Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

4/29/2013

ஷாங்காய்

பெய்ஜிங்லிருந்து ஷாங்ஹாய் புல்லட் டிரெயினில் மணிக்கு 320 கிலோமீட்டரில் வேகத்தில் 5 மணிநேர பயணம்… சீனாவின் புகழ் வாய்ந்த முக்கிய நகரங்களில் ஷாங்காயும் ஒன்று. சீனாவின் வணிக தலைநகரம் என்று கூட கூறலாம். முதல் முறை செல்வதால் எங்களுக்குள் ஒரு ஆவல் மற்றும் பதட்டமும் கூட. புல்லட் டிரெயின் பயணம் மிக அருமையாக இருந்த்து. அவ்வளவு வேகமாக செல்கிறது என்று டிரெயினில் இறுக்கும் டிஜிடல் போர்ட் பார்த்து தான் தெரிந்துக்கொண்டோம். கோப்பை நிறய காபி அல்லது டீ இருந்தாலும் ஒரு துளி கூட சிந்தவில்லை. இன்னொரு முக்கிமான சௌகர்யம் என்னவென்றால் இந்த அதிவேக ரயில் வண்டியில் மொபைல் ஃபோன் உபயோகிக்கலாம். விமானத்தில் தான் ஃபோனை ச்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு சிறு களைப்பும் இல்லாமல் ஷாங்ஹாய் வந்து சேர்ந்தோம்.
பொதுவாக ரயில் நிலயங்கள் போல் இருக்கும் என்று இறங்கிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இது என்ன ரயில் நிலயமா அல்லது தவறிபோய் விமான நிலையம் வந்து விட்டோமா என்று எண்ண தோன்றியது. அவ்வளவு சுத்தம் மற்றும் நவீனமாக இருந்தது. டாக்சியை பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். முன்னேற்பாடாக ஹோட்டலின் விலாசத்தை சீன மொழியில் செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் ஷாங்ஹாய் வந்தது மாலை நேரம். மாலை மற்றும் இரவு ஷாங்ஹாய் கொள்ளை அழகு. ஒரு நல்ல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். ஷாங்ஹாயில் என்ன பார்பது என்று ஒரு சின்ன பட்டியல் போட்டிருந்தோம்; கிட்டதட்ட இதில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க துவங்கினோம். முதலில் ஷாங்காய் மியூசியம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்க்கும்பொழுது ஆஹா என்ன ஒரு அழகு என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது.

ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற கட்டிடமும் 1614அடி உயரம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வாணிக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது. அடுக்கு மாடி வணிக வளாகத்தில். வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம் அழகு சாதன பொருள்கள், , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருள்கள், சீனகுடைகள், எல்லாமே இந்த வணிக வளாகத்துக்குள் கிடைக்கிறது. சீனத்து பட்டு, சீன பாரம்பரிய உடைகள் என அப்போது திருவிழா கூட்டம் கூட்டம் மாதிரி ஜே ஜேனு இருக்கிறது. புண்ட். ஷங்காய் நகரின் மையத்தில் ஓடுகிற நதிகரையை ஒரு சமதளமாக மாற்றி அதன்மேல் கடைகள், பூங்காக்கள், அமைத்து அலங்கரமாக காட்சியளிக்கிறது. நான்ஜிங் வீதியும், பண்டு தெருவும் சேருமிடத்தில் ஷாங்காயின் முதல் கம்யூனிஸ்டு மேயரின் வெண்கலசிலை உள்ளது. வானாளாவிய கட்டிடங்கள் சுற்றிலும் வான் தழுவிய கட்டிடங்கள், இரவு நேர விளக்குகளின் ஒளியில் ஒரு சொர்க்கலோகமாக காட்சியளிக்கிறது.
ஷாங்காயின் கிழக்கில் ஜேடுபுத்தர் கோவில் உள்ளது. புத்தரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், வலது கையில் தன் தலையை தாங்கிபிடித்தபடி ஒருகளித்த நிலையில் இருக்கும் புத்தர் தன் சாந்தத்தாலும்,எல்லோர் மனங்களையும் வசிகரிக்கிறார். மலைமுகடுகளிலும், இங்கு ஏராளமான புத்தர் கோவில்கள் காணப்படுகிறது. கிழக்கு நாடுகளின் முத்துகோபுரம் புதாங் என்ற பூங்காவில் இருக்கிறது. 1536 அடி உயர இந்த கோபுரம் உலகின் மூன்றாவது உயர கோபுரமாகும். இந்த கோபுரத்தை பார்வையிட வசதியாக எலிவேட்டர் வசதியிருக்கிறது. இங்கு சென்று ஷாங்காயின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

1 comment:

பெருவுடையான் said...

அக்கா சீனாவுக்கு வரவா வேணாமா ஹஹஹஹ எல்லா அழகையும் உங்கள் எழுத்தின் மூலம் கொட்டி தீர்த்தால் எப்படி