Read more: http://www.techtrickhome.com/2013/01/prevent-duplicationdisable-copy-paste.html#ixzz2XgIBls2n

5/23/2013

எனது முதல் தாய்ச்சி வகுப்பு..


சில மறைக்க வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் பகிங்கரப்படுவது போல நேற்று ஒரு சம்பவம். இங்கு இருக்கும் நண்பர்கள் எப்போதும் 15 நாள்களுக்கொரு முறை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு, கும்மாளமிட்டு தான் திரும்புவார்கள். இந்த தடவை எல்லோரும் ஊருக்கு செல்ல இருப்பதால் அவசரமாக பைனல் பிராஜக்ட் வேலையில்  எல்லோரும் பிஸி. ஒருநாள் தாய்ச்சி பற்றிய பேச்சு வந்தது. தாய்ச்சி இங்கே சீனாவில் யோககலை மாதிரி .அதை நான் கத்துக்கலாம் என்று இருக்கேன் என்றதற்கு இது வயசானவங்க ரோட்டுல கை காலை ஆட்டி ஆட்டி பண்ணறது இது ஒரு உடற்பயிற்சி மாதிரி அதை போய் கத்துக்கபோறியா, அதுவும் நீயே நிறையா யோகா வகுப்பு எல்லாம் சென்றிருக்கிறாய்  என்று உடனே இங்கிருக்கும் குட்டிசாத்தான்கள் முற்றுபுள்ளி வைத்துவிட்டார்கள்.  எனக்கு எப்போவுமே வகுப்புக்களுக்கு செல்வதென்றால் ரொம்ப ஆர்வம். அதுவும் யோகா, தியான வகுப்புக்கள் என்றால் நானும், சி.பி. யும் இந்தியாவில் இருக்கும்போது எல்லா வகுப்புக்களுக்கும் சென்று விடுவோம். நீண்ட நாள்களுக்கு பின் என் சீன தோழி சுபா இந்த புதன்கிழமை ஒரு நாள் மட்டும் தாய்ச்சி வகுப்பு கலந்துக்கோ உனக்கு பிடிக்கலைனா அடுத்த வாரத்திலேருந்து வரவேண்டாம் நானும் உன்னை கட்டாயபடுத்த மாட்டேன் என்றாள் சரி போய்தான் பார்ப்போமே என்றூ நேற்று கிளம்பினேன்.இதுங்ககிட்ட ஒண்ணும் சொல்லலை. ஏன்னா ஒருநாளுக்கு எப்படி இருக்கு நு பார்த்துட்டு வந்துடுவோம் என்று சொல்லாமல் சென்றேன்.  இங்கே இருக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் எப்போதும் ஆராய்ச்சி கூடத்திற்கு சென்று விட்டால் போன் செய்யமாட்டார்கள். எதாக இருந்தாலும் மெசேஜ் தான் முகநூலில். அதனால் யாரும் நமக்கு கால் பண்ண மாட்டார்கள் என்று கிளம்பிவிட்டேன். அப்போது இந்த பக்கிங்கள்ள ஒன்னு என்னை கால் பண்ணியிருக்கு. உடனே என் பையன் அம்மா தாய்ச்சீ கிளாஸ் போய் இருக்கா என்றதும் உடனே எல்லா பக்கிங்களுக்கும் போட்டு குடுத்தாச்சு முதல் பக்கி. நான் வரும்வரை காத்துகொண்டிருந்துவிட்டு எல்லாத்துக்கும் விஷயம் பரவி சுபா தாய்ச்சி வகுப்பு எப்படி இருந்தது என்று ஒரே காலாய்பு. ஆனால் போனவுடன் தான் தெரிந்தது எதையுமே ஆராயமல் சொல்ல கூடாது நு, காலுடன் கையும் சேர்ந்து 4 திசைகளிலும் சுற்றி கையும், காலும் உடம்பின் எல்லா பாகங்களுக்குமான பயிற்சி. இதை இதுங்க கிட்ட சொன்னா நம்ப மாட்டேங்குதுங்க. 

5/22/2013

ஷின் நியான் குவாய்ல! சீன புத்தாண்டு.!

ஷின் நியான் குவாய்ல!  சீன புத்தாண்டு..

 சுபஸ்ரீ மோகன்

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்... அது, வசந்த காலம். ஆனால், சீன மக்களுக்கோ கசந்த காலம். 'நியான்' என்ற ஒரு காட்டு விலங்கு சீனாவில் ஒரு கிராமத்தின் மக்களை தினமும் இரவு நேரத்தில் தாக்கியது என்பது பழைய மரபுக்கதை. ஆடு, மாடு போன்ற விலங்குகள் மற்றும் தானியங்களையும் தின்று தீர்த்த அந்த விலங்கு, சின்னஞ்சிறு குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. அந்த ஊர் மக்கள், இரவு என்றாலே பயம் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தக் கொடுமையில் இருந்து தப்ப, ஒரு வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தனர். ஒரு நாள், சிறு குழந்தை அணிந்திருந்த சிவப்பு உடையையும், எங்கோ எரிந்துகொண்டிருந்த நெருப்பையும் கண்டு, நியான் பயந்து ஓடியதை மக்கள் பார்த்தனர்.

நியானின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவப்பு நிற உடைகளையும், நெருப்பையும் காட்டி அதை விரட்டினர்!

பின்னர், ஒவ்வொரு ஆண்டின் வசந்த கால தொடக்கத்திலும், சீன மக்கள் தங்கள் வீடுகளின் முன், சிவப்பு நிற கூண்டு விளக்குகளை வைத்து, சிவப்பு உடைகளையும் அணிய தொடங்கினர்.


இந்த கலாசாரம் தான், இன்றும் வசந்த கால பண்டிகையாகவும், வருட பிறப்பாகவும், கொண்டாடப்படுகிறது!

