Yonghegong Lama Temple
யாங்கே சாங் பெய்ஜிங் லாமா கோவில்
யாங்கே சாங் என்ற இடம் 1694 இளவரசன் யின் சென் என்பவரது
வசிப்பிடமாக இருந்தது. அவர் பேரரசரானவுடன் அவர் பாரம்பரிய வழக்கப்படி அவர் தனது
இருப்பிடத்தை தடைசெய்யப்பட்ட நகரத்திற்க்கு மாற்றினார். இந்த இடம் பிக்குக்கள்
வசிக்கும் ஒரு இடமாகவும் வாழும் புத்தரை தேர்ந்தெடுக்கும் இடமாகவும் இதை
பயன்படுத்தினர். பின்னர் சீனாவில் கலாச்சார புரட்சி வெடித்த போது இந்த இடம் 30
ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. பின்னர் சீன அரசு இதை திபெத்தியர் வணங்கும்
கோவிலாகவும், சுற்றுலாதளமாகவும் உருவாக்கியது.
முதல் அறை திபத்திய பாணியில் மேற் கூரையில் மஞ்சள் நிற ஓடுகளை
கொண்டு கட்டப்பட்ட இந்த கோவில் சொர்கத்திற்க்கான தூதுவர்கள்சிலைகளையும்,
பிரார்த்தனை மண்டபமும், ஊதிபத்தி கொளுத்துபதற்கான பாத்திரங்களும் இருக்கின்றன.
இரண்டாவது அறையில் 20 அடி உயரமுள்ள மஞ்சள் இனத்தவரின் திபெத்
புத்தமதத்தை தோற்றுவித்தவரின் வெங்கல சிலையையும், ஓவியங்களையும் காணலாம்.
5 வது அறையில் மைத்திரேய புத்தரின் சந்தன மரத்தால் செய்த
திருவுருவச்சிலை 60 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை 1910 ஆண்டிலேயே கின்னஸ்
ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment