Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

4/29/2013

ஷாங்காய்

பெய்ஜிங்லிருந்து ஷாங்ஹாய் புல்லட் டிரெயினில் மணிக்கு 320 கிலோமீட்டரில் வேகத்தில் 5 மணிநேர பயணம்… சீனாவின் புகழ் வாய்ந்த முக்கிய நகரங்களில் ஷாங்காயும் ஒன்று. சீனாவின் வணிக தலைநகரம் என்று கூட கூறலாம். முதல் முறை செல்வதால் எங்களுக்குள் ஒரு ஆவல் மற்றும் பதட்டமும் கூட. புல்லட் டிரெயின் பயணம் மிக அருமையாக இருந்த்து. அவ்வளவு வேகமாக செல்கிறது என்று டிரெயினில் இறுக்கும் டிஜிடல் போர்ட் பார்த்து தான் தெரிந்துக்கொண்டோம். கோப்பை நிறய காபி அல்லது டீ இருந்தாலும் ஒரு துளி கூட சிந்தவில்லை. இன்னொரு முக்கிமான சௌகர்யம் என்னவென்றால் இந்த அதிவேக ரயில் வண்டியில் மொபைல் ஃபோன் உபயோகிக்கலாம். விமானத்தில் தான் ஃபோனை ச்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு சிறு களைப்பும் இல்லாமல் ஷாங்ஹாய் வந்து சேர்ந்தோம்.
பொதுவாக ரயில் நிலயங்கள் போல் இருக்கும் என்று இறங்கிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இது என்ன ரயில் நிலயமா அல்லது தவறிபோய் விமான நிலையம் வந்து விட்டோமா என்று எண்ண தோன்றியது. அவ்வளவு சுத்தம் மற்றும் நவீனமாக இருந்தது. டாக்சியை பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். முன்னேற்பாடாக ஹோட்டலின் விலாசத்தை சீன மொழியில் செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் ஷாங்ஹாய் வந்தது மாலை நேரம். மாலை மற்றும் இரவு ஷாங்ஹாய் கொள்ளை அழகு. ஒரு நல்ல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். ஷாங்ஹாயில் என்ன பார்பது என்று ஒரு சின்ன பட்டியல் போட்டிருந்தோம்; கிட்டதட்ட இதில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க துவங்கினோம். முதலில் ஷாங்காய் மியூசியம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்க்கும்பொழுது ஆஹா என்ன ஒரு அழகு என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது.

ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற கட்டிடமும் 1614அடி உயரம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வாணிக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது. அடுக்கு மாடி வணிக வளாகத்தில். வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம் அழகு சாதன பொருள்கள், , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருள்கள், சீனகுடைகள், எல்லாமே இந்த வணிக வளாகத்துக்குள் கிடைக்கிறது. சீனத்து பட்டு, சீன பாரம்பரிய உடைகள் என அப்போது திருவிழா கூட்டம் கூட்டம் மாதிரி ஜே ஜேனு இருக்கிறது. புண்ட். ஷங்காய் நகரின் மையத்தில் ஓடுகிற நதிகரையை ஒரு சமதளமாக மாற்றி அதன்மேல் கடைகள், பூங்காக்கள், அமைத்து அலங்கரமாக காட்சியளிக்கிறது. நான்ஜிங் வீதியும், பண்டு தெருவும் சேருமிடத்தில் ஷாங்காயின் முதல் கம்யூனிஸ்டு மேயரின் வெண்கலசிலை உள்ளது. வானாளாவிய கட்டிடங்கள் சுற்றிலும் வான் தழுவிய கட்டிடங்கள், இரவு நேர விளக்குகளின் ஒளியில் ஒரு சொர்க்கலோகமாக காட்சியளிக்கிறது.
ஷாங்காயின் கிழக்கில் ஜேடுபுத்தர் கோவில் உள்ளது. புத்தரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், வலது கையில் தன் தலையை தாங்கிபிடித்தபடி ஒருகளித்த நிலையில் இருக்கும் புத்தர் தன் சாந்தத்தாலும்,எல்லோர் மனங்களையும் வசிகரிக்கிறார். மலைமுகடுகளிலும், இங்கு ஏராளமான புத்தர் கோவில்கள் காணப்படுகிறது. கிழக்கு நாடுகளின் முத்துகோபுரம் புதாங் என்ற பூங்காவில் இருக்கிறது. 1536 அடி உயர இந்த கோபுரம் உலகின் மூன்றாவது உயர கோபுரமாகும். இந்த கோபுரத்தை பார்வையிட வசதியாக எலிவேட்டர் வசதியிருக்கிறது. இங்கு சென்று ஷாங்காயின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

லாங்மென் கேவ்

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் அமைந்துள்ள லாங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது. லாங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈவு ஆறு ஓடுகின்றது.
எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனர்கள் செதுக்கினர். கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு புத்தரின் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பினார்.

