சீனா ஏன் வல்லரசு பாதையில்……
சீனா வல்லரசு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று
அமெரிக்கா,
இந்தியர்களாகிய நாமும் எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கிறோம்.
அந்த பாதையில் நடைபோட சீனாவிற்கு ஒத்துழைப்பு முழுமூச்சோடு தருவது இந்த
மக்களின் அயராத உழைப்பு. வயதானாலும் தன்னால் ஆன வேலைகளை பார்த்து
குடும்பத்திற்கு என்று தன்னாலான பங்கை அளிக்கும் வயதானவர்கள். 60 வயதிலும் தன்பேரனோடு பள்ளிசெல்லும் தாத்தா, பாட்டிகள்.,எல்லாதுறைகளிலும் தன்காலடிகளை பதிக்கும் பெண்கள். வீட்டில்
வம்பு பேசிகொண்டிருக்காமல், சீரியல் எல்லாம் பார்த்து கொண்டிருக்காமல்
வேலை, தொழில், அழகு கலை, வணிகதுறை என்று பறந்துகொண்டிருக்கும் பெண்கள்…எல்லோருக்குமே
பங்கு உண்டு.
முதல்ல சீனர்களும், ஜப்பானியர்களும் நேரம் என்பது அவ்வளவு முக்கியம். அது
அடிமட்ட தொழிலாளர்கள் கூட இது விதிவிலக்கல்ல. பள்ளி பேருந்து
7.50 கு நிறுத்தத்திற்கு வரும் என்றால் கண்டிப்பாக அதே நேரத்திற்கு வந்து
நிற்கும். நிமிஷமா ஏறி உடனே காணாமல் சென்று
விடும். டிரெயினும் இதே வந்து சேரும் நேரம் 2.30 என்றால் கண்டிப்பாக 2.25 முதல் 2.28 வந்துசேர்ந்துவிடும். அது புல்லட் டிரெயின், மெட்ரோ ரெயிலிலும் ,பேருந்திலும்
கூட இதே நடைமுறை தான். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தால்
உடனே வரிசையில் நிற்கும் வழக்கம், ரயில், பேருந்து எல்லா இடத்திலும் தாழ்னிலை தளம் தான், கண் தெரியாதவர்களுக்கென்று
தனிபாதைகள் , ஒரே இடத்தில், நகரங்களில்
கூட்டம் குவிவதை தடுக்க 3 தர, 4 தர வரிசைபடி ஊர்களை விரிவாக்கி விமான மற்றும்,
தரைவழி ,மெட்ரோ ,என்ற எல்லா
வசதிகளையும் செய்து குடுத்து பின் தொழில் துடங்குபவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு எல்லாவித
வசதிகளையும் செய்து தருகிறது அரசாங்கம். எல்லா கிராமங்களையும்
அதிவிரைவு சாலைகளால் இணைத்திருக்கிறது.
70 வருட லீஸ் என்ற கையொப்பம் இட்டவுடன் அவர்கள் நடவடிக்கையில்
துளிகூட குறுக்கீடு இல்லை என்பது 100% உண்மை. எல்லோருக்கும் 100 சதவிதம் கல்வி என்ற திட்டத்தை முன்னிறுத்தி செயல் பட்டுகொண்டிருக்கிறது
சீனா. தொலை தொடர்பு, கட்டிட கலையிலும் சீனா
இப்போது எல்லா நாடுகளுக்கும் சாவால் விட்டு கொண்டிருக்கிறது. மைனஸ் 20 டிகிரியிலும் வேலைக்கு வர தயங்காத பணியாளர்கள்,
வாங்கும் சம்பளத்திற்கு உழைப்பை கொட்டும் உழைப்பாளர்கள் இவர்களால் தான்
சாத்தியம் ஒரு நாடு வல்லரசு பாதையில் போவதற்கு. பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து
அசுர வேகத்தில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது சீனா. செய்யும்
வேலைகளை தவறு இருந்தால் தாட்சண்யம் பார்க்காமல் எடுக்கும் நடவடிக்கை, டாக்ஸி ஓட்டுனர்கள் நான்கு தடவைக்கு மேல் அனுமதியில்லாத பார்க்கிங்கில் நிறுத்தினால்
கூட அடுத்த வருடம் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டங்கள்.
நாட்டு பற்று அளவுக்கதிகம். இந்த மக்களிடம்.
சுற்றுலாதுறையிலிம் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனா.
திபெத் மலைபாதையில் டிரெயின் போக்குவரத்து வசதி செய்து 3 நாட்களில் இரயிலில் பெய்ஜிங்கிலிருந்து திபெத் சென்று விடலாம். அந்த ரயில் பாதை அமைத்தது எல்லா நாடுகளையும் பெருமுச்சு விடசெய்தது.
ஏனெனில் உருகும் பனிகட்டி, 4 மணிக்கு மேல் இருட்டு
போர்வை போர்த்திகொண்டிருக்கும் வழிபாதைகள், இரொப்பிய நிறுவனத்திடம்
மலைபாதை அமைக்கவேண்டும் என்று கூறியபோது அந்த நிறுவனம் சாத்தியமே இல்லை என்ற சொல்லை
ஒரு உத்வேகத்தோடு எடுத்துகொண்டு மலைபாதையில் ரயில் பாதை அமைத்து
சாதனை புரிந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதோடு மட்டுமன்றி
எல்லா வேலைகளையும் திறம்பட செய்ய இந்த மக்கள் முயற்சித்து வருகிறார்கள். -20
ல் கூட ஒரு ஷார்ட்ஸ் போட்டுகொண்டு தன்னுடைய பயிற்சியை செய்துகொண்டிருப்பார்கள் இளைஞர்கள்.
இதெல்லாம் நமக்கு சாத்தியமானால் நமது வல்லரசு கனவும் சாத்தியமாகும்.
No comments:
Post a Comment