சீன புத்தாண்டு... ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்படி 12 விலங்குகளின் பெயரில் ஆண்டுகள் உள்ளன. இந்த ஆண்டின் பெயர் 'டிராகன்'.

சீன வருட பிறப்பை, இந்த ஆண்டு இன்று (ஜனவரி 23) தொடங்கி ஜனவரி 25 வரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

நாடே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. வீதி எங்கும் சிவப்பு வண்ண கூண்டு விளக்குகளின் அணிவரிசை, தோரணங்களின் அலங்காரம்!

சிவப்பு மலர்களையும், சிவப்பு வண்ணங்களில் நல்லதைக் குறிக்கும் வாசகங்களையும் கொண்டு, வீடு, தெரு, மற்றும் கடைகளை அலங்கரித்துள்ளனர்.

சிவப்பு வண்ணம் நெருப்பை குறிக்கும். ஆதலால், குழந்தைகளுக்கு பரிசுகள் கூட சிவப்பு நிற உறையில் வைத்து கொடுக்கப்படுகிறது. இந்த விழாவில், பாரம்பரிய நடனமான டிராகன் நடனம் மற்றும் வண்ண வானவெடி வேடிக்கையும் முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்தப் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், அமெரிக்காவில் கொண்டாடப்படும் நன்றி நவிலும் நாள், தமிழகத்தின் காணும் பொங்கல் பண்டிகையைப் போல இது குடும்பங்கள் ஒன்று சேரும் திருநாள் என்பதே.

வருடம் முழுதும் எங்கெங்கோ இருந்தாலும், சீன வருடப் பிறப்பின்போது குடும்பங்கள் ஒன்று சேர்ந்து விருந்துண்டு மகிழ்வது வழக்கம். இந்தத் திருநாளன்று எட்டு அல்லது ஒன்பது உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. எட்டு என்ற எண் - செல்வ செழிப்பையும், ஒன்பது என்ற எண் - நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

நகரத்தில் வேலை பார்க்கும் மக்கள், சீன புத்தாண்டின்போது தம் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வர்த்தகம் மற்றும் வணிக பரிமாற்றமும் பாதிக்கபடுகிறது.

இந்த விழா நேரத்தில், இந்தியாவின் தீபாவளியைப் போல், நாடே ஸ்தம்பித்து போகிறது. அரசாங்கமும் தனது விடுமுறை நாட்களை இந்த விழாவுக்கு ஏற்றார்போல் அறிவிக்கிறது.

சீனா மிக அதிகமாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதால், மற்ற நாடுகள் இதற்கேற்றார்போல் தம் வர்தக பரிமாற்றங்களை அனுசரித்துகொள்கின்றன.

இன்று உலகளவில் நாம் பிரமிக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. இந்நாட்டு மக்களின் உழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாசார ஒற்றுமைதான் நம் பிரமிப்புக்கு காரணம். சீனப் புத்தாண்டு, இந்த பழமையையும் கலாசார ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் ஷின் நியான் குவாய்ல... அதாவது, சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!



Posted Date : 17:01 (23/01/2012)Last updated : 15:01 (24/01/2012)

5/15/2013

கோடைகால அரண்மனை.






கோடைகால அரண்மனை.


இந்தஅரண்மனை 1750 இல்சியான்லாங்என்றஅரசரால்கட்டப்பட்டது. பல்வேறுபோர்களினால்சிதைந்தஇந்தமாளிகைபின்னர் 1873ம் ஆண்டுமீண்டும் புதுமைபடுத்தப்பட்டது. பேரரசி சிஷியின் 40வது பிறந்த நாளுக்கான பரிசாக, பேரரசர் குவாங்ஷீ வழங்கியதுதான் ஈ ஹ யுவான் மாளிகை.ஓருபூங்காவாகஇருந்தஇந்தஇடத்தைபேரரசிக்குபரிசளிக்க எண்ணி அதை சிறப்பாக வடிவமைத்தார் பேரரசர்குவாங்ஷீ. சிங்யீபூங்காவாகஇருந்தஇந்த இடமே பின்னர் கோடைக்கால மாளிகையாகமாற்றப்பட்டது.

பெய்ஜிங்கின்மத்தியபகுதியில்இருந்துஒரு 12 கிலோமீட்டர்தொலைவில்வடக்குதிசையில்உள்ளதுஇந்தபூங்கா. ஏரிமற்றும்பூங்காகளினால்சூழப்பட்டிருக்கிறதுஇந்தமாளிகை..இதைசுற்றிகுன்மின்ஏரியும்பலயுகங்களைகடந்தஇந்தமலையும்இருக்கிறது. முதலில்இதைசின்யியுவான்என்றுஅழைத்தார்கள். தெளிவானநீரலைகளின்பூங்காஎன்றும்அழைத்தார்கள். 19 நூற்றாண்டில்இதுகோடைகாலஅரண்மனைஎன்றுபெயர்சூட்டப்பட்டுள்ளது.