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் அதனால் புத்தரின் ஆசி கிடைக்கும் என்று பெய்வெய் வம்ச காலப் பேரரசர் முடிவு செய்தார். லாங்மன் என்னும் இடத்தில் கற்பாறை தரமானதாகவும் சிலைகள் செதுக்க உகந்ததாகவும் இருந்ததால் 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லாங்மன் குகைகளில் புத்த உருவங்கள் செதுக்கப்பட்டன. இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.493 A.D. நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளாக பெய்வெய் வம்சக் காலத்திலும் தொடர்ந்து தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன. இங்கு குகைகளுக்கு நடுவில் இருக்கும் சாக்கியமுனி புத்தாவும் அருகில் போதிசத்துவர்களின் சிலைகளும் இருக்கிறது. மேல்புர கூரை தாமரை வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பெரிய புத்தரின் சிலைகளும், பக்கத்தில் போதிசத்துவரின் சிலைகளும், இருக்கிறது. வடக்குவெய் வம்ச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வம்ச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிறபக்கலையை ஆராய்வதற்கு இந்த தகவல்கள் உபயோகமாக உள்ளன.

லாங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளி நாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக மலை பாறைகளை குடைந்து கட்டப்பட்ட குகை கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லாங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
லாங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன. இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கும் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.

