மக்காவ் (Macau)
மக்காவ்
சீன குடிஅரசின் சிறப்பு நிர்வாக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். போர்த்துகீசியர்கள் 16ம் நூற்றாண்டில் இங்கு
குடியேறி வியாபாரம் மேற்கொண்டனர். முதலில் இந்த நகரத்திற்கு வந்த
போர்ச்சுகீசியர்கள் அடிமைகளை வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டனர். இதை சீனர்கள் எதிர்த்தனர். சீனர்களுடன் உறவை
வளர்ப்பதற்க்காக , வியாபாரத்தை இங்கு வளர்ப்பதற்க்கும் அடிமை முறையை ஒழித்து
படிப்படியாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இரண்டாவது உலகப்போரின் போது சீனா
ஜப்பானின் கீழே அதிகாரத்திற்குட்பட்டிருந்தாலும் மக்கா நகரம் மட்டும் ஜப்பானின்
ஆதிக்கத்திற்கு உட்படவில்லை. ஒரு சுதந்திர நாடாகவே இருந்தது. இரண்டாவது
உலகப்போருக்கு பின்னும் மக்கா போர்ச்சுகீசியர்களின் கையிலேயே இருந்தது. 50
வருடங்களுக்கு பின் 1999 சீனா வசம் வந்து சேர்ந்தது. இந்த ஒப்பந்தத்தின்
அடிப்படியில் மக்காவிற்கு தன்னிச்சை
அதிகாரம் வழங்கப்பட்டது. மக்காவில் சட்டம், நாணயம், வரி தன்னதிகாரத்திலும், எல்லை
பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகளும் சீன அரசாங்கம் பொறுப்பேற்கிறது.
இந்த
நகரத்தின் முக்கிய தொழில் சூதாட்டம் தான். இந்த விடுதிகளுக்குள் நுழைய 21 வயது
நிரம்பியிருக்க வேண்டும். பாஸ் போர்ட் நுழைய முடியும் சரிபார்த்த பின் தான்
உள்ளேயே விடுகின்றனர். மக்காவில் ஹாங்காங் டாலரையும், மக்காவ் டாலரையும், பயன்
படுத்துகிறார்கள்.
ஒவ்வொரு
ஓட்டலிலும் ஒரு கேஸினோ என்றழைக்கப்படும் சூதாட்ட விடுதி இருக்கிறது. எங்கெங்கும்
கண்ணை பறிக்கும் விளக்குகள் சுற்றிலும் சீட்டு கட்டுக்கள், அவற்றில் பல்வேறு
வகையான விளையாட்டுக்கள், போட்டி நிபந்தனைகள் என்று இருக்கிறது. இங்கு புகைப்படம்
எடுக்க அனுமதியில்லை. எங்கு திரும்பினாலும் விளக்குகள், அலங்கர சூதாட்ட டேபிள்கள்,
சுற்றிலும் மக்கள் கூட்டம், என பார்த்தால் ஏதோ ஒரு உலகிற்கு வந்த உணர்வை
ஏற்படுத்துகிறது. சுதாட்ட நகரங்களின் சொர்க்கம் என்று இந்த நகரம்
அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தின் மொத்த வருமானமும் சூதாட்டம் மூலமே கிடைக்கிறது.
இந்த ஹோட்டல்களே அடிதளத்தில் பேருந்துக்களையும் இயக்குவதால் யாரும் எந்த ஹோட்டலில்
தங்கினாலும் எந்த பேருந்திலும் ஏறி நாம் செல்லும் இடங்களில் இறங்கி கொள்ளலாம். இதை
தவிர மெட்ரோ வசதியும் உள்ளது.
சீனாவிடம்
மக்காவ் வந்த பின் சீன அரசு மக்காவில் கவனம் செலுத்தி சுற்றுலாவளத்தை
அதிகப்படுத்தியது. ஒரு குட்டி ஊராக இருந்தாலும் சீன அரசின் செயல்திட்டத்தினால்
ஹாங்காங்கிற்கு அடுத்த இடத்தில் இது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கிறது. சுற்றுலா
பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு இரண்டு கோடியை தாண்டிவிட்டது.
மக்காவிற்க்கும்
ஹாங்காங்கிற்கும் இடையே சுற்றூலா பார்வையாளர்களை எண்ணிக்கை என்று கடும்போட்டி
நிலவுகிறது. மக்காவின் அழகு முதலில் சிங், மிங் ராஜ்ஜியங்களில் கட்டிய பழைய
கோவில்களும், பிறகு போர்ச்சுகீஸின் ஐரோப்பிய பாணியிலான கட்டிடக்கலைகளின் படைப்புகளும்
கலந்து இருக்கிறது.
மக்காவின்
இயற்க்கை அழகு இங்கிருக்கும் கடற்கறைகள், குட்டி குட்டி தீவுகள் சுற்றுலா பயணிகளை
ஈர்க்கின்றது. இங்கு நிலவும் தட்பவெட்ப நிலையும் ஆண்டு முழுவதும் ஒரே சீரான
நிலையில் (கடுமையான் வெப்பமும் இல்லாமல்,
குளிரும் இல்லாமல்) இருப்பதால் இன்னும் பயணிகள் இங்கு வருவதற்க்கு விருப்பம்
தெரிவிக்கின்றனர்.
டான்சிங்
பவுண்டன் (நீர்கண்காட்சி), மியூஸியம் ,ரூயின்ஸ் ஆப் செயிண்ட் பால் என்ற சர்ச்
பாழடைந்த கோவில் அதை சரி செய்து அப்படியே காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஏராளமான
கோவில்கள் இங்கு இருக்கின்றது.. கருணைக்கு, செல்வத்துக்கு, மழைக்கு, என்று ஒவ்வொரு
தெய்வத்திற்க்கும் இங்கு கோவில்கள் உள்ளன.
வெனிஷியன்
ஹோட்டலில் செயற்கையாக வெனிஸ் நகர தோற்றத்தில் படகு பயணமும் செல்லலாம். இந்த
ஹோட்டலின் மேல் கூரையில் பார்த்தபோது மேலே
தெரிந்த வானத்தையும் நட்சத்திரத்தையும் பார்த்து நாங்கள் ஒரு திறந்த வெளி ஹோட்டல்
என்று நினைத்தால் அப்புறம் தான் தெரிந்தது அது மேற்கூரையில் வானம்
நட்சத்திரங்களின் அணிவகுப்பு கலைந்து செல்லும் மேகக்கூட்டம் இதை பார்த்தவுடன்
நாங்கள் அடைந்த பிரமிப்புக்கு அளவே இல்லை.
இவ்வளவு தத்ரூபாமாக வரைந்திருக்கிறார்கள் எப்படி என்று கண்முன்னே இன்று வரை
அந்த காட்சி தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த கனாலில் படகு பயணம் செல்லலாம்.
அப்போது ஒரு இத்தாலியர் அந்த படகில் இத்தாலிய பாடல்கள் பாடிக்கொண்டே வருவார்.
அப்படியே வெனிஸ் தோற்றத்தை நம்கண்முன்னே நிறுத்துகிறது இந்த காட்சி.
No comments:
Post a Comment