கோடைக்கால மாளிகையினுள்ளேஇருக்கும் குன்மிங் ஏரி, பீச் பழத்தின் வடிவத்தில்இருக்கிறது. மாளிகையின்மத்திய பாகத்தில் காணப்படும் 41 மீட்டர் உயர கோபுரம், புத்த ஊதுவத்திகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்தகோபுரத்தின்பக்கசுவர்கள்வவ்வாலின்இறக்கைகளை போன்ற அமைப்புடன் காட்சியளிக்கிறது. பீச் சீனாவில் நீண்ட வாழ்வினை குறிக்கும் அடையாள சின்னமாகவும், வவ்வால்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.
பேரரசி சிஷுவைமகிழ்ச்சிப்படுத்த, ஃபூ எனப்படும் மகிழ்ச்சி, லூஎனப்படும் செல்வம், ஷோ எனபது நீண்ட வாழ்க்கையையும் குறிக்குமாறு  இந்த பூங்கா அமைக்கபட்டிருக்கிறது. நெடிய வாழ்க்கை மலை எனப்படும் வான்ஷோ மலையின் அடிவாரத்தில் ஒரு ஏரியைகட்ட செய்தார்குவாங் ஷீ. இந்தமலையின்மேலிருந்துகுன்மிங்க்ஏரியைபார்த்தால்பீச் போலத் தெரியும். அந்தஏரியில் 17 வளைவுகள் கொண்ட ஒரு பாலத்தை காணலாம்.இந்த பாலத்தில் 540 சிங்கங்கள் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிங்கமும் வெவ்வேறு தோரணையில் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகேஆமை வடிவத்தில் குட்டி குட்டி தீவுகளை உருவாக்கினார் .. இந்த ஆமைகளும்நீண்ட வாழ்க்கை சின்னங்களாக கருதப்பட்டவையே.

ஏரியின் ஒரு கரையில் பிரம்மாண்டமான வெள்ளைப்பளிங்கு ஓடம்அலங்காரத்துடன்கம்பீரமாகநிற்கிறது. சீனத்துஅரசிகள்அங்கே உட்கார்ந்து டீ குடித்தபடிஇந்தஇயற்கைகாட்சியைரசித்தபடிஅமர்ந்திருப்பார்கள். சிலசமயங்களில்அவர்கள்ரசிக்கபடகுகளில்வீரதீரவிளையாட்டுகள்நடைபெறும்.ஏரிகளில்தண்ணீரில்ஏராளமானதாமரைமலர்கள்மலர்ந்திருக்கும்ரம்மியமானகாட்சிமனதைகொள்ளைகொள்கிறது..
இக்கோடைகால அரண்மனையின் எதிரில் குன்மிங் ஏரியும் உள்ளது.அதன் பக்கத்தில் 195 அடி உயரமுள்ல நீண்ட வாழ்நாள் குன்றில் மூன்று அடுக்கு மாளிகை உள்ளது.70,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அரண்மனை வளாகத்தில் அழகிய கட்டிடங்கள், பூங்காக்கள், மற்றும் கலை மண்டபம் இருக்கிறது.இந்த ஏரி முற்றிலும் செயற்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் இருந்த மண்ணை குன்றாக குவித்து அதன் மேல் இந்த அரண்மனையை கட்டியுள்ளார்கள்.கோடை அரண்மனை பூங்காக்களும் ஏரியும் சூழ்ந்த ரம்மியமான இடத்தில் சூரிய ஒளியில் மலர்களின் நறுமணத்தில் மாலை வேலைகளில் பேரரசர்கள் உலா போகும் இடமாகவும் இருந்தது.தோட்டகலை நிபுணர்கள் அழகிய நடைபாதை அமைத்து வண்ன வண்ண தாவரங்கள் பூக்களை பதியமிட்டனர்.  பாக்ஸ்ர் கலகத்தின்போது இந்த குன்றின் மேல் இருந்த அரண்மனையை பிரான்சும், இங்கிலாந்தும் தாக்கியது.1886-1902 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டது.

கோடைபூங்காவின்அழகேஅதைசுற்றியிருக்கும்இயற்கைவளங்களானஏரி, மலைமற்றும்பூங்கா தான். கோடைகாலமாளிகையை 4 பாகங்களாகபிரிக்கலாம். தர்பார்பகுதி, முன்மலைபகுதி, பின்மலைபகுதிமற்றும்ஏரிபகுதி.தர்பார்பகுதிஇந்தஅமைப்பின்வடகிழக்குதிசையில்உள்ளது. அரண்மனைவாயில்கிழக்குவாயிலில்லிருந்துகுன்மின்ஏரியின்வடகிழக்குகரைவரைஅமைந்துள்ளது.  இங்கேதான்குவான்சூசக்ரவர்த்தி, அவரின்ராணி, அரசுஅலுவலர்கள்எல்லோரும்அரசவிவாதங்கள், சிலமுக்கியநிகழ்வுகளில்கலந்துகொண்டனர்.அரண்மனையில்வேலைசெய்பவர்களும்இங்கேதான்வசித்தனர். அவர்களுக்கென்றுதனிஇடம்இருந்தது. .
உலகத்தின் சிறந்த பூங்காக்களில் ஒன்றான கோடைக்கால மாளிகை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.
நீண்ட வாழ்நாள் குன்றின் மேல் டோபோ கிளேஸ்டு பகோடா என்ற புத்தர் கோயில் உள்ளது.1998 டிசம்பர் யுனெஸ்கோ இந்த கோடைகால மாளிகையை உலக பழக்கால மாளிகை என்று அறிவித்தது.