ஷாவ்லின்

ஷாவோலின் என்றால் நம் நினைவுக்கு வருவது குங்க்ஃபூ தான். சமீப காலத்தில் ஷாவோலின் கோவிலை பற்றி மக்களிடத்தில் மிக பரவலாக பேச படுகிறது. நாங்கள் பெய்ஜிங்கில் இருந்ததால், ஷாவோலின் கோவிலிற்கு செல்ல எங்களுக்குள் ஆவல் இருந்தது. சீனாவில் ஏப்ரல் மாதம் சிங்க் மிங்க் பண்டிகை என்பதால் எல்லோருக்கும் விடுமுறை. இதுதான் நல்ல வாய்ப்பு என எண்ணி ஷாவோலின் செல்ல தீர்மானிதோம்.
ஷாவோலின் கோவில் சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ளது. ஷாவோலின் கோவிலிற்கு அருகில் உள்ள நகரம் ஜெங்க்ஷாவ். நாங்கள் பெய்ஜிங்கிலிருந்து முதலில் ஜெங்க்ஷாவ் சென்றோம். ஜெங்க்ஷாவ் சீனாவின் இரண்டாம் வரிசை நகரம் என்பதால் இங்கு விமான நிலயம் எப்படி இருக்குமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தோம். ஜெங்க்ஷாவ் விமான நிலயம் சேர்ந்த்த பின்பு எங்களால் வியாக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சிறிய நகரத்தில் என்ன ஒரு பிரம்மாண்டம். விமான நிலயம் மட்டுமில்லாமல் நகரமே மிக அழகாக இருந்தது. சீனா எனும் வல்லரசின் தொலை தூர பார்வையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஜெங்க்ஷாவ் நகரத்தின் ஒரு விடுதியில் தங்கினோம் அங்கு மறுநாள் ஷாவோலின் செல்வதற்கு ஒரு காரும் ஏற்பாடு செய்து கொண்டோம்.
ஹோட்டலில் எங்களுக்கு சுற்றுலா புத்தகத்தை கொடுத்தார்கள். இது ஆங்கிலத்தில் இருந்ததால் எங்களுக்கு ஒரே சந்தோஷம். ஹோட்டலில் ஆங்கிலம் பேச கூடிய ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நேராக பார்பதற்கு முன் சுற்றுலா புத்தகத்திலிருந்தும் மற்றும் வழிகாட்டியிடமிருந்தும் பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். அதில் சில தகவல்கள் இதோ.
ஷாவோலின் கோவில் ஷாவோஷி எனும் மலைக்கருகில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி உள்ள மலையும் மற்றும் காடும் இதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கின்றன. ஷவோ என்பது ஷாவோஷி மலையையும், லின் என்பது காடையும் குறிக்கின்றன. ஷாவோலின் என்றால் ஷாவோஷி மலைக்கருகில் இருக்கும் காட்டில் உள்ள கோவில் என்று பொருள். 1500 ஆண்டுகளுக்கு முன்பே உள்ள ஒரு பழைமையான பாரம்பரியமிக்க கலை. குங்பூ .ஹானான் டெம்பிளில் ஷவோலின் துறவிகளால் இந்த குங்பூ கலை பயிற்சி கூடம் நடக்கிறது. இங்கு பல மாணவர்கள் தங்கி தற்காப்பு கலையை படிக்கின்றனர்.
சீன மொழியில் வூஷூ என்றால் ராணுவ சண்டை கலை என்று பொருள். வூ என்பது ராணுவத்தையும் ஷூ என்பது திறமையும் அல்லது வழிபாட்டையும் குறிக்கின்றன. சீன சண்டை கலை என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்தது. குங்ஃபூ தான். இங்கு கடினமான பயிர்ச்சியால் மேல் நிலை அடையும் எந்த திறமைக்கும் குங்ஃபூ என்று பெயர். வூஷூ கலையில் அகத்திற்குள்ளும், உடம்பிற்கு வெளியில் மிக கடினமான பயிற்சி, மற்றும் மன ஒருமைபாடும் மிகவும் முக்கியமானதாகும் இதில் பல பிரிவுகள் உண்டு. யோக கலையை உள்ளடக்கிய பயிற்சி முறைகளும் உண்டு. புத்தமதம் இங்கு பரப்புவதற்காக
வெய் வம்சவழி அரசர் இந்த கோவிலை கட்டினார். புதாவ் என்றழைக்கப்படும் புத்தபத்ரா என்ற இந்திய துறவிக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த கோவில் கட்டப்பட்டது.. அதன் பின் மற்றொரு துறவி போதிதர்மர் என்று அழைக்கப்படும் துறவி இங்கு வந்து ஒன்பது ஆண்டுகள் தங்கி ஒரு குகையில் தியானம் செய்துள்ளார், அப்போது அந்த குகையின் மேல் வெயிலே படாமல் இருந்ததாகவும், இன்றும் அந்த குகை இருக்கிறது. இந்த கோவிலின் வாயிலில் போதிதர்மரது சிலை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. சென் புத்த மதத்தினை பரப்பினார். இங்கு துறவிகளுக்கு தற்காப்பு கலையையும் போதித்தார்.
அங்கே நாங்கள் பார்த்த கோவில், போதிதர்மரின் குகை, பகோடா வனம் என அழைக்கபடும் புத்த விகாரம் மற்றும் மலை எல்லாம் மிக அழகாக இருந்தது. அனால் எல்லாவற்றிற்கும் மேலானது ஷாவோலின் கோவிலின் குங்க்ஃபூ தற்காப்பு கலைதான். இதை மிக அழகாக ஒரு கலை அரங்கத்தில் சிறு வயது மாணவர்கள் செய்முறை விளக்கத்தை பயிற்சி செய்து காட்டினார்கள். ஒரு சிறு குண்டூசியினால் ஒரு கண்ணாடி பலகையில் ஒரு சின்ன ஓட்டையை போட்டு அதற்கு அந்தபுறம் இருக்கும் ஒரு பலூனை உடைத்து காண்பித்தார் ஒரு மாணவர். குருகுலவாசம் இருந்து பயிலும் கலை தான் இந்த குங்க்ஃபூ தற்காப்பு கலை. இது எவ்வளவு கடினம் என்பதை காண்பிக்க பார்வையாளர் சிலரை இந்த கலயை மாணவர்களுடன் செய்து காண்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்கள். மாணவர்கள் மரத்தைஅழுத்தி தனது விரலை பலப்படுத்தி கொண்டதற்கு மரங்களின் மேல் குழி, குழியா விழுந்திருக்கும் அடையாளமே சாட்சி. எல்லோரும் அது சும்மா மரத்தில் உளி கொண்டு செதுக்கியிருப்பார்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். பின் அந்த மாணவர்கள் சில பயிற்சிகள் செய்து காட்டியபோது அது நிஜம்தான் என்று எண்ண வைத்தது.
சீன மொழியில் வூஷூ என்றால் ராணுவ சண்டை கலை என்று பொருள். வூ என்பது ராணுவத்தையும் ஷூ என்பது திறமையும் அல்லது வழிபாட்டையும் குறிக்கின்றன. சீன சண்டை கலை என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்தது. குங்ஃபூ தான். இங்கு கடினமான பயிர்ச்சியால் மேல் நிலை அடையும் எந்த திறமைக்கும் குங்ஃபூ என்று பெயர். வூஷூ கலையில் அகத்திற்குள்ளும், உடம்பிற்கு வெளியில் மிக கடினமான பயிற்சி, மற்றும் மன ஒருமைபாடும் மிகவும் முக்கியமானதாகும் இதில் பல பிரிவுகள் உண்டு. யோக கலையை உள்ளடக்கிய பயிற்சி முறைகளும் உண்டு.
அந்த கலையை பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியதை உணர்ந்தோம். போதிதர்மரின் சிலையிடம் விடைபெற்று கொண்டு சீன தலை நகரம் திரும்பினோம். ஷாவோலின் கோவிலின் குங்க்ஃபூ தற்காப்பு கலையின் அந்த பிரமிப்பும் மற்றும் அந்த வேகமும் அழகும் எங்கள் கண் முன்னே தோன்றி கொண்டிருந்தது. இதை ஒரு இந்தியன் குறிப்பாக தமிழன் தான் துவக்கி வைத்திருக்கிறான் என எண்ணும் போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை.

