Bhaag Milkha Bhaag இயக்குநர் ராகேஷ் மெஹ்ரா .
400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றியை நிலை நாட்டிய ஒரு வீரனின் உண்மை கதை. இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையின் போது எடுத்த நிகழ்வுகள், பணமில்லாமல் சாதித்த ஒரு வீரனின் நிகழ்வு வலிகள் சுமந்தவை, பெருமைக்குரியவை. பிளேபாய் வேடத்தில் கலக்கிய ஃபர்ஹான் இதில் மில்காவாக வாழ்ந்திருக்கிறார். அடடா என்ன அற்புதமான நடிப்பு. மனிதர் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார். கர்ணன் என்றால் உடனே நம் கண்களுக்கு முன் வருவது நடிகர் திலகம் தான். அதே போல மில்கா என்றால் இப்போது கண்டிப்பாக நம் கண்ணிற்க்கு முன் தெரிவது ஃபர்ஹானாகத்தான் இருக்கும்.
இந்த படத்தை பார்த்த உடனாவது கிரிக்கெட் மட்டுமே விளையாட்டில்லை என்ற நிலை வந்தால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஒரு ஊக்கமளிப்பதாக இருக்கும். மில்கா சிங் உலகளவில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆனால் ஒலிம்பிக்கில் மட்டும் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் பிளையிங் சீக் என்று பாகிஸ்தான் அதிபரிடமிருந்து அவர்டு வாங்கியது பெரிமைகுரியது.
இது உன்னுடைய கடைசி ஓட்டமாக இருக்கும் என்ற கேலிக்கு மில்கா நான் ஓடுதும் கடைசி என்று எண்ணிக்கொண்டே தான் ஓடுவேன் என்று சொல்லுவது பளிச். இன்னும் நினைவலைகளில் சில தினங்களுக்கு மில்காவும், ஃபர்ஹானும் வந்து போவார்கள். இந்த படத்தில் டோக்கன் பணமாக திரு மில்கா சிங் வாங்கியது ஒத்தை ரூபாய்..
5 comments:
நல்ல ரிவியூ அக்கா.... சூப்பர்
Settings -> Post and Comments -> Show verification code -> no குடுங்க அக்கா, உங்க blogல கமன்ட் போட கஷ்டமா இருக்கு
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நன்றி டா காயூ..
நன்றி திண்டுக்கல் தனபாலல் கண்டிப்பாக பார்வையிடுகிறேன்..
Post a Comment