4/29/2013

ஷாங்காய்

பெய்ஜிங்லிருந்து ஷாங்ஹாய் புல்லட் டிரெயினில் மணிக்கு 320 கிலோமீட்டரில் வேகத்தில் 5 மணிநேர பயணம்… சீனாவின் புகழ் வாய்ந்த முக்கிய நகரங்களில் ஷாங்காயும் ஒன்று. சீனாவின் வணிக தலைநகரம் என்று கூட கூறலாம். முதல் முறை செல்வதால் எங்களுக்குள் ஒரு ஆவல் மற்றும் பதட்டமும் கூட. புல்லட் டிரெயின் பயணம் மிக அருமையாக இருந்த்து. அவ்வளவு வேகமாக செல்கிறது என்று டிரெயினில் இறுக்கும் டிஜிடல் போர்ட் பார்த்து தான் தெரிந்துக்கொண்டோம். கோப்பை நிறய காபி அல்லது டீ இருந்தாலும் ஒரு துளி கூட சிந்தவில்லை. இன்னொரு முக்கிமான சௌகர்யம் என்னவென்றால் இந்த அதிவேக ரயில் வண்டியில் மொபைல் ஃபோன் உபயோகிக்கலாம். விமானத்தில் தான் ஃபோனை ச்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். ஒரு சிறு களைப்பும் இல்லாமல் ஷாங்ஹாய் வந்து சேர்ந்தோம்.
பொதுவாக ரயில் நிலயங்கள் போல் இருக்கும் என்று இறங்கிய எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இது என்ன ரயில் நிலயமா அல்லது தவறிபோய் விமான நிலையம் வந்து விட்டோமா என்று எண்ண தோன்றியது. அவ்வளவு சுத்தம் மற்றும் நவீனமாக இருந்தது. டாக்சியை பிடித்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம். முன்னேற்பாடாக ஹோட்டலின் விலாசத்தை சீன மொழியில் செல் ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்தோம். நாங்கள் ஷாங்ஹாய் வந்தது மாலை நேரம். மாலை மற்றும் இரவு ஷாங்ஹாய் கொள்ளை அழகு. ஒரு நல்ல 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினோம். ஷாங்ஹாயில் என்ன பார்பது என்று ஒரு சின்ன பட்டியல் போட்டிருந்தோம்; கிட்டதட்ட இதில் உள்ள எல்லா இடங்களையும் பார்க்க துவங்கினோம். முதலில் ஷாங்காய் மியூசியம். அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் ஓரியண்டல் பியர்ள் டவர் என்கிற ஆயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தைந்து அடி உயரமுள்ள கோபுரம். இந்த கட்டிடம் ஹாங்ஃபூ நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 1991ம் ஆண்டு கட்டத் துவங்கி 1995ல் முடிக்கப்பட்டபோது ஆசியாவிலேயே முதல் பெரிய கோபுரமாகவும், உலகில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. கண்ணாடித் தரையுடன் கூடிய அறையிலிருந்து நிலப்பகுதியை பார்க்கும்பொழுது ஆஹா என்ன ஒரு அழகு என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. கீழ்த்தளம் 863 அடி உயரத்திலும், மிக உயர்ந்த தளம் 1148 அடி உயரத்திலும் இருக்கிறது.

ஷாங்காய் வேர்ல்ட் பைனான்சியல் சென்டர் என்கிற கட்டிடமும் 1614அடி உயரம். இந்தக் கட்டிடம் 1997ல் கட்டத்துவங்கி 2008ல் முடிக்கப்பட்டது. உலகின் மூன்றாவது உயரமான கட்டிடமாக இருக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான நான்ஜிங் ரோடு ஐந்து முதல் ஆறு கிலோமீட்டர் நீளமுடையது. வாணிக தளமான கிழக்கு நான்ஜிங் ரோடு ஹாங்ஃபூ மாவட்டத்திலும், ஐரோப்பிய நாகரீகம் நிரம்பிய மேற்கு நான்ஜிங் ரோடு ஜிங்யான் மாவட்டத்திலும் இருக்கிறது. அடுக்கு மாடி வணிக வளாகத்தில். வீட்டு உபயோகப்பொருட்கள், தொலைதொடர்பு சாதனங்கள், புகைப்படக் கருவிகள், உடற்பயிற்சி சாதனங்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள் நகைகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், புத்தகம் அழகு சாதன பொருள்கள், , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப்பொருள்கள், சீனகுடைகள், எல்லாமே இந்த வணிக வளாகத்துக்குள் கிடைக்கிறது. சீனத்து பட்டு, சீன பாரம்பரிய உடைகள் என அப்போது திருவிழா கூட்டம் கூட்டம் மாதிரி ஜே ஜேனு இருக்கிறது. புண்ட். ஷங்காய் நகரின் மையத்தில் ஓடுகிற நதிகரையை ஒரு சமதளமாக மாற்றி அதன்மேல் கடைகள், பூங்காக்கள், அமைத்து அலங்கரமாக காட்சியளிக்கிறது. நான்ஜிங் வீதியும், பண்டு தெருவும் சேருமிடத்தில் ஷாங்காயின் முதல் கம்யூனிஸ்டு மேயரின் வெண்கலசிலை உள்ளது. வானாளாவிய கட்டிடங்கள் சுற்றிலும் வான் தழுவிய கட்டிடங்கள், இரவு நேர விளக்குகளின் ஒளியில் ஒரு சொர்க்கலோகமாக காட்சியளிக்கிறது.
ஷாங்காயின் கிழக்கில் ஜேடுபுத்தர் கோவில் உள்ளது. புத்தரின் சிலைகள் அமர்ந்த நிலையிலும், வலது கையில் தன் தலையை தாங்கிபிடித்தபடி ஒருகளித்த நிலையில் இருக்கும் புத்தர் தன் சாந்தத்தாலும்,எல்லோர் மனங்களையும் வசிகரிக்கிறார். மலைமுகடுகளிலும், இங்கு ஏராளமான புத்தர் கோவில்கள் காணப்படுகிறது. கிழக்கு நாடுகளின் முத்துகோபுரம் புதாங் என்ற பூங்காவில் இருக்கிறது. 1536 அடி உயர இந்த கோபுரம் உலகின் மூன்றாவது உயர கோபுரமாகும். இந்த கோபுரத்தை பார்வையிட வசதியாக எலிவேட்டர் வசதியிருக்கிறது. இங்கு சென்று ஷாங்காயின் முழு அழகையும் கண்டு களிக்கலாம்.