சீன பெருக்சுவர்.

சீன நாட்டின் பண்பாட்டையும், சுமார் 2000 வருட பாரம்பரிய பெருமையும், புகழையும் தன்னகத்தே கொண்டது இந்த சுவர். சீனப்பெருஞ்சுவர் ஷின் ஷீ ஹீவாங் டி என்ற பேரரசரால் அந்நிய நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கவும் குறிப்பாக குதிரைபடைகள் இந்த சுவரை தாண்டி வருவதை தவிர்க்கவும் கட்டப்பட்டது. மிங் வம்ச காலத்தில் விரிவாக்கப்பட்டு ஹன் வம்ச காலத்தில் இதன் நீளம் பத்து ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டியிருக்கிறது.
போர் வீர்ர்கள், விவசாயிகள், குற்றவாளிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த நீள பாதை பெருஞ்சுவர் உயர்ந்த மலைதொடரிலும், சமவெளியில் உள்ள ஆபத்தான இடத்தையும் தாண்டி கட்டப்பட்டது. இரண்டு பக்க சுவர்களுடைய இந்த சுவர் நடுவில் ஏறுவதற்கு ஏதுவாக படிகளோடு கூடிய அமைப்புடன் இருக்கிறது. கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால் கீழே உள்ள இடங்கள் துல்லியமாக தெரியும். கீழ்தளத்தில் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் சுடுவதற்கு தோதாக துளைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு நிலையங்களும் வழிபாட்டு கோபுரங்களும் இருப்பதினால் அயல் நாட்டினரது படையெடுப்பு நடந்துவிட கூடிய தருணத்தில் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படும்
தீபத்தினால் தகவல்கள் பரிமாரப்பட்டு உதவிக்கான சமிஞ்சை தரப்படும் .சமிஞ்சை புகையை எரித்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு புகை என்றால் 100 எதிரிகள் என்றும் 2 புகை என்றால் 500 பேர் இருக்கலாம் என்ற சமிஞ்சை தரப்பட்டது. இந்த சமிஞ்சையின் மூலம் சுமார் 1000 கிலோமீட்டருக்கு செய்தி சென்று விடும். இந்த சுவருக்கு அடியில் பல போர்கள் நடைபெற்றதாக சரித்திரமும் உண்டு. இந்த சுவரை ஏராளமானோர் வந்து பார்வையிட்டுகொண்டுள்ளனர். இந்த பெருஞ்சுவர் ஷாங்காய்குவான் என்ற இடத்தில் கடலுடன் முத்தமிட்டு எல்லோரையும் கவர்ந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது சீனத்து சுவர்.

4/11/2013

வானவில்



வானவில்லின் வர்ணங்கள் நிலைமாறியதில்லை எப்போதும்
மனிதர்களின் நிறம் எப்போதும் மாறிகொண்டே ,மாற்றிகொண்டே..

அன்பு

உன்னுடைய நினைவுகள்
எப்போதும் இந்த பொக்கிஷங்களாய்


மனமென்னும் திரையினில்
அடைகாக்கபடுகிறது.
என்றாவது ஒரு நாள்
அது வெடித்து
கிளம்பும் விருட்சமாய்
விதைகளை தூவி விட்டு செல்லும்!!