth இவங்க மூன்று பேருமே செம அன்பு, கனிவு இவங்ககிட்ட ரொம்பவே இருக்கும். அதே மாதிரி எனக்கு முதல் பிரசவம் பார்த்த கீதா அர்ஜீன் ரொம்ப அன்பு, எவ்வளவு முயற்ச்சி செய்தும் சிசேரியன் தான் அதனால எங்களைவிட அவங்களுக்கு தான் ரொம்ப அப்செட். ஏன்னா எங்க (அம்மா) மாமியாருக்கும் அவங்க மாமியார் கல்யாணி தான் பிரசவம் பார்த்தாங்களாம்.. சின்னது பெங்களுரில் கோமதி நாராயணன். ரொம்ப பிரசவம் காம்ளிகேட்லா ஆனதுல 8 மாதம் பிறந்தஉடனேயே ஆபரேஷன் பண்ணி குழந்தையை எடுத்துட்டாங்க. ஆனால் அவங்க கிட்ட அப்படி ஒரு பயம் எனக்கு. என்ன சாப்பிடியா, மருந்து சாப்பிட்டியா என்ற மிரட்டலே இருக்கும். அவங்களை பாக்கும்போது எனக்கு நான் குன்னூரில் இருந்த விக்டர் என்ற டாகடர் ஞாபகம் தான் வரும். எனக்கு வீஸிங் வரும்பொது என்னை  அப்பா தோளில் போட்டு அவர்கிட்ட அழைத்துகொண்டு போவார். டாக்டர் ஊசியை கையில் எடுத்த உடனேயே நான் ஓடிவிடுவேன். பெரும்பாலும் எதிர்தாப்புல வர்ரவங்க தான் பிடித்து குடுப்பார். உடனே என்ன ஊசி தான். அதே இன்று வரை எனக்கு அந்த பயம் பொகவில்லை. என் பையனோ அதுக்கும் மேல பெரியவன் ஊசி குத்துவதைபார்த்துகொண்டே இருப்பான். சின்னது என்னை விட டாக்டரை ஒரே தள்ளு தள்ளி ஓடிவிடுவான். பெங்களுரில் டாக்டர் பெனகப்பா தான் எங்க குடும்ப டாக்டர். இத்தனைக்கும் பெனகப்பா ஊசியே போடமாட்டார். தடுப்பு ஊசி போடும்போது இவ்வளவு ஆர்பாட்டமும் நடக்கும். . அவர் சொல்லிவிடுவார் சுபா நீ நவீன் பெனகப்பா (பையன்) அவரும் டாக்டர் தான் இருக்கும்போது வாம்மா. என்னால் தனிய இவனை பிடிக்க முடியலை என்பார். பசங்களை கூட்டி போயே நானும் நவீனும் செம தோஸ்தாகிட்டோம். பசங்களுக்கு உடம்பு முடியலைனா சில நேரங்களில் ஜீரம் ரொம்ப அதிகமாகி அட்மிட் பண்ணற வரை போய்டும். அந்த சந்தர்பத்தில் சி.பி. எப்போவுமே வெளிநாட்டில் இருப்பார். உடனே நவீனுக்கு போன் செய்து அவரை ராத்திரி 2 மணி கூட இருக்கும். பெங்களுர் ஆஸ்பத்திரி ஆரம்பித்தவர் அவர், நீ வந்துடு நான் வந்துடறேன் உடனே அட்மிட் பண்ணிடலாம் என்பார். அந்த மாதிரி தோள்குடுத்த நண்பர் அவர்தான். இன்றும் இப்போ நிமான்ஸ் ல, சாகர் ல child specialist ஆக இருக்கார். அவர்கிட்ட இப்போவும் உன்னை மாதிரியே அன்பா, கனிவா பேசரவங்களை ரெபர் பண்ணு. என்று கேட்பேன். அப்படிதான் ரவிபிரகாஷ் என்ற கண்டாக்டரும், ருத்ரபிரசாத் என்ற ஆர்த்தோ டாக்டரும் நண்பர்களானார். இவர்களுக்கெல்லாம் பணம் முக்கியமில்லாமல் சேவையாகத்தான் இன்று வரை இருக்கிறார்கள். இன்றும் இவர்கள் மாறவில்லை.  நான் இங்கே இருக்கும்போதே போனில் மட்டும் தான் சொன்னோம் டாக்டர் ரவி கிட்ட, அப்பாக்கு அவரே ஆபரேஷன் பண்ணி அப்படி கவனிச்சுகிட்டார். இப்போ கூட சந்தேகம் நா உடனே ருத்ரபிரசாத்கிட்ட தான் போன் செய்து கேட்கிறது.அதே மாதிரி இங்கு டாக்டர் பீட்டர் கீரீப்பர் எனக்கு நண்பரானார். அவரிடம் தான் நான் செல்வது. இன்னிக்கு விட்டமின் டி குறைபாடால் ஊசி போடனும் என்றார். அவரிடம் டாக்டர் ஊசி வலிக்குமா, எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் வருது என்றால் என்று ஒரு பத்துதரம் கேட்டிருப்பேன், சிரித்துகொண்டே மிகவும் பொருமையாக விளக்கிகொண்டிருப்பார். இங்கே வெயிலே இல்லை மா, அதான் இப்படி, ஊசி வலிக்காது என்று குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கொண்டிருந்தார்.  இன்னிக்கு அவருக்கு வெய்ட் பண்ணின போது இவங்க ஞாபகம் எல்லாம் வந்துச்சு. அனால் இன்னும் ஊசி பயம் மட்டும் போகவில்லை என்னை விட்டு.