லாங்மென் கேவ்

மத்திய சீனாவின் ஹெனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லெவுயாங் நகரில் அமைந்துள்ள லாங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது. லாங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈவு ஆறு ஓடுகின்றது.
எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனர்கள் செதுக்கினர். கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு புத்தரின் அருள் ஆசி கிடைக்கும் என்று நம்பினார்.

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் அதனால் புத்தரின் ஆசி கிடைக்கும் என்று பெய்வெய் வம்ச காலப் பேரரசர் முடிவு செய்தார். லாங்மன் என்னும் இடத்தில் கற்பாறை தரமானதாகவும் சிலைகள் செதுக்க உகந்ததாகவும் இருந்ததால் 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லாங்மன் குகைகளில் புத்த உருவங்கள் செதுக்கப்பட்டன. இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.493 A.D. நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளாக பெய்வெய் வம்சக் காலத்திலும் தொடர்ந்து தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன. இங்கு குகைகளுக்கு நடுவில் இருக்கும் சாக்கியமுனி புத்தாவும் அருகில் போதிசத்துவர்களின் சிலைகளும் இருக்கிறது. மேல்புர கூரை தாமரை வடிவங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து பெரிய புத்தரின் சிலைகளும், பக்கத்தில் போதிசத்துவரின் சிலைகளும், இருக்கிறது. வடக்குவெய் வம்ச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வம்ச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் சிறபக்கலையை ஆராய்வதற்கு இந்த தகவல்கள் உபயோகமாக உள்ளன.

லாங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளி நாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய வரலாற்று தகவல்களும் உள்ளன. இதனால், இது, பெரிய ரக மலை பாறைகளை குடைந்து கட்டப்பட்ட குகை கோவிலாகவும், அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லாங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
லாங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன. இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கும் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.

