Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

2/24/2013

தமிழ் சீரியலில் பெண்கள்


சினிமா மவுசு குறைந்து பெருமளவு வீட்டு பெண்களை கட்டிபோட்ட பெருமை சின்னதிரை சீரியல்களையே சேரும். சின்னதிரை சீரியல்கள் பெரும்பாலும் மெகாசீரியல் ரசிக கண்மணிகளை பொறுத்து அமைகிறது. என் பசங்க அம்மா சீரியல் பாக்காதே ஒரு மாசத்திற்கு ஒரு தரம் பாத்தாகூட உனக்கு எல்லா கதையில் நிலவரமும் தெரிந்து விடும் என்று கலாட்டா செய்வார்கள். டில்லியிலிருந்த போதே சிரியலுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டேன். அலைகள், விடாது கருப்பு, கிருஷ்ண தாசி எல்லாரது மனங்களையும் ஒரு புரட்டி போட்டது. அடுத்து என்ன என்ற ஒரு பரபரப்பு சூழ்ந்து கொள்ளும். இப்போது கடவுளே, திருப்பம் என்ற பெயரில் பெண்களை இத்தனை கொடுமைகாரிகளாக சித்தரித்து கொண்டிருக்கிறது. குடும்ப பெண்கள் கொலைசெய்வார்கள்,  நினைத்தால் ஆள்களை ஏவிவிட்டு குண்டு வைப்பார்கள், இன்னும் என்ன எல்லாம் செய்ய வைக்க இந்த பெண்களை போகிறார்களோ  சின்னதிரை இயக்குநர்கள்.. என்ன வேண்டுமானால் செய்வார்கள் இந்த பெண்கள் என்று சித்தரிக்கும் சீரியல்களில் கடுகத்தனையும் உண்மை இல்லை. ஆனால் எப்படி இந்த பெண்கள் தன் இனத்தையே கேலிசெய்வதை பொறுத்துகொண்டு அதையும் தாண்டி பார்த்து இந்த சீரியல்களை வெற்றி பெற செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு புரியாத புதிராகவே உள்ளது. சீரியலுக்கும் வாழ்க்கைக்கும் முடிச்சு போடகூடாது என்று வாதம் இருக்குமானால் விஸ்வரூபம் பிரச்சினைக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியிருக்காதே. எல்லோருமே வாழ்க்கையோடுதானே இணைத்து பார்க்கின்றனர். ஒரு சீரியலில் ஒரு பெண்ணை தாவூத் இப்பராகிம் ரேஞ்சுக்கு வில்லியாக்கிவிடுவது தமிழ் சீரியல்களில் மட்டுமே சாத்தியம். சீரியலில் ஆண்களை விட பெண்களே அதிக வில்லிகளாக அவதாரமெடுக்கின்றனர். இன்னும் போனால் கால போக்கில் பின்லேடன் மாதிரி பயங்கரவாதிகளாக சீரியல் பெண்மணிகள் உருவாக இயக்குனர்கள் சிந்திக்கலாம். சீனாவில் பெண்கள் சீரியல் டிவி என்று வீணாக பொழுதை கழிப்பதில்லை. அவர்கள் நிறைய நம்மிலிருந்து வேறுபட்டு சிந்திக்கிறார்கள். எப்போதும் பரபர என்று இயங்கி கொண்டிருப்பதை பார்த்தால் மலைக்கதான் வைக்கிறது. ஒரு பெண் எல்லா வேலையும் செய்வாள். ஆண்களுக்கு நிகராக விளையாட்டரங்கிலும் வெற்றிகனி பறித்து கொண்டிருக்கிறார்கள்..பேருந்து ஓட்டுனர், டாக்ஸி,எல்லாவற்றையும் விட பிஸினஸில் கொடிகட்டி இந்த பெண்கள் பறக்கிறார்கள்.  நம் ஊரிலும் பெண்கள் தனது வீட்டைவிட்டு வெளியில் வந்து இன்னும் நிறைய சாதிக்கலாமே என்ற வருத்தம் இழையோடுகிறது.          

1 comment:

Unknown said...

தொலைக்காட்சி தாங்கி வரும் சீரியல்களைக் காட்டிலும் இந்த லைவ் ஷோக்கள் கொடுக்கும் டார்ச்சர் பெரிதினும் பெரிது.. அவ்வ்வ்


ஹா ஹா ... சொல்லவே இல்லை... சமீப நாட்களாக பிரேமாஞ்சலி தன்னந்தனிமயில் இசைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் போலே... வெளுத்து கட்டுறீங்க போல... )