ஷாவ்லின்

ஷாவோலின் என்றால் நம் நினைவுக்கு வருவது குங்க்ஃபூ தான். சமீப காலத்தில் ஷாவோலின் கோவிலை பற்றி மக்களிடத்தில் மிக பரவலாக பேச படுகிறது. நாங்கள் பெய்ஜிங்கில் இருந்ததால், ஷாவோலின் கோவிலிற்கு செல்ல எங்களுக்குள் ஆவல் இருந்தது. சீனாவில் ஏப்ரல் மாதம் சிங்க் மிங்க் பண்டிகை என்பதால் எல்லோருக்கும் விடுமுறை. இதுதான் நல்ல வாய்ப்பு என எண்ணி ஷாவோலின் செல்ல தீர்மானிதோம்.
ஷாவோலின் கோவில் சீனாவின் ஹெனான் மாநிலத்தில் உள்ளது. ஷாவோலின் கோவிலிற்கு அருகில் உள்ள நகரம் ஜெங்க்ஷாவ். நாங்கள் பெய்ஜிங்கிலிருந்து முதலில் ஜெங்க்ஷாவ் சென்றோம். ஜெங்க்ஷாவ் சீனாவின் இரண்டாம் வரிசை நகரம் என்பதால் இங்கு விமான நிலயம் எப்படி இருக்குமோ என்று அஞ்சிக்கொண்டிருந்தோம். ஜெங்க்ஷாவ் விமான நிலயம் சேர்ந்த்த பின்பு எங்களால் வியாக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு சிறிய நகரத்தில் என்ன ஒரு பிரம்மாண்டம். விமான நிலயம் மட்டுமில்லாமல் நகரமே மிக அழகாக இருந்தது. சீனா எனும் வல்லரசின் தொலை தூர பார்வையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஜெங்க்ஷாவ் நகரத்தின் ஒரு விடுதியில் தங்கினோம் அங்கு மறுநாள் ஷாவோலின் செல்வதற்கு ஒரு காரும் ஏற்பாடு செய்து கொண்டோம்.
ஹோட்டலில் எங்களுக்கு சுற்றுலா புத்தகத்தை கொடுத்தார்கள். இது ஆங்கிலத்தில் இருந்ததால் எங்களுக்கு ஒரே சந்தோஷம். ஹோட்டலில் ஆங்கிலம் பேச கூடிய ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். நேராக பார்பதற்கு முன் சுற்றுலா புத்தகத்திலிருந்தும் மற்றும் வழிகாட்டியிடமிருந்தும் பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். அதில் சில தகவல்கள் இதோ.
ஷாவோலின் கோவில் ஷாவோஷி எனும் மலைக்கருகில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி உள்ள மலையும் மற்றும் காடும் இதற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கின்றன. ஷவோ என்பது ஷாவோஷி மலையையும், லின் என்பது காடையும் குறிக்கின்றன. ஷாவோலின் என்றால் ஷாவோஷி மலைக்கருகில் இருக்கும் காட்டில் உள்ள கோவில் என்று பொருள். 1500 ஆண்டுகளுக்கு முன்பே உள்ள ஒரு பழைமையான பாரம்பரியமிக்க கலை. குங்பூ .ஹானான் டெம்பிளில் ஷவோலின் துறவிகளால் இந்த குங்பூ கலை பயிற்சி கூடம் நடக்கிறது. இங்கு பல மாணவர்கள் தங்கி தற்காப்பு கலையை படிக்கின்றனர்.
சீன மொழியில் வூஷூ என்றால் ராணுவ சண்டை கலை என்று பொருள். வூ என்பது ராணுவத்தையும் ஷூ என்பது திறமையும் அல்லது வழிபாட்டையும் குறிக்கின்றன. சீன சண்டை கலை என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்தது. குங்ஃபூ தான். இங்கு கடினமான பயிர்ச்சியால் மேல் நிலை அடையும் எந்த திறமைக்கும் குங்ஃபூ என்று பெயர். வூஷூ கலையில் அகத்திற்குள்ளும், உடம்பிற்கு வெளியில் மிக கடினமான பயிற்சி, மற்றும் மன ஒருமைபாடும் மிகவும் முக்கியமானதாகும் இதில் பல பிரிவுகள் உண்டு. யோக கலையை உள்ளடக்கிய பயிற்சி முறைகளும் உண்டு. புத்தமதம் இங்கு பரப்புவதற்காக
வெய் வம்சவழி அரசர் இந்த கோவிலை கட்டினார். புதாவ் என்றழைக்கப்படும் புத்தபத்ரா என்ற இந்திய துறவிக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த கோவில் கட்டப்பட்டது.. அதன் பின் மற்றொரு துறவி போதிதர்மர் என்று அழைக்கப்படும் துறவி இங்கு வந்து ஒன்பது ஆண்டுகள் தங்கி ஒரு குகையில் தியானம் செய்துள்ளார், அப்போது அந்த குகையின் மேல் வெயிலே படாமல் இருந்ததாகவும், இன்றும் அந்த குகை இருக்கிறது. இந்த கோவிலின் வாயிலில் போதிதர்மரது சிலை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. சென் புத்த மதத்தினை பரப்பினார். இங்கு துறவிகளுக்கு தற்காப்பு கலையையும் போதித்தார்.
அங்கே நாங்கள் பார்த்த கோவில், போதிதர்மரின் குகை, பகோடா வனம் என அழைக்கபடும் புத்த விகாரம் மற்றும் மலை எல்லாம் மிக அழகாக இருந்தது. அனால் எல்லாவற்றிற்கும் மேலானது ஷாவோலின் கோவிலின் குங்க்ஃபூ தற்காப்பு கலைதான். இதை மிக அழகாக ஒரு கலை அரங்கத்தில் சிறு வயது மாணவர்கள் செய்முறை விளக்கத்தை பயிற்சி செய்து காட்டினார்கள். ஒரு சிறு குண்டூசியினால் ஒரு கண்ணாடி பலகையில் ஒரு சின்ன ஓட்டையை போட்டு அதற்கு அந்தபுறம் இருக்கும் ஒரு பலூனை உடைத்து காண்பித்தார் ஒரு மாணவர். குருகுலவாசம் இருந்து பயிலும் கலை தான் இந்த குங்க்ஃபூ தற்காப்பு கலை. இது எவ்வளவு கடினம் என்பதை காண்பிக்க பார்வையாளர் சிலரை இந்த கலயை மாணவர்களுடன் செய்து காண்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்கள். மாணவர்கள் மரத்தைஅழுத்தி தனது விரலை பலப்படுத்தி கொண்டதற்கு மரங்களின் மேல் குழி, குழியா விழுந்திருக்கும் அடையாளமே சாட்சி. எல்லோரும் அது சும்மா மரத்தில் உளி கொண்டு செதுக்கியிருப்பார்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். பின் அந்த மாணவர்கள் சில பயிற்சிகள் செய்து காட்டியபோது அது நிஜம்தான் என்று எண்ண வைத்தது.
சீன மொழியில் வூஷூ என்றால் ராணுவ சண்டை கலை என்று பொருள். வூ என்பது ராணுவத்தையும் ஷூ என்பது திறமையும் அல்லது வழிபாட்டையும் குறிக்கின்றன. சீன சண்டை கலை என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்தது. குங்ஃபூ தான். இங்கு கடினமான பயிர்ச்சியால் மேல் நிலை அடையும் எந்த திறமைக்கும் குங்ஃபூ என்று பெயர். வூஷூ கலையில் அகத்திற்குள்ளும், உடம்பிற்கு வெளியில் மிக கடினமான பயிற்சி, மற்றும் மன ஒருமைபாடும் மிகவும் முக்கியமானதாகும் இதில் பல பிரிவுகள் உண்டு. யோக கலையை உள்ளடக்கிய பயிற்சி முறைகளும் உண்டு.
அந்த கலையை பார்த்தவுடன் எங்களுக்குள் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியதை உணர்ந்தோம். போதிதர்மரின் சிலையிடம் விடைபெற்று கொண்டு சீன தலை நகரம் திரும்பினோம். ஷாவோலின் கோவிலின் குங்க்ஃபூ தற்காப்பு கலையின் அந்த பிரமிப்பும் மற்றும் அந்த வேகமும் அழகும் எங்கள் கண் முன்னே தோன்றி கொண்டிருந்தது. இதை ஒரு இந்தியன் குறிப்பாக தமிழன் தான் துவக்கி வைத்திருக்கிறான் என எண்ணும் போது பெருமை படாமல் இருக்க முடியவில்லை.

சீன பெருக்சுவர்.

சீன நாட்டின் பண்பாட்டையும், சுமார் 2000 வருட பாரம்பரிய பெருமையும், புகழையும் தன்னகத்தே கொண்டது இந்த சுவர். சீனப்பெருஞ்சுவர் ஷின் ஷீ ஹீவாங் டி என்ற பேரரசரால் அந்நிய நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தப்பிக்கவும் குறிப்பாக குதிரைபடைகள் இந்த சுவரை தாண்டி வருவதை தவிர்க்கவும் கட்டப்பட்டது. மிங் வம்ச காலத்தில் விரிவாக்கப்பட்டு ஹன் வம்ச காலத்தில் இதன் நீளம் பத்து ஆயிரம் கிலோ மீட்டரை தாண்டியிருக்கிறது.
போர் வீர்ர்கள், விவசாயிகள், குற்றவாளிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த நீள பாதை பெருஞ்சுவர் உயர்ந்த மலைதொடரிலும், சமவெளியில் உள்ள ஆபத்தான இடத்தையும் தாண்டி கட்டப்பட்டது. இரண்டு பக்க சுவர்களுடைய இந்த சுவர் நடுவில் ஏறுவதற்கு ஏதுவாக படிகளோடு கூடிய அமைப்புடன் இருக்கிறது. கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால் கீழே உள்ள இடங்கள் துல்லியமாக தெரியும். கீழ்தளத்தில் பீரங்கிகளும், துப்பாக்கிகளும் சுடுவதற்கு தோதாக துளைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு நிலையங்களும் வழிபாட்டு கோபுரங்களும் இருப்பதினால் அயல் நாட்டினரது படையெடுப்பு நடந்துவிட கூடிய தருணத்தில் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படும்
தீபத்தினால் தகவல்கள் பரிமாரப்பட்டு உதவிக்கான சமிஞ்சை தரப்படும் .சமிஞ்சை புகையை எரித்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு புகை என்றால் 100 எதிரிகள் என்றும் 2 புகை என்றால் 500 பேர் இருக்கலாம் என்ற சமிஞ்சை தரப்பட்டது. இந்த சமிஞ்சையின் மூலம் சுமார் 1000 கிலோமீட்டருக்கு செய்தி சென்று விடும். இந்த சுவருக்கு அடியில் பல போர்கள் நடைபெற்றதாக சரித்திரமும் உண்டு. இந்த சுவரை ஏராளமானோர் வந்து பார்வையிட்டுகொண்டுள்ளனர். இந்த பெருஞ்சுவர் ஷாங்காய்குவான் என்ற இடத்தில் கடலுடன் முத்தமிட்டு எல்லோரையும் கவர்ந்துகொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது சீனத்து சுவர்.

4/11/2013

வானவில்



வானவில்லின் வர்ணங்கள் நிலைமாறியதில்லை எப்போதும்
மனிதர்களின் நிறம் எப்போதும் மாறிகொண்டே ,மாற்றிகொண்டே..

அன்பு

உன்னுடைய நினைவுகள்
எப்போதும் இந்த பொக்கிஷங்களாய்


மனமென்னும் திரையினில்
அடைகாக்கபடுகிறது.
என்றாவது ஒரு நாள்
அது வெடித்து
கிளம்பும் விருட்சமாய்
விதைகளை தூவி விட்டு செல்லும்!!

3/13/2013

மெளனம்...


என்றாவது பார்க்கவிருக்கும்
சில மணிதுளிகளுக்கான எதிர்பார்ப்பில
கிளர்ந்துகொண்டிருக்கும் மனதை
நேரங்களை மரணித்தே கடக்கவேண்டிய
சில பொழுதுகள்
உன்னுடன் பேசவேண்டியதை
பேச எழாமல் போகும் நாளில்
மனதினில் ஒத்திகையிட்டு 
வார்த்தைகளை தேடிபிடித்து கோர்த்து
கொண்டிருக்க உடைந்துவிழும் வார்த்தைகளை
மெளனம் கொண்டு தடுக்க வெளிவராமல்
விழுங்கிய வார்த்தைகள் ஓர் ஆயிரம்

தோழி


என்னுயிர் தோழி எங்கே தொலைத்தாய் உன்னை
நித்தம் நித்தம் பல கதைகள்
கூடி கும்மாளமிட்டு வகைவகையாய்
பேச்சுக்கள் பேசி நக்கலும் நையாண்டியும்
நாவினில் நாட்டியமிட்ட நாட்கள் நினைவினில் வர
நீ மட்டும் இப்போது பேசா மடந்தையென
சிலையாகி போனாயே,  
ஏதோ நடந்திடுச்சோ பதருகிற மனசை
கடிவாளமிட்டு அடக்கிவிட என்ன வழி
தெரியலையே தேற்ற வகை அறியலையே !!

3/10/2013

மகளிர் தினம்






மகளிர் தினம் மகளிர் தினம் என்று
நாளிதழ்களில் விளம்பரம் இரண்டு நாட்களாகவே
சில இடங்களில் மகளிர் கருத்தரங்கங்கள்
பக்கம் பக்கமாக நடந்துகொண்டிருக்க
வசதியானவர்களை பேட்டி எடுக்க தொலைகாட்சி

போட்டியிட ,நாளிதழ்களும் முன்வழியை தொடர
நடுத்தரவர்கத்து கீதா மட்டும் காலையில் அவசரமாக
குடும்பத்திற்கான சமையலை செய்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்ப
இரவு நேரத்திற்கு என்ன செய்வது என்ற யோசனையில்
பஸ்ஸில் வீட்டிற்கு பயணம் ’
இன்னொரு மூலையில் நிஜாமாவே வந்துவிட்ட காய்சலால்
ஒரு நாள் விடுப்பு கேட்ட கண்ணம்மாவிற்கோ
வீட்டுக்கார அம்மாள் மகளிர் விழாபற்றி பேசவேண்டியுள்ளது
அதனால் இன்னிக்கு விடுப்பு கேட்காதே என்ற கத்தலுடன்
மறுத்தால் மாதசம்பளம் கைக்குவராதே
என்ற கவலையில் முனங்களுடன் பாத்திரம் தேய்க்கும்
கண்ணம்மாவிற்கும் கீதாவிற்கும் இப்படித்தான் கழிந்தது,மகளிர் தினம்!!  

3/01/2013

சீனா வல்லரசு பாதையில்.....


சீனா ஏன் வல்லரசு பாதையில்……

சீனா வல்லரசு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா, இந்தியர்களாகிய நாமும் எரிச்சலோடு பார்த்து கொண்டிருக்கிறோம். அந்த பாதையில் நடைபோட சீனாவிற்கு ஒத்துழைப்பு முழுமூச்சோடு தருவது இந்த மக்களின் அயராத உழைப்பு. வயதானாலும் தன்னால் ஆன வேலைகளை பார்த்து குடும்பத்திற்கு என்று தன்னாலான பங்கை அளிக்கும் வயதானவர்கள். 60 வயதிலும் தன்பேரனோடு பள்ளிசெல்லும் தாத்தா, பாட்டிகள்.,எல்லாதுறைகளிலும் தன்காலடிகளை பதிக்கும் பெண்கள். வீட்டில் வம்பு பேசிகொண்டிருக்காமல், சீரியல் எல்லாம் பார்த்து கொண்டிருக்காமல் வேலை, தொழில், அழகு கலை, வணிகதுறை என்று பறந்துகொண்டிருக்கும் பெண்கள்எல்லோருக்குமே பங்கு உண்டு.

முதல்ல சீனர்களும், ஜப்பானியர்களும் நேரம் என்பது அவ்வளவு முக்கியம். அது அடிமட்ட தொழிலாளர்கள் கூட இது விதிவிலக்கல்ல. பள்ளி பேருந்து 7.50 கு நிறுத்தத்திற்கு வரும் என்றால் கண்டிப்பாக அதே நேரத்திற்கு வந்து நிற்கும். நிமிஷமா ஏறி உடனே காணாமல் சென்று விடும். டிரெயினும் இதே வந்து சேரும் நேரம் 2.30 என்றால் கண்டிப்பாக 2.25 முதல் 2.28 வந்துசேர்ந்துவிடும். அது புல்லட் டிரெயின், மெட்ரோ ரெயிலிலும் ,பேருந்திலும் கூட இதே நடைமுறை தான். காலை நேரத்தில் கொஞ்சம் கூட்டம் இருந்தால் உடனே வரிசையில் நிற்கும் வழக்கம், ரயில், பேருந்து எல்லா இடத்திலும் தாழ்னிலை தளம் தான், கண் தெரியாதவர்களுக்கென்று தனிபாதைகள் , ஒரே இடத்தில், நகரங்களில் கூட்டம் குவிவதை தடுக்க 3 தர, 4 தர  வரிசைபடி ஊர்களை விரிவாக்கி விமான மற்றும், தரைவழி ,மெட்ரோ ,என்ற எல்லா வசதிகளையும் செய்து குடுத்து பின் தொழில் துடங்குபவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு எல்லாவித வசதிகளையும் செய்து தருகிறது அரசாங்கம். எல்லா கிராமங்களையும் அதிவிரைவு சாலைகளால் இணைத்திருக்கிறது.  70 வருட லீஸ் என்ற கையொப்பம் இட்டவுடன் அவர்கள் நடவடிக்கையில் துளிகூட குறுக்கீடு இல்லை என்பது 100% உண்மை.  எல்லோருக்கும் 100 சதவிதம் கல்வி என்ற திட்டத்தை முன்னிறுத்தி செயல் பட்டுகொண்டிருக்கிறது சீனா. தொலை தொடர்பு, கட்டிட கலையிலும் சீனா இப்போது எல்லா நாடுகளுக்கும் சாவால் விட்டு கொண்டிருக்கிறது. மைனஸ் 20 டிகிரியிலும் வேலைக்கு வர தயங்காத பணியாளர்கள், வாங்கும் சம்பளத்திற்கு உழைப்பை கொட்டும் உழைப்பாளர்கள் இவர்களால் தான் சாத்தியம் ஒரு நாடு வல்லரசு பாதையில் போவதற்கு. பெய்ஜிங் ஒலிம்பிக்கிலிருந்து அசுர வேகத்தில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது சீனா. செய்யும் வேலைகளை தவறு இருந்தால் தாட்சண்யம் பார்க்காமல் எடுக்கும் நடவடிக்கை, டாக்ஸி ஓட்டுனர்கள் நான்கு தடவைக்கு மேல் அனுமதியில்லாத பார்க்கிங்கில் நிறுத்தினால் கூட அடுத்த வருடம் அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டங்கள். நாட்டு பற்று அளவுக்கதிகம். இந்த மக்களிடம். சுற்றுலாதுறையிலிம் உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது சீனா. திபெத் மலைபாதையில் டிரெயின் போக்குவரத்து வசதி செய்து 3 நாட்களில் இரயிலில் பெய்ஜிங்கிலிருந்து திபெத் சென்று விடலாம். அந்த ரயில் பாதை அமைத்தது எல்லா நாடுகளையும் பெருமுச்சு விடசெய்தது. ஏனெனில் உருகும் பனிகட்டி, 4 மணிக்கு மேல் இருட்டு போர்வை போர்த்திகொண்டிருக்கும் வழிபாதைகள், இரொப்பிய நிறுவனத்திடம் மலைபாதை அமைக்கவேண்டும் என்று கூறியபோது அந்த நிறுவனம் சாத்தியமே இல்லை என்ற சொல்லை ஒரு உத்வேகத்தோடு எடுத்துகொண்டு மலைபாதையில் ரயில் பாதை அமைத்து சாதனை புரிந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதோடு மட்டுமன்றி எல்லா வேலைகளையும் திறம்பட செய்ய இந்த மக்கள் முயற்சித்து வருகிறார்கள். -20 ல் கூட ஒரு ஷார்ட்ஸ் போட்டுகொண்டு தன்னுடைய பயிற்சியை செய்துகொண்டிருப்பார்கள் இளைஞர்கள். இதெல்லாம் நமக்கு சாத்தியமானால் நமது வல்லரசு கனவும் சாத்தியமாகும்.     


2/27/2013

நட்பு

உன்மனம் உடையாமலும், புண்படாமலும் இருக்க
என்னால் எதுவும் செய்ய முடியாமல் போனாலும்
உனக்காக அழவும், உன்மனதை இதமாக வருடிக்கொடுக்க
என்னால் இயலும்...உடைந்த உன்மனதை
சரிசெய்ய, நீ மீண்டும் துளிர